ஒருங்கிணைந்த பயணம், பெண்கள் குறித்த இணையதள படிப்பு
பிப்ரவரி 27-ஆம் தேதி ‘திரு அவையின் ஒருங்கிணைந்த பயணத்தில் பெண்களின் பணி’ என்ற தலைப்பில் புதிய வலைபக்கத் தொடர்களைக் கத்தோலிக்கப் பெண்களுக்கான அனைத்துலக அமைப்பு (WUCWO) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வலைபக்கத் தொடர்கள் கத்தோலிக்கப் பெண்களுக்கான அனைத்துலக அமைப்பினால், அதன் உலக மகளிர் கண்காணிப்பகம் வழியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வலைபக்கத் தொடர்கள் ஒவ்வொன்றிலும், அக்டோபர் 2023-இல் நிகழ்ந்த உலக ஆயர்கள் மாமன்றத்தின் 16-வது சாதாரண பொது சபையில் பங்கேற்ற இரண்டு பேச்சாளர்கள் இருப்பார்கள். அவ்விருவரில் ஒருவர் பொதுநிலையினர், மற்றொருவர் துறவு சபையைச் சேர்ந்தவராக இருப்பர். இந்த வலைபக்கத் தொடர்கள் திரு அவையின் ஒருங்கிணைந்த பயண முறையின் பயன்பாட்டை ஊக்குவிக்கும். குறிப்பாக, பெண்களின் முழு பங்கேற்பில் கவனம் செலுத்தும் என்று வத்திக்கான் செய்திக் குறிப்புத் தெரிவித்துள்ளது.
Comment