திருத்தந்தையின் மே மாதச் செபக் கருத்து
“இருபால் துறவறத்தார் மற்றும் அருள்பணித்துவ மாணவர்கள் அனைவரும் மனிதநேயம், மேய்ப்புப்பணி, ஆன்மிக மற்றும் குழும உருவாக்கப் பயிற்சிகள் வழியாக, அவர்களின் தனிப்பட்ட இறையழைத்தலில் வளர்வதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து இறைவேண்டல் செய்ய வேண்டும்” என்று மே மாதத்திற்கான சிறப்புக் கருத்தை வெளியிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், ‘ஒரு நல்ல அருள்பணியாளர் அல்லது அருள்சகோதரி ஓர் ஆணாக, பெண்ணாக, இறைவனின் அருளால் உருவானவராக, தனது சொந்த வரம்புகளை உணர்ந்தவராக, நற்செய்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட சாட்சியாக, இறைவேண்டல் வழி தனது வாழ்க்கையை நடத்தத் தயாராக இருக்க வேண்டும் என்றும், உருவாக்கப் பயிற்சி என்பது ஒரு குறிப்பிட்ட காலத்துடன் முடிவடைவதில்லை; மாறாக, அது வாழ்நாள் முழுவதும் தொடர்கிறது’ என்றும் திருத்தந்தை உரைத்துள்ளார்.
Comment