No icon

புதுமைகள் குறித்த புதிய விதிமுறைகள்

திரு அவையில் புதுமைகள் இடம்பெற்று நிகழும் போதும், மக்கள் அதை நம்பிக்கையில் நோக்கும்போதும் தலத் திரு அவை மற்றும் அகில உலகத் திரு அவை எத்தகைய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதைக் குறித்த ஆணையை நம்பிக்கை கோட்பாடுகளுக்கான திருப்பீடத் துறை, மே 19 அன்று வெளியிட்டுள்ளது. புதுமைகள் இடம்பெறும்போது தலத்திரு அவையோ, திருப் பீடமோ இதனை ஓர் இயற்கையை மீறிய அசாதாரண நிகழ்வு என்று அறிக்கையிடாமல், அதேவேளையில் பக்தி முயற்சிகளையும், திருப்பயணங்களையும் ஊக்குவிக்க முன்வர வேண்டும் எனவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், அந்தப் புதுமைகளை வைத்துப் பொருளாதார இலாபம் அடைய முயல்வது மற்றும் ஒழுக்க நெறிமுறைகளுக்கு எதிரான நிகழ்வுகளை ஊக்குவிப்பதைத் தவிர்க்க தலத் திரு அவைப் பொறுப்பாளர்கள் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. அந்தப் புதுமைகளைக் குறித்துச் சில குழப்பமான கூறுகள் வெளிப்படும்போது, உடனடித் தடைகள் மக்களின் நம்பிக்கைக்கு ஊறு விளைவிக்கும் என்பதால், தடைகளை மேற்கொள்ளாமல், அதேவேளை இத்தகைய நிகழ்வுகளை ஊக்குவிப்பதிலிருந்தும் ஆயர்கள் விலகியிருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. இந்த ஆணையானது மே 19 - ஆம் தேதி பெந்தக்கோஸ்து திருவிழா அன்றிலிருந்து நடைமுறைக்கு வருவதாக நம்பிக்கை கோட்பாடுகளுக்கான திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் விக்டர் தெரிவித்துள்ளார்.

Comment