இளையோருக்குத் திருத்தந்தை எழுதிய பதில் கடிதம்
உருமேனியாவில் உள்ள இலாசி மறைமாவட்ட இளைஞர்கள் திருத்தந்தைக்கு அனுப்பிய கடிதத்திற்குத் திருத்தந்தை பதில் கடிதம் அனுப்பினார். அக்கடிதத்தில் திருத்தந்தை கூறியது: ‘இளைஞர்களே! சமூக ஊடகங்களைப் பயன்படுத்துங்கள்; ஆனால், மெய்நிகர் வாழ்க்கை எனப்படும் இணையதள வாழ்க்கையிலேயே நிலைத்து நின்றுவிடாதீர்கள். மேலும், துணிவு மற்றும் படைப்பாற்றல் கொண்டு இணையதளத்தை இளைஞர்கள் பயன்படுத்த வேண்டும். நட்பு, அமைதி, இனம் மற்றும் கலாச்சாரத்திற்கு இடையிலான உரையாடல், குடும்பம், கிறிஸ்தவ விழுமியங்கள் போன்றவற்றை மேம்படுத்தும் சமூக வலைப்பின்னல்களை இளைஞர்கள் பயன்படுத்த வேண்டும். உலகை நோக்கிச் செல்லுங்கள்; உடன் வாழும் சகோதர, சகோதரிகளை நேரில் காணுங்கள். நம்பிக்கையைத் தாங்குபவர்களாக, பாலங்களைக் கட்டுபவர்களாக, உலகில் நன்மையையும், அன்பையும் விதைக்க உங்களிடம் உள்ள ஒவ்வொரு கருவியையும் பயன்படுத்துபவர்களாக இருங்கள். உண்மையான செல்வம் என்பது நேரடியான தொடர்பிலும், உறவிலும் உள்ளது’ என்றார். திருத்தந்தையின் பதில் கடிதம் கிடைத்ததை நினைத்து, இளைஞர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
Comment