No icon

பளு தூக்கும் வீரர் குருவாக...

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 21 வயதான வில் ஹெல்லர் பளு தூக்கும் வீரர். தற்பொழுது குருமாணவராகத் தன்னுடைய குருத்துவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். வில் ஹெல்லர் சிறு வயது முதலே பளு தூக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இரண்டு முறை ஜூனியர் தேசிய பதக்கம் வென்றவர். இவர் ஆன்மிகக் காரியங்களில் அதிகம் ஈடுபாடு இல்லாத கத்தோலிக்கர். இருந்தாலும், கல்லூரி படிக்கும்போது, மறைப்பணி சபையின் உறுப்பினரைச் சந்தித்தார். அவர் தங்களுடைய சபைக்குப் பணி செய்ய பலமுறை அழைப்பு கொடுத்தார். “ஞாயிறு திருப்பலிக்கு வருவது என்பதால் குருவாக மாற வேண்டும் என்ற கட்டாயம் இல்லைஎன்று சொல்லி மறுத்துவிட்டார். பின்னர் மறைமாவட்ட நற்கருணை மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு இந்த அழைப்பைப் புறக்கணிக்கக்கூடாது என்று 2023 -ஆம் ஆண்டு குருமாணவராகத் தன்னை இணைத்துக் கொண்டார். தற்பொழுது, இறையழைத்தலில் மிகவும் வேரூன்றியவராகத் தன்னைத் தயார்படுத்தி இருக்கின்றார். விரைவில் குருவாக அருள்பொழிவு பெற்று, பணி செய்ய ஆர்வமாக இருக்கின்றார்.

Comment