No icon

உங்கள் எலும்புகள்

பசும்புல் போல் வளரும்! (எசா 66:14)

இளையோரே! எலும்புகள் எல்லாம் நன்றாகத்தானே உள்ளன! இது நமக்குத் தேவையில்லை என்று விட்டு விடாதீர்கள். தயவுசெய்து இக்கட்டுரையை வாசிப்பதோடு விட்டு விடாமல், வாசித்து வாழ்வாக்க வேண்டும். துள்ளித்திரியும் இளமைப்பருவத்தில் எலும்புத் தேய்வு, எலும்பு மஜ்ஜையில் பிரச்சனை என்றெல்லாம் நினைத்துப் பார்க்கவும் பெரும்பாலும் நேரமிருக்காது. ஆனால், என் இளமைப்பருவத்தில் ஓர் இறைவார்த்தையை நான் பற்றிக்கொண்டிருந்தேன். ஏன் அதை எடுத்திருந்தேன் என்று தெரியவில்லை, பயன் தந்தது.

நிகழ்ச்சி: “என் அடி சறுக்குகின்றது என்று நான் சொன்னபோது, ஆண்டவரே! உமது பேரன்பு என்னைத் தாங்கிற்று” (திபா 94:18)

அடிக்கடி இந்த வார்த்தையை நினைவுக்கூர்வேன். ஒருநாள் என் தங்கை அருள்சகோதரி ஹிலாரியுடன் நானும், என் கணவரும் திண்டுக்கல் ஆயர் இல்லம் சென்றிருந்தோம். அங்கிருந்த புதிய சிற்றாலயத்தினுள் ஆலயப்பீடத்தில் புனித பேதுரு, புனித பவுல் ஆகியோரின் படங்கள் மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தன. அருகில் சென்று, புனித பவுலைப் பார்த்துக்கொண்டிருந்தேன். திடீரென்று என் கணவர் அழைக்கும் குரல் கேட்டது. வெளியே சென்று பதில் சொல்லலாமே என்று பீடத்திலிருந்து விரைந்து இறங்கி பளிங்கு தரையில் கால்வைக்கும்போது, தண்ணீர் கிடந்தது தெரியவில்லை. ஆனால், அடிச்சறுக்குகின்றபோது திபா 94:18ஐ சொல்லிக்கொண்டே விழுந்துவிட்டேன். அப்போது இடது கையைப் பிடித்து, கையிலிருந்த ஸ்பிரிங் உள்ள வாட்சை உருவி எடுத்துவிட்டு மயங்கிவிட்டேன். கண்விழித்து ஆஸ்பத்திரியில் கையைக் காட்டும்போதும், பிரஷரைப் பார்த்து ஆச்சரியப்பட்டு உங்களுக்குத்தானே விபத்து நேர்ந்தது என்று கேட்டார்கள். எல்லாமே நார்மல். அங்கு சிறிது கட்டுப்போட்டு விட்டார்கள். திரும்ப நாகர்கோவில் வந்து எலும்பை அதன் இடத்தில் திரும்பச் செய்து, மாவு கட்டுப்போட்டு ஒரு தழும்பு கூட இல்லாமல் கை பழைய நிலைக்கு வந்துவிட்டது.

அந்நிகழ்ச்சிக்குப்பின் என் செபப்பாணியை மாற்றியமைத்துக்கொள்கிறேன். “வாழ்வோரின் ஒளியில் கடவுள் முன்னிலையில் நான் நடக்கும் பொருட்டு என் அடிகள் சறுக்காதபடி காத்தீரன்றோ! (திபா 56:13ஆ).

நம் கடவுள் எலும்புகளை இறுதிவரை பாதுகாக்க வல்ல கடவுள் என்பதை நம்ப வேண்டும். அத்தகைய வாக்குறுதிகளை இடைவிடாது சொல்லி இறைவேண்டல் செய்ய வேண்டும்.

எலும்புகள் பேசும், அதுவும் கடவுளின் பாதுகாப்பைப் பற்றி சொல்வதைக் கேளுங்கள். “அண்டவரே உமக்கு நிகரானவர் யார்? எளியோரை வலியோரின் கையினின்றும் எளியோரையும் வறியோரையும் கொள்ளையடிப்போர் கையினின்றும் விடுவிப்பவர் நீரே” என்று என் எலும்புகள் எல்லாம் சொல்லும் (திபா 35:10). ஆம், ஆண்டவரின் பாதுகாப்பைப் பற்றி எலும்புகள் அறிந்திருக்கின்றன.

எலும்புகளுக்கு இறைவாக்குரைத்தும், எலும்புகளைப்பற்றிய இறைவாக்குகளைப் பற்றிக்கொண்டும் நம் எலும்புகளைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

எடுத்துக்காட்டாக எசேக்கியேல் 37 ஆம் அதிகாரம் முழுவதும் மிக அருமையானது.

“உலர்ந்த எலும்புகளே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்” என்று சொல். நான் இறைவாக்குரைக்கையில், உராயும் ஓசை கேட்டது. ஒவ்வொரு எலும்பும் தனக்குரிய எலும்புடன் சேர்ந்து கொண்டது. என் ஆவியை உங்கள்மீது பொழிவேன் நீங்களும் உயிர் பெறுவீர்கள்” (எசே 37:4,7,14). எனவே, எலும்பு நோயோ, எலும்புருக்கி நோயோ, எலும்பிலுள்ள (மேரோ (ஆயசசடிற)) மஜ்ஜையோ உலர்ந்து போனாலோ, படைத்தவரிடம் சரியான வாக்குறுதிகளை வைத்து செபித்தால் போதும். கூhந அயசசடிற டிக hளை bடிநேள அடிளைவ. அவர்கள் எலும்புகளின் சோறு உலரவில்லை (யோபு 21:24) இது மிக உன்னதமான வாக்குறுதி.

எலும்புகளில் பிரச்சனை உள்ளவர்கள் அதிலுள்ள வாக்குறுதிகளை வைத்து செபிக்க வேண்டும். “உன் எலும்புகளை வலிமையாக்குவார்” (எசா 58:11) என்பது எத்துனை அருமையான வாக்குறுதி பார்த்தீர்களா?

எலும்பு பசும்புல் போல் வளருமா?

படைத்தவரால் இத்தகைய அதிசயத்தைச் செய்ய முடியும். கடவுள் நமக்குத் தரும் வாக்குறுதிகள் நம்பத்தக்கவை.

“இதை நீங்கள் காண்பீர்கள். உங்கள் இதயம் மகிழ்ச்சி கொள்ளும்

உங்கள் எலும்புகள் பசும்புல்போல் வளரும்” (எசா 66: 14அ)

உடைந்த எலும்புகளுக்கு கட்டுப்போடும்போது எப்படி வளருகிறது? இந்த வாக்குறுதியில் சொல்லியுள்ளது போலத்தான். எனவே, எலும்புகள் தேய்வு, முறிவு போன்ற பிரச்சனைகளில் இருக்கிறீர்களா? இந்த வாக்குறுதியைவிடாது சொல்லிப்பாருங்கள் எனக்கும் இரண்டு மூட்டும் தேய்ந்துவிட்டது என்று மருத்துவர் சொல்லி, ஐந்து ஆண்டுகள் கடந்து சென்றுவிட்டன. நான் நம்பிக்கையோடு இருக்கிறேன். என் எலும்புகள் பசும்புல் போல் வளரும் என்பது என் நம்பிக்கை. காலூன்றி நிற்க வலுவிழந்தோர் கூடத் தாவீதைப்போலிருப்பர் (செக் 12:8).

வாக்குறுதிகளில் இது உன்னதமான வாக்குறுதி. ஏனெனில், தாவீது ஆண்டவரை நடனமாடிப் புகழ்ந்தார். அரசர் தாவீது ஆண்டவர் முன்பு குதித்து ஆடிக் கொண்டிருப்பதைக்கண்டு, அவரைத் தன் உள்ளத்தில் வெறுத்தாள் சவுலின் மகள் மீக்கால். அவளுக்குக் கிடைத்த தண்டனைத் தெரியுமா? சவுலின் மகள் மீக்காலுக்குச் சாகும்வரை குழந்தைப்பேறு கிட்டவில்லை (2சாமு 6:23). இந்த நிகழ்விலே இரண்டு உண்மைகள் இருக்கின்றன. தாவீது ஆடிப்பாடி இறைவனைப் புகழ்ந்தது கடவுளுக்கு விருப்பம். கடவுளது ஊழியரான தாவீது ஆடி மகிழ்ந்திருந்ததை வெறுத்ததால் மீக்காலுக்குச் சாகும் வரை மகப்பேறு கிடைக்கவிலை. உங்கள் குடும்பத்திலும் இத்தகைய சாபம் இருந்தால் மன்னித்துவிட வேண்டும், மன்னிப்புப் பெற்றுக் கொள்ள வேண்டும். அநேக குடும்பங்களில் குழந்தைப்பேறு கிடைக்காமலே ஆண்டுகள் பல கடந்து செல்கின்றன. அதற்கு ஏற்ற பரிகாரம் செய்வோம். ஆண்டவரை ஆடிப்பாடி புகழ்ந்து மகிமைப்படுத்துவோம். “அந்நாளில் எருசலேமில் குடியிருப்போருக்கு ஆண்டவர் அடைக்கலமாய் இருப்பார். அந்நாளில் காலூன்றி நிற்க வலுவில்லாதோர் கூடத் தாவீதைப்போலிருப்பர்” (செக் 12:8). எனவே தான், இது மிக உன்னதமான வாக்குறுதி எனச் சொல்லலாம்.

காலூன்றி நிற்கச் செய்தார்

வாழ்க்கையில் நாம் பலமுறைகளில் விழுந்துகிடக்கின்றோம். மயக்க நிலையில் இருக்கின்றோம். அப்போதெல்லாம் நம்மை எழுப்பிவிடச் செய்ய ஆற்றல்மிக்க இறைவார்த்தைகள் உண்டு.

“அவர் என்னுடன் பேசிக் கொண்டிருக்கையில், நான் தரையில் முகங்குப்புற விழுந்து மயக்கத்தில் ஆழ்ந்து கிடந்தேன். அவர் என்னைத் தொட்டு எழுப்பி என்னைக் காலூன்றி நிற்கச் செய்தார்” (தானி 8:18). பாவம் எனும் படுபாதாளத்தில் விழுந்து கிடந்தாலும், சேறு நிறைந்த பள்ளத்தில் வீழ்ந்து கிடந்தாலும் நம்மைத் தூக்கி நிறுத்தச் செய்ய வாக்குறுதிகளால் முடியும்.

“அழிவின் குழியிலிருந்து என்னை அவர் வெளிக் கொணர்ந்தார்;

சேறு நிறைந்த பள்ளத்தினின்று தூக்கியெடுத்தார்;

கற்பாறையின்மேல் நான்

காலூன்றி நிற்கச் செய்தார்;

என் காலடிகளை உறுதிப்படுத்தினார்” (திப 40:2)

தம் கையால் தூக்கி நிறுத்துவார்

என் கணவர் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி இது. ஒரு விபத்தில் இடது கால் காயப்பட்டுவிட்டது. எப்படியோ மிக நெருக்கடியான அந்த ஆப்பரேஷனில் நல்ல ஆயனாம் ஆண்டவர் சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கிலிருந்து காப்பாற்றி, உயிர் பிழைக்கச் செய்தார். ஆயினும், சரியாக நடக்க முடியவில்லை. வாக்கர் துணை தேவைப்பட்டது. அப்போது செபிக்க வந்த சகோதரி இந்த வாக்குறுதிகளைத் தந்தார் “தாம் உவகைகொள்ளும் நடத்தையைக் கொண்ட மனிதரின் காலடிகளை ஆண்டவர் உறுதிப்படுத்துகின்றார். அவர் விழுந்தாலும் வீழ்ந்து கிடக்க மாட்டார்கள்; ஆண்டவர் அவர்களைத் தம் கையால் தூக்கி நிறுத்துவார்” (திபா 37: 23,24). மிக அற்புதமான வாக்குறுதிகள் இவை. ஆம், வீழ்ந்து கிடக்க விடமாட்டார்; அவரே தம் கையால் தூக்கி நிறுத்துவார். மறுபடி ஒரு அறுவை சிகிச்சை நடந்தது. மீண்டுமாக என் கணவரால் நல்லபடியாக நடக்க இவ்வாக்குறுதிகள் உதவின.

எலும்புகளுக்கு இறைவாக்கு உரை

அநேகருக்கு இறைவாக்கின் மேன்மை தெரிவதில்லை, சொன்னாலும் புரிவதில்லை, அனுபவித்தால் மட்டுமே நம்ப முடியும். ஆனாலும், தேவை வரும்போது ஒருவேளை எங்கே வாசித்திருக்கிறோமே என்று தேடி எடுத்து வாக்குறுதிகளைச் சொந்தமாக்க மாட்டார்களா? என்ற ஏக்கத்தோடு தான் இவற்றைப் பதிவு செய்கிறோம். எசே 37:1-10 வரை கண்டிப்பாக வாசிக்க வேண்டிய பகுதி

“என் எலும்பு உமக்கு மறைவானதன்று;

மறைவான முறையில் நான் உருவானதையும் பூவுலகின் ஆழ் பகுதியில் நான் உருப்பெற்றதையும் நீர் அறிந்திருந்தீர்” (திபா 139:15)

நம் கால்களை மான்களின் கால்களைப் போல, அதுவும் பெண்மானின் கால்களைப்போல மாற்றுவதாக வாக்குறுதி:

“அவர் என் கால்களை மான்களின் கால்களைப்போல் ஆக்குகின்றார்;  உயர்ந்த இடத்தில் என்னை நிலை நிறுத்துகின்றார்” (திபா 18:33).

அதனையே அபகூக் ஆசிரியர், அபகூக் 3:19 இல் “ஆண்டவராகிய என் தலைவரே என் வலிமை, அவர் என் கால்களைப் பெண்மானின் கால்களைப்போலாக்குவார், உயர்ந்த இடங்களுக்கு என்னை நடத்திச் செல்வார்” என்கிறார்.

திரு அவையின் நம்பிக்கையும், பாரம்பரியமும் பாராட்டுக்குரியவை! புனிதர்களின் திருப்பண்டம் என்ற எலும்புத் துண்டுகளைப் பத்திரப்படுத்தி வைத்திருப்பது ஏன் தெரியுமா? அதற்கும் விவிலிய ஆதாரம் உண்டு என்பது தெரியுமா?

“மக்கள் இறந்த ஒருவனைப் புதைத்துக் கொண்டிருந்தபொழுது, அந்தக் கொள்ளைக் கூட்டத்தினரைக் கண்டார்கள். எனவே, அவன் பிணத்தை எலிசாவின் கல்லறையில் போட்டுவிட்டு ஓடினர். எலிசாவின் எலும்புகளின் மேல் பட்டவுடனே அந்த ஆள் உயிர்பெற்று எழுந்து நின்றான் (2 அர 13:21).

எனவே, அன்பார்ந்தவர்களே! எலும்புகளை வலுப்பெறச் செய்யவும், புல்போல் வளரச் செய்யவும் முடியும். எனவே, உங்களது தேவைக்கு ஏற்ற வாக்குறுதிகளைத் தேர்ந்தெடுத்து வாழ்வாக்குங்கள், பெற்ற பயனை பிறருக்கும் சொல்லிக்கொடுங்கள்.

Comment