No icon

மையப்பொருள் : நினைவாகச் செய்வோம்

அன்பியக் கூட்டம் - 136

பாடல்: ’இறைவனின் உடலிது அவரது இரத்தமிது’ (பாடு மனமே பக்கம் 139, பாடல் எண் 207)
தொடக்க வேண்டல்:
எல்லா நலன்களுக்கும் ஊற்றான இனிய தந்தையே உம்மைப் போற்றுகின்றோம். தன்னையே வழங்கி தரணியைக் காத்த இயேசுவே உம்மைப் போற்றுகின்றோம். வழிகாட்டியும் ஒளியூட்டியுமான தூய ஆவியாரே உம்மைப் போற்றுகின்றோம். ’நினைவாகச் செய்வோம்’ என்ற மையப் பொருளில் நாங்கள் தொடங்க இருக்கின்ற எங்கள் ....................................... அன்பியக் கூட்டத்திற்கு நீர் நிறைவாக ஆசியளித்தரும். உமது வாக்கினாலும் உம் திருமகனது திரு உடல், திரு இரத்தத்தாலும் ஊட்டம் பெற்ற நாங்கள் இன்றைய கூட்டத்தில் நேர் மனத்தோடு கலந்துபேசி, எங்கள் வாழ்வுக்கும் அடுத்திருப்போர் வாழ்வுக்கும் வலுச்சேர்க்கும் விதத்தில் செயல் திட்டங்களை வகுக்க உமது பேரருளைப் பொழிந்தருளும். இக்கூட்டம் எமக்கு உம் திருமகனது திருவுடல் திரு இரத்தம் பற்றிய உண்மையான, புதிய புரிதலைக் கொடுக்கும் விதத்தில் அமைவதாக, நாங்களும் எங்கள் அன்பியப் பகுதி மக்கள் அனைவரும் நற்கருணை திருஉணவு என்ற அருளடையாளத்தின் மீது நம்பிக்கையும் நீங்காத பற்றும் கொண்டு வாழ எங்களைத் தூண்டியருளும். எங்கள் ஆண்டவர் கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறோம்.
இறைவார்த்தை: லூக்கா 9:11-17
இறைவார்த்தைப் பகிர்தலுக்கு உதவியாக ஒரு நிகழ்வு
(சில ஆண்டுகளுக்கு முன் தாய்லாந்து நாட்டில் நடந்ததாக மரபு வழிச்செய்தி கூறுகிறது) அவள் 35 வயது இளம் பெண். வீடுகளில் பத்துப் பாத்திரம் தேய்த்து குடும்பம் நடத்தும் நிலை. திருமணமாகி ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன் அவளது கணவர் இறந்துவிடுகிறார். குழந்தைக்கு ஒன்றறை வயது. அவசரமாக வெளியூருக்கு போய்க்கொண்டிருக்கிறாள். கொளுத்தும் வெயில் நேரம். குழந்தைக்கு நல்ல பசி. மிகுந்த எதிர்பார்ப்புடன் குழந்தை கதறுகிறது. அவள் சிலவேளை சாப்பிடாததால் பால் இல்லா நிலை. பக்கத்தில் கிடக்கிறது பேரிச்சை முள், அதை எடுத்து தனது கை கட்டைப் பெருவிரலில் குத்துகிறாள். லேசாக இரத்தம் கசிறது. அந்த விரலை குழந்தையின் வாயில் வைக்கிறாள். குழந்தை உறிஞ்சிக் குடிக்கிறது. சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துவிட்டாள். குழந்தையின் பசி தீர்ந்துவிட்டது. தாயைத் தட்டிப் பயணத்தைத் தொட அழைக்கிறது. ஆனால் அந்தத்தாய் இறந்துவிட்டாள்.
சிந்தனை:
 பொன்னையோ பொருளையோ தருவதல்ல கிறிஸ்தவம்; தன்னையே தருவதுதான் கிறிஸ்தவம்.
    ஒரே மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மீது அன்பு கூர்ந்தார்" (காண். யோவா 3:16).
    நுரஉhயசளைவ என்ற வார்த்தையின் பொருள் ’நன்றி’ என்பதாகும். மன்னா அன்புக்கு அடையாளம்; மானிட மகன் இயேசுவின் உடல் அன்பின் நினைவுச் சின்னம்.
    இயேசுவின் திருஉடல் திரு இரத்தத்தைக் குறித்துப் பாடப்படும் ’பாடுவாய் என் நாவே பாடல் புனித தாமஸ் அக்குவினாஸ் எழுதியது.
    பசியுடன் இருந்த கழுதை புல்லை உண்ணாமல் நற்கருணையை வணங்கிய நிகழ்வு புனித அந்தோணியார் வாழ்வில் நடந்தது.
    மிகச் சிறுவயதிலேயே புதுநன்மை வழங்கப் பரிந்துரைத்ததால் திருத்தந்தை புனித பத்தாம் பயஸ் ’நற்கருணையின் திருத்தந்தை’ எனப்படுகிறார்.
    அருளடையாளங்களில் நற்கருணை மத்தி (ஊநவேசயட); பிற அனைத்தும் அதைச் சுத்தி என போற்றப்படுகிறது.
    வாசிக்க: யோவா 6:51-58, 1 கொரி 11:23-28, லூக் 22:14-23 (ஒத்தமை நற்செய்திப்பகுதிகள்)
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
1.    திருஅவையில் நற்கருணை பற்றிய சரியான புரிதல் விளக்கப்பட வேண்டுமென்று...
2.    புதுநன்மை எனப்படும் முதல் நற்கருணை பெறும் விழாவுக்கு மிகச் சிறந்த விதத்தில் தயாரிப்பு செய்ய வேண்டுமென்று...
3.    நற்கருணை விருந்தில் பங்கேற்கும் அனைவரும் நடமாடும் நற்கருணை பேழையாகத் திகழ வேண்டுமென்று...
4.    நற்கருணை பற்றிய மாநாடுகள், பயிலரங்குகள், தொடர் வகுப்புகள் நடத்தப்பட்டு அதன் மேன்மையை எல்லாரையும் அறியச் செய்ய வேண்டுமென்று...
திருப்பாடல்: 116: 4-12
பரிந்துரைக்கப்படும் செயல் திட்டங்கள்
1.    அன்பிய உறுப்பினர்கள் தங்களது நற்கருணை வாழ்க்கை வழியாகச் சான்று வாழ்வை வெளிப் படுத்துதல் (பகிர்தல், தியாகம், மன்னித்தல்...), தங்கள் குடும்பத்துப் பிள்ளைகளுக்கு நற்கருணை வாழ்வில்  சிறந்த பயிற்சி அளித்தல்.
2.    அன்பியத்தில் ’தெய்வீக உணவு’ என்ற குறும்படத்தைத் (தயாரிப்பு கூசூக்ஷஊஊஊ, திண்டிவனம்) திரையிடல்.
நிறைமன்றாட்டு
வாழ்வு வழங்கும் வானகத் தந்தையே, இன்றைய எங்களது அன்பியக் கூட்டத்தில் உம் திருமகனது உடல், இரத்தம் ஆகிய நிலைவாழ்வளிக்கும் திருஉணவு பற்றி பகிர்ந்து கொண்டோம். உம்முடைய உடனிருப்பு எங்களைச் சிறப்பாக வழி நடத்தியதை உணர்ந்து கொண்டோம். நாங்கள் கேட்பதற்கும் மேலாக எமக்கு வழங்கிவரும் அனைத்துக் கொடைகளுக்கும் இதய நன்றிகளைச் சமர்ப்பிக்கின்றோம். எங்கள்ஆண்டவர் கிறிஸ்து வழியாக - ஆமென்.

Comment