No icon

அன்புக் குழந்தைகளே!

அன்புக் குழந்தைகளே!
பொதுக்காலம் 24 ஆம் ஞாயிறான இன்று கொடுக்கப்பட்டுள்ள  மத்தேயு நற்செய்தியில் ‘மன்னிப்பு‘ என்ற உயரிய பண்பு அழகாகவலியுறுத்தப்பட்டுள்ளது.  இன்றைய நற்செய்தி யில் தமக்கு எதிராகக் குற்றம்செய்தோரை எத்தனை முறை மன்னிப்பது? என்று இயேசு விடம் அவருடைய சீடர் பேதுரு கேட்கிறார்.  அதற்கு இயேசு, ‘எழுபது தடவை, ஏழுமுறை‘ என்று சொல்கிறார். இதற்கு பொருள் எண்ணற்ற முறை நாம் மன்னிக்க வேண்டும் என்பதாம். இதனை விளக்குவதற்காக ஓர் உவமையைச் சொல்கிறார். பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கிய ஒருவன் செலுத்த வேண்டாம் என்று தள்ளுபடியை அதாவது மன்னிப்பை பெற்றுவிட்டு, தன்னிடம் பத்து ரூபாய் கடன் வாங்கிய ஒருவனுக்கு, ‘செலுத்த வேண்டாம்‘ என்று தள்ளுபடி செய்யாமல் அவனிடம் கடுமையாக நடந்து கொள்கிறான். இரக்கத்தைப் பெற்று அனுபவித்தவன் அந்த இரக்கத்தை பிறருடன் பகிர்ந்து கொள்ளவில்லை;மன்னிப்பு பெற்றவன் மன்னிப்பை பிறருக்கு வழங்கவில்லை. மன்னிப்பு - அது மிகச் சிறந்த  மனித பண்பு. நாமெல்லாம் தப்பு செய்துவிட்டால், ‘சாரி .. சாரி,, மன்னிச்சிடு..ப்ளீஸ்‘ என்று சொல்வது உண்டுதானே. அது வெறுமனே உதட்டிலிருந்து சொல்லாமல் உள்ளத்திலிருந்து சொல்ல வேண்டும். நாம் யாருக்கு எதிராக தவறு செய்தாலும் நாமாகவே நம்முடைய தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்க முன்வரவேண்டும். நம்மிடம் மன்னிப்பு கேட்பவரை நாமும் பெருந்தன்மையாக மன்னிக்க வேண்டும். நம்மை படைத்த கடவுள் நம்மை மன்னிப்பதால் நாமும் நமக்கு எதிராக குற்றம் செய்தோரை மன்னிக்க வேண்டும்.  ஆண்டவர் இயேசு கற்றுக் கொடுத்த  விண்ணுலுகில் இருக்கிற எங்கள் தந்தையே‘ என்ற செபம் அதனைத்தான் வலியுறுத்துகிறது. நாம் பிறரை மன்னிக்காவிட்டால் கடவுள் நம்மை மன்னிக்க மாட்டார். நீ உனக்கு எதிராக குற்றம் செய்தவரை மன்னிப்பாயா? தப்புச் செய்யும்போது மன்னிப்பு கேட்பாயா? 

சில கேள்விகள்
        நீ யாரையாவது மன்னிக்காமல் இருக்கிறாயா? ஏன்? 
        உன்னை வருத்தப்படுத்தியவர்களை மன்னியாதிருக்க உன்னைத் தடுப்பது எது? 
        நீ மன்னிப்பு ஏன் கேட்க வேண்டும்? 
        நீ தவறு செய்துவிட்டு யாரிடம் அண்மையில் மன்னிப்பு கேட்டாய்?
        உன்னை பிறர் மன்னித்தபோது நீ எப்படி உணர்ந்தாய்? 
        உன் உடன் பிறந்தவருக்கும் உனக்கும் உள்ள உறவு எப்படி உள்ளது?
        உன்னை மாதிரி புட்பால் விளையாண்டு பக்கத்து வீட்டு ஜன்னலை உடைத்து மன்னிப்பு கேட்கும் அந்தச் சிறுவனின் படத்தை அழகாக வரைந்து பார்ப்பாயா?
        எண்ணம் போல வண்ணங்கள் தீட்டுவோம். சுட்டிகளே..!. அடுத்தவாரம் மீண்டும் சந்திப்போம். Bye! See you!

Comment