No icon

ONLINE VBS CLASSES

VBS SONG - SING AND DANCE

வாருங்கள் வாருங்கள் குழந்தைகளே வாருங்கள்
பாருங்கள் பாருங்கள் யேசுவையே பாருங்கள்
கேளுங்கள் கேளுங்கள் நல்ல கதை கேளுங்கள்
யேசு தரும் அன்புச் செய்தி இன்று கேளுங்கள்

கேளுங்கள் தருவேனென்று சொன்னது நீர்தானே - நான்
கேட்கிறது உம் வார்த்தையே அதில்
உண்மையை உணர்ந்து கொண்டேன்
என்னோடு நீர் இருந்தால் ஆடிப் பாடி மகிழ்ந்திடுவேன்
என்னோடு நீர் இருந்தால் பாட்டுப் பாடி சிரித்திருப்பேன்
கொண்டாட்டம் உற்சாகம் இது நம்ம VBS

தேடுங்கள் கிடைக்குமென்று சொன்னது நீர்தானே - நான்
தேடியது உம் அன்பையே அதன்
ஆழம் புரிந்து கொண்டேன்
என்னோடு நீர் இருந்தால் ஆடிப் பாடி மகிழ்ந்திடுவேன்
என்னோடு நீர் இருந்தால் பாட்டுப் பாடி சிரித்திருப்பேன்
கொண்டாட்டம் உற்சாகம் இது நம்ம VBS

தட்டுங்கள் திறப்பேனென்று சொன்னது நீர்தானே - நான்
தட்டியது உம் வீட்டையே அதில்
இன்று குடி கொள்வேன்
என்னோடு நீர் இருந்தால் ஆடிப் பாடி மகிழ்ந்திடுவேன்
என்னோடு நீர் இருந்தால் பாட்டுப் பாடி சிரித்திருப்பேன்
கொண்டாட்டம் உற்சாகம் இது நம்ம VBS

 

VBS SONG - SING AND DANCE

Comment