No icon

குடந்தை ஞானி

வசாய் மருத்துவமனையில் ஆக்சிஜன் தயாரிக்கும் கருவி

ஒமிக்கிரான் தொற்றுக்கிருமியின் பாதிப்புகள் இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் வேளையில், இனம், மதம், மொழி என்ற பாகுபாடின்றி அனைத்து மக்களுக்கும் உதவும் நோக்கத்தில், ஆக்சிஜன் தயாரிக்கும் கருவியை வசாய் மருத்தவமனையில் தலத்திருவை பொருத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் தலத்திருவை நகரத்திலுள்ள, கர்தினால் கிரேசியாஸ் நினைவு மருத்துவமனையில் இக்கருவியைப் பொருத்தி துவக்கப்பட்ட வைபவத்தில் உரையாற்றிய, சமூக நீதிக்கான அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அவர்கள், சமுதாயத்திற்காக, குறிப்பாக ஏழைமக்களுக்காகத் திருஅவை தொடர்ந்து ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டினார்.
இவ்விழாவில் பேசிய வசாய் பேராயர் பெலிக்ஸ் மச்சாடோ அவர்கள், தலத் திருஅவையின் கட்டிடங்கள் நோயாளிகளைப் பராமரிக்கவும், தானியங்களைச் சேமிக்கவும் என அரசுக்கு வழங்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டு, நாட்டின் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து பணியாற்றி வரும் திருஅவையை ஒன்றிய அரசு எதிரியாக நோக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.
1950 முதல் 1978 ஆம் ஆண்டுவரை மும்பையின் பேராயராகப் பணியாற்றிய கர்தினால் வலேரியன் கிரேசியாஸ் அவர்களின் நினைவாக 1979 ஆம் ஆண்டு 20 படுக்கைகளுடன் தொடங்கப்பட்ட  கர்தினால் கிரேசியாஸ் மருத்துவமனை தற்போது 140 படுக்கைகளுடன், வறுமை நிலையில் வாடுபவர்களுக்கு, குறிப்பாக கொரோனா தொற்றுநோயாளிகளுக்குப் பணியாற்றி வருகிறது    
 

Comment