No icon

குடந்தை ஞானி

கேரளாவில் புதிய ஆயர்கள் நியமனம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அங்கீகாரத்துடன் கேரளாவில் டெலிச்சேரி உயர் மறைமாவட்டப்  பேராயராக, அதன் துணை ஆயர் ஜோசப் பாம்ப்ளனி அவர்களையும், பாலக்காட்டின் ஆயராக, அதன் துணை ஆயர் பீட்டர் கொச்சுபுருக்கால் அவர்களையும் சீரோ மலபார் வழிபாட்டுமுறைத் திரு அவை நியமித்துள்ளது.

டெலிச்சேரியின் பேராயர் ஜார்ஜ் ஞரலகட் அவர்களின் பணிஓய்வு விருப்பத்தை ஏற்றுக்கொண்ட சீரோ மலபார் திரு அவை, டெலிச்சேரியின் துணை ஆயராக இதுநாள் வரை செயல்பட்டு வந்த ஆயர் ஜோசப் பாம்ப்ளனி அவர்களை அம்மறைமாவட்டத்தின் பேராயராகத் தேர்வு செய்துள்ளது. 1969 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி பிறந்த புதிய பேராயர் ஜோசப் பாம்ப்ளனி, 2017 செப்டம்பர் முதல் டெலிச்சேரி உயர் மறைமாவட்டதின் துணை ஆயராகப் பணியாற்றி வந்துள்ளார்.

பாலக்காடு மறைமாவட்டத்தின் ஆயர் ஜேக்கப் மனதோடத் அவர்களின் பணி ஓய்வை ஏற்ற சீரோ மலபார் திரு அவை, அம்மறைமாவட்டத் துணை ஆயர் பீட்டர் கொச்சுபுருக்கால் அவர்களைப் பாலக்காடு ஆயராகத் தேர்வு செய்துள்ளது. 1964 ஆம் ஆண்டு மே 29ல் பிறந்த ஆயர் பீட்டர் கொச்சுபுருக்கால், 2020 ஆம் ஆண்டு ஜூன் முதல் பாலக்காட்டின் துணை ஆயராகப் பணியாற்றி வருகிறார்.

Comment