No icon

New Bishop

பரூய்ப்பூர் (Baruipur) மறைமாவட்ட ஆயராக, வாரிசுரிமை ஆயர்

பரூய்ப்பூர் (Baruipur) மறைமாவட்ட ஆயராக, வாரிசுரிமை ஆயர்

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் பரூய்ப்பூர் (Baruipur) மறைமாவட்ட ஆயர் சல்வதோரே லோபோ அவர்கள் ஓய்வுபெறுவதைத் தொடர்ந்து, அம்மறைமாவட்ட ஆயராக ஷ்யாமால் போஸ்  அவர்களை திருத்தந்தை பிரான்சிஸ் நியமித்துள்ளார்.

கடந்த ஆண்டு மே மாதம் பரூய்ப்பூர் மறைமாவட்டத்தின் வாரிசுரிமை ஆயராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்ட 60 வயதாகும் ஆயர் போஸ் அவர்கள், தற்போது அம்மறைமாவட்டத்தின் ஆயராக முழுப்பொறுப்பையும் ஏற்றுள்ளார்.

அத்துடன், மேற்கு வங்கத்தின் அசான்சொல்  மறைமாவட்டத்தின் ஆயர் சிப்ரியான் மோனிஸ்  அவர்கள் விடுத்துள்ள, ஒய்வு பெறுவதற்கான விண்ணப்பத்தையும் திருத்தந்தை பிரான்சிஸ் ஏற்றுள்ளார்.

Comment