அரசுகளே! சிறுபான்மை நிறுவனங்களைப் பாதுகாப்பீர்!
மக்கள் பணி என்ற ஒரே நோக்கில் மக்களுக்காய் அளப்பரிய பணிகளை ஆற்றிவரும் கிறித்தவ சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் இன்று மதவாதிகளால், குற்றவாளிகளால் தாக்கப்பட்டு வரும் நிகழ்வுகள் கண்டு தமிழக ஆயர் பேரவை பெருங் கவலை கொள்கிறது.
சேவை என்ற பெயரில் இயங்கும் நிறுவனங்கள் பல வணிகமயமாக்கப்பட்டு வரும் நிலையில், தம்மைத் துறந்து, துறவறம் பூண்டு சுயநலம் ஏதுமின்றி கிறித்தவத் துறவிகளால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் இன்று திட்டமிட்டு தாக்கப்படுகின்றன. சமூக விரோதிகள் மதவாத அமைப்புகளால் தூண்டிவிடப்பட்டோ, பலர்
இணைந்து பாதுகாப்பற்ற துறவியரை அடிப்பதும், அவமானப்படுத்துவதும் நிறுவனச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதும், இன்று அன்றாட நிகழ்வுகளாகி விட்டன. இன்றைய இந்திய சனநாயகமும், அந்த சனநாயகம் உத்திரவாதமளிக்கும் மதச் சார்பின்மையும் சட்ட பூர்வமாக பாதுகாப்பு அளிக்கும் காலத்திற்கு முன்பே, ஒடுக்கப்பட்ட மக்களைத் தேடித்தேடி சேவை செய்து வரும் சிறுபான்மைச் சமூகம் சார்ந்த பணியாளர்கள் இன்றைய சனநாயக சமய சார்பற்ற அரசின் கீழ் பாதுகாப்பாக இல்லை என்பதே உண்மை என்பதை மட்டும் மறுக்க முடியாது.
அண்மையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் என்னும் ஊரில் பாண்டிச்சேரி பிரான்சிஸ்குவின் இருதய அன்னை சபையின் (குஐழஆ) கத்தோலிக்க அருட்சகோதரிகளால் கடந்த 75 ஆண்டுகளாக நடத்தப்பட்டுவரும் சிறுமலர் மேல்நிலை பள்ளியொன்றில் ’சமூக விரோதிகள்’ நடத்திய தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்து. பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி முடித்த நிலையில் மாணவி ஒருவர் பள்ளி வளாகத்துக்குள்ளே தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வைக் காரணம் காட்டி, இத்தாக்குதல் நடத்தப்பட்டது.
மக்கள் தரும் பாதுகாப்பைத் தவிர்த்து,
வேறு எந்த பாதுகாப்பையும் நாடாமல் கல்விப்பணி ஆற்றிவரும் சகோதரிகளை அடித்தும், மிதித்தும்
நடத்தப்பட்ட வன்முறை கண்டிக்கத்தக்கது. உரிய நேரத்தில் போலிசாரும் துணைக்கு வரவில்லை. பள்ளி நிர்வாகிகள், ஆசிரியப் பெருமக்கள், அருட்சகோதரிகள், மாணவர் - மாணவியர்கள் தாக்கப்பட்டிருப்பதோடு, பள்ளியையும் சூறையாடி யுள்ளனர். வகுப் பறைகள்
தாக்குதலுக் குள்ளாகி யுள்ளன கோடிக்
கணக்கான ரூபாய்கள் மதிப்புள்ள பொருள்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
மேற்கண்ட வன்முறைகள் சிறுபான்மைச்
சமூகங்களை நிலைகுலைய வைத்துள்ளன. சன நாயகத்தின் முக்கியக்கூறாக சட்டத்தின் ஆட்சிதான் உள்ளது என்பர். இந்நிகழ்வில் சட்டத்தின் ஆட்சி
மிகக் கொடூரமாக மீறப்பட்டுள்ளது.இந்தியாவில் இப்படியான ஒரு நிகழ்வென்பது தனித்த ஒன்றல்ல. எப்போதோ நிகழும் நிகழ்வுகளுள் ஒன்று எனவும் கருதமுடியாது. தேர்தல் நெருங்கிவரும் நாள்களில் கூட இப்படியான வன்முறையொன்று மக்கள் பணியாற்றும் மதச் சிறுபான்மை
யினருக்கு எதிராக நடத்தப்பட்டிருக்கும் நிகழ்வுகள் இனியும் நடைபெறா வண்ணம் அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். எளிய நலிந்த பிரிவினரான அருட்பணியாளர்கள் கூட இச்சமூகத்தில் பாதுகாப்பாக இல்லை என்ற போக்கு இந்திய சனநாயகத்துக்கு அழகு சேர்க்காது. ஏற்கெனவே இந்தியாவில் கட்டமைக்கப்பட்டு வரும் வகுப்புவாத பகை அரசியல் போக்கில் வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு வரும் சூழலில், இம்மாதிரியான அராஜகப் போக்குகளை தடுத்திட அரசு உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டுகிறோம்; இச்சம்பவத்தைக் கண்டிக்கிறோம்.
Comment