No icon

Fr.ம. டைட்டஸ் மோகன்

மீண்டும் அடிமைப்படுத்தும் வேவு அரசியல் மோடி அரசுக்கு கைக்கொடுக்குமா?

 மீண்டும் அடிமைப்படுத்தும் வேவு அரசியல்

மோடி அரசுக்கு கைக்கொடுக்குமா? 

ஒவ்வொருவரும் மற்றவரை தங்கள் இருத்தலின் அச்சுறுத்தலாகப் பார்ப்பதும், சக மனிதரை ஒரு கிரிமினலாகப் பாவிப்பதும், திருத்த வேண்டும் என்கிற மனநிலையை விடுத்து குற்றம் சுமத்தித் தண்டிக்க வேண்டும் என்கிற பாணியில் கண்காணிப்பதும்… இன்று அரசியல், சமயம், பொருளாதாரம் என எல்லாத் தளங்களிலும் வளர்ந்து கொண்டிருக்கிறது. கண்காணிப்பிற்கு உதவுகிற விதமாய் புதுப்புது இயந்திரங்களும்  சந்தையில் அமோக விற்பனையில் உள்ளன.

நான் பணியாற்றும் நிறுவனத்தில் சமீபத்தில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்துகையில் இவ்வெண்ணம்தான் எனக்குள்ளும் மேலோங்கி நின்றது. கண்காணிப்புகள் தேவை தான். எதற்காக? எப்படி? என்பதுதான் தெளிவுப்படுத்தப்பட வேண்டும். 

மோடி அரசின் கண்காணிப்பு மசோதா

சமீபத்தில் மோடி அரசு, மத்திய உளவுத்துறை (Intelligence Bureau - IB) சிபிஐ, வெளிநாட்டில் நடப்பவற்றை உளவு பார்த்தறியும் ‘(Research and Anaylis Wing - RAW)  வருமான வரித்துறை உட்பட பத்து அரசு அமைப்புகளுக்கு கண்காணிக்கும் அனுமதியை வழங்கியுள்ளது. அதன்படி, இந்தியாவின் எந்த மூலைகளில் இருந்தும் செயற்படும் கணணிகளில் இருந்து வெளியேறும் மற்றும் அவற்றுக்கு உள்ளே வரும் எந்தத் தகவல்களையும் இடைமறிக்கவும், கண்காணிக்கவும், குறிப்பிட்ட கம்ப்யூட்டர்களில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் எந்தத் தகவல்களையும், தோண்டி எடுக்கவும் அனுமதி அளித்துள்ளது.

“நாட்டின் பாதுகாப்புக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் தான் இந்த கம்ப்யூட்டர்கள் கண்காணிப்பிற்கான தேவை. இது காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் உருவான திட்டம்தான்” என்கிறார் மத்திய நிதி அமைச்சர்

அருண் ஜெட்லி. எதிர்கட்சிகளோ இது இந்தியாவை ‘ஒரு போலீஸ் நாடாக’ மாற்றும் முயற்சி என்று குற்றஞ்சாட்டுகின்றன. “ஒவ்வோர் இந்தியனையும் ஒரு கிரிமினலாக மோடி அரசு பார்க்கிறது. அதன் விளைவுதான் இந்த உத்தரவு” என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி.

கணினிகளைக் கண்காணிப்பது என்பது உலகின் பல நாடுகளில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. எப்படி நடக்கிறது என்பதைத் தான் நாம் கவனித்துக் கடைபிடிக்க வேண்டும்.

மனித உரிமைகளை மதிக்கும், ஜனநாயகம் பக்குவம் அடைந்த நாடுகளில் இந்தச் செயலானது, நீதிமன்றங்களின் அனுமதி பெற்று, நீதிமன்றங்களின் மேற்பார்வையில் நடந்து கொண் டிருக்கிறது. இந்தியாவில் அது போன்று நடப்பதற்குச் சாத்தியமா?

ஆண்டாண்டு காலமாய்; தொடரும் அடிமைத்தனங்கள்

வரலாற்றைச் சற்றுப் புரட்டிப் பார்ப்போம். இந்திரா காந்தியின்  ஆட்சியில், அதாவது, 1975 ஜூன் முதல் 1977 மார்ச் மாதம் வரை கிட்டத்தட்ட 19 மாத காலம் அவசர நிலை அமலில் இருந் தது. இந்தக்காலத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒவ்வோர் இந்தியனுக்கும் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகள் இரத்து செய்யப்பட்டன. அரசியல் அமைப்புச் சாசனத்தின்படி இச்செயல் சரி யென்று நான்கு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். ஆனால், ஐந்தாவது நீதிபதி எச்.ஆர். கண்ணாவோ, “ஒவ்வோர் இந்தியனின் அடிப்படை உரிமையை பறிப்பது இந்திய அரசியல் அமைப்புச் சாசனத்துக்கு முற்றிலும் எதிரானது, இந்திய அரசியல் அமைப்புச் சாசனத்தின் அடித்தளத்தையே தகர்த்து எறியும் செயல் இது” என்று இந்திரா காந்தி யின் கொடுஞ்செயலுக்கு தைரிய மாக தீர்ப்பளித்தார். இவ்விவகாரம் பற்றி 1976 ஆம் ஆண்டு தலை யங்கம் எழுதிய, ‘தி நியுயார்க் டைம்ஸ்’ இப்படிக் கூறியது, “நாளைக்கு மீண்டும் இந்தியாவில் ஜனநாயகம் தழைத்தோங்கினால், அதற்கு ஒரே ஒரு மனிதர்தான் காரணமாக இருப்பார். அவர்தான் நீதிபதி எச். ஆர். கண்ணா. இதற்கு நன்றிக் கடனாக இந்தியா, நீதிபதி எச். ஆர்.கண்ணாவுக்கு சிலை வைக்க  வேண்டும்” என்றது.

மீண்டும் 1986 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தியின் அரசு ‘தபால் மசோதா’ என்ற ஒன்றை நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த மசோதாவின்படி, இந்தியா முழுவதிலும் நாட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் யாரிடமிருந் தும், யாருக்கும், எந்த தபால்கள் போனாலும் அதனை இடைமறித்து, பிரித்து பார்த்து பரிசோதிக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்கியது.  ‘நாட்டின் பாது காப்பை வலிமைப்படுத்த, மத்திய உளவு அமைப்புகளுக்கு இந்த அதிகாரம் தேவைப்படுகிறது’ என்று ராஜீவ்காந்தி அரசு வாதிட்டது. மக்களவை யில், வெறும் 20 எம்பிக்கள் மட்டுமே இருக்கும்போது தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இறுதியாக மசோதா சட்டமாக்கப்படுவதற்காக அப்போதைய குடியரசு தலைவர் கியானி ஜெயில் சிங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுபோன்ற சட்டத்தை கொண்டு வருவதற்கான அவசியம் இப்போது ஏன் வந்தது? இது இந்திய அரசியல் அமைப்பு சாசனம் சரத்து 19-வது பிரிவின் கீழ் ஒவ்வோர் இந்தியனுக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் அடிப் படை உரிமைகளுக்கே எதிரானது… என்று சொல்லி மசோதா விற்கு ஒப்புதல் அளிக்க ஜெயில்சிங் மறுத்துவிட்டார். இதனால் ‘தபால் மசோதா’ - வை ராஜீவ் காந்தி அரசு வாபஸ் பெற்றது.

அங்ஙனமே, கணினி மற்றும் மின்னஞ்சல்களை இடை மறிக்கும் செயல் என்பது வெவ்வேறு வடிவங்களில், காலங்காலமாய் இந்தியாவில் ஆட்சியாளர் களால், அது எந்த ஆட்சியாக இருந்தாலும் செய்யப்பட்ட அல்லது செய்ய முயற்சிக்கப்பட்ட செய லாகத்தான் உள்ளது.  தொலைபேசி ஒட்டுக் கேட்பால், கடந்த 70 ஆண்டுகளில் இந்தியாவில் பல அரசியல் மாற்றங்களும் ஏற் பட்டிருக்கின்றன. உதாரணத் திற்கு சொன்னால் 1980 களில்,

அப்போதைய கர்நாடக முதலமைச் சராக இருந்த ராமகிருஷ்ண ஹெக்டே தொலைபேசி ஒட்டுக் கேட்பால் தன்னுடைய ஆட்சியை இழந்தார். 2010-ல் 2ஜி ஊழல் வழக்கில் நீரா ராடியா டேப்புகளில் வந்த உரையாடல்கள் பல அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நாட்டின் முன்னணி கார்ப்பரேட்டுகளின் அசிங்கத்தை வெளிச்சமிட்டது. “முன்பெல்லாம் அரசு மட்டும்தான் ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தது. இப்போது தனியாரும் இதனை செய்ய வாய்ப்புகள் மலிந்துள்ளது. காரணம், ஒட்டுக் கேட்பு கருவிகள் சர்வ சாதாரணமாக இந்தியாவிலும், இந்தியாவுக்கு வெளியேயும் வெறும் 2 லட்சம் ரூபாயில் கிடைக்கிறது” என்கிறார்கள் சாப்ட்வேர் நிபுணர்கள்.

வெல்லுமா இந்த தேர்தல் யூகம்?

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கின்ற நிலையில் கம்ப்யூட்டர்களை கண்காணிப்பது மற்றும் இடைமறித்து தகவல்களை திருடுவதற்கென்ற அங்கீகாரத்தைக் பத்து நிறுவனங்களுக்கு கொடுத்து அவசர அவசர மாக மசோதாவை நிறைவேற்ற மத்திய மோடி அரசுக்கு என்ன அவசியம் வந்துவிட்டது? மூத்த பத்திரிக்கையாளரான ஆர்.மணி

பி.பி.சி செய்திக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் இரண்டு காரியங்களுக்காகத்தான் இந்த மசோதா என்கிறார்.

          முதலாவது, அரசியல் காரணம். அதாவது, அரசுக்கு எதிராக செயற்படும், ஜனநாயக பாதையிலேயே பயணித்துக் கொண்டிருக் கும், வாக்கு வங்கி அரசியலில் ஈடுபட்டு மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் எதிர்க் கட்சி அரசியல் வாதிகள், இந்தியா முழுவதும் இருக்கும் எதிர்கட்சி எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களின் கணினி செயற்பாடுகளில் ஊடுருவி தகவல் களை அறிந்துகொள்வது அத்தோடு, மத்திய ஆட்சியாளர்களுக்கு எதி ராக இயங்கும் மனித உரிமை ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை தொடர் கண்காணிப்பில் வைத் திருப்பது. இரண்டாவது, மத்திய பா.ஜ.க. அரசுக்கு எப்போதும் தூபம் காட்டிக் கொண்டிருக்கும் சில குறிப்பிட்ட கார்ப்பரேட் நிறு வனங்களின் நலன்களுக்கான செயல்தான் இது. அதாவது, இன்றைய உலகில் நடக்கும் மிகப் பெரிய போட்டி என்பது நாடு களுக்கிடையிலோ அல்லது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கிடையிலோ நடப்பவை அல்ல. மாறாக, ஒரு மனிதனைப் பற்றிய அல்லது நிறு வனத்தைப் பற்றிய அனைத்துத் தரவுகளையும் (DATA) யார் கட்டுப் பாட்டில் வைத்துக்கொள்வது என்பதுதான். இதனை ‘அமெரிக்க மாதிரி முதலாளித்துவக் (American model Captitalism)  கூறு’ என்கிறார் கள். நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் திரும்பத் திரும்ப கடந்த பல ஆண்டுகளாக அமெரிக்காவில் இதுதான் நடந்து கொண்டிருக் கிறது. தரவுகளே இன்று கோடிகளைக் குவிக்கும் பொருளாதார மையமாகவும் உள்ளது. சுருங்கக் கூறின், ஒன்று எதிர்கட்சிகளை வீழ்த்துவது. இரண்டாவது, ஆளும் கட்சிக்கு ஆதரவான குறிப்பிட்ட மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தரவுகளைத் தரை வார்த்து அவர்களின் செல்வாக் கையும், நன்கொடை என்ற பெயரில் கோடிகளையும் சுருட்டுவது. மொத்தத்தில் ஆர்.மணி சொல்வதுபோல், இது அடிப்படையில் வெறும் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத் தும் வேவு பார்த்தலோ, எதிர்கட்சி களை முடக்கும் அரசியல் வேவு பார்த்தலோ (Neither surveillance to strengthen the country’s security nor political surveillance to neutralize the opposition)  மட்டும் கிடையாது. இந்த இரண்டை யும் தாண்டிய குறிப்பிட்ட சில கார்ப்பரேட்டுகளின் லாபத்தை பல்லாயிரம் மடங்கு அதிகரிக்கும் நோக்கங் கொண்ட பொருளாதார வேவு பார்த்தல் (An economic surveillance).

  தேர்தல்கள் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் இம்மசோ தாவை வெளிப்படையாக அறிவித்துச் செய்வது என்பது ஒன்று அரசை விமர்சிப்பவர்களை அச்சுறுத்துவதற்கும், இரண்டாவது குறிப்பிட்ட சில கார்ப்பரேட்டு களிடம் அவர்களது நலன்களை தாங்கள் பாதுகாக்கிறோம் என்ற நம்பகத்தன்மையை ஏற்படுத்து வதற்கும்தான். இந்த யூகம் வரும் தேர்தலில் வெல்லுமா? மக்களின் விரல் புரட்சிதான் பதில் சொல்லியாக வேண்டும். நாட்டின் பாதுகாப்பு எவ்வளவு முக்கியமோ, அந்தளவுக்கு தனிமனித சுதந்திர மும் இந்திய அரசியல மைப்பு சாசனம் ஒவ்வோர் இந்தியனுக் கும் கொடுத் திருக்கும் அடிப்படை உரிமைகளும் மதிக்கப்படவும், பேணப் படவும் வேண் டும் என்பதை அரசு இயந்திரங்கள் ஒரு போதும் மறந்திடலாகாது.

Comment