No icon

சிறுபான்மையினரின் அரசியல்

சிறுபான்மையினரின் அரசியல்

அருள்பணி.ஜே..தாஸ் சே.

பாராளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கின்ற இத்தருணத்தில் தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் பல வியூகங்களை வகுத்து தேர்தலைச் சந்திக்கத் தீவிரம் காட்டி வருகின்றன. பொதுவாகவே தேர்தல் சமயத்தில் அனைத்துக் கட்சியினருக்கும் சிறுபான்மையினர் மீது ஒரு தனிப்பட்ட பாசம் வரும். சிறப்புக்கூறுத் திட்டங்கள், திருப்பயண சலுகைகள், வேலைவாய்ப்பில் முன்னுரிமை என பல்வேறு திட்டங்களை அறிவிப்பர். அவற்றை ஓரளவு செயல்படுத்தவும் முற்படுவர். கடந்த 2014-ம் ஆண்டு பா...வின் தேர்தல் அறிக்கையில்சிறுபான்மையினருக்கு அமைதியான மற்றும் பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கித் தருவோம்என்று குறிப்பிட்டிருந்தனர். ஆனால்

கடந்த 4 ஆண்டுகளில் கிறிஸ்தவ சிறுபான்மையினர் மீது நூற்றுக் கணக்கான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. சில அமைச்சர்கள் கிறிஸ்தவத் திற்கு எதிரான நச்சுக் கருத்துக்களை உமிழ்ந்தனர். குஜராத் மாநில பாடத் திட்டத்தில் இயேசுவை "சாத்தான்" என்று அச்சடித்தனர். அவர்களது தேர்தல் அறிக்கைக்கு முற்றிலும் மாறாகவே செயல்பட்டனர் என்பதை நாடே நன்கறியும். இப்பொழுது மீண்டும் தேர்தல் வர இருக்கின்றது. சிறுபான்மையினர் மீது புது பாசம் பிறக்கப் போகிறது.

தேர்தல் அல்லாத சமயங்களில் கிறிஸ்தவர்கள் மீது வகுப்புவாத சக்திகள் முன்வைக்கின்ற குற்றச்சாட்டுமதம் மாற்றுபவர் கள்” “அந்நிய நாட்டு மதத்தைப் பின்பற்றுபவர் கள்போன்றவை. உண்மையில் இந்தியாவில்

கிறிஸ்தவம் பெரிதாக ஒன்றும் வளர்ந்துவிடவில்லை. கடந்த 30 ஆண்டு கணக்கெடுப்பு களில் இந்தியாவில் 3 சதவீதத்திற்கும் குறைவாகவே கிறிஸ்துவ மக்கள் தொகை இருந்துவருகின்றது என்பதே நிதர்சனம். எவரும் எந்தமதத்தையும் பின்பற்றக் கூடிய உரிமையைநம் அரசியல் சாசனம் நமக்குக் கொடுத்திருக் கின்றது. அந்நிய மதமாக சித்தரிக்கப்படுகின்ற கிறிஸ்தவம் இந்தியாவில் வளர்வதைப் போலஇந்து மதம்அந்நிய நாடுகளில் வளர்ந்து வருவதை எப்படி புரிந்துகொள்வது என்பதை வகுப்புவாத சக்திகள்தான் விளக்க வேண்டும். இந்தியநாட்டில் கிறிஸ்தவம் தாக்குதல்களுக்கு உள்ளாவது போல் கிறிஸ்தவம் அதிகமாக உள்ள ஐரோப்பிய நாடுகளில் சிறுபான்மையாக உள்ள இந்து மதம் தாக்கப்படுவதில்லையே!

உண்மையில் ஐரோப்பிய நாடுகளில் இந்து மதம் காலூன்றி ஏறக்குறைய 200 ஆண்டுகள்தாம் இருக்கும். ஆனால் அதன் வளர்ச்சி 2000 ஆண்டுகளாக இந்தியாவில் வேரூன்றி இருக்கும் கிறிஸ்தவத்தின் வளர்ச்சியில் (2.3ரூ) பாதிக்குமேல் உள்ளது. ஐக்கிய நாட்டு (ருமு) மக்கள் தொகையில் 1.3ரூ பேர் இந்துக்கள், நியூசிலாந்தில் 2ரூ  பேர் இந்துக்கள், கனடாவில் 1.6ரூ  பேர், ஆஸ்திரேலியாவில் 1.28ரூ பேர், மலேசியாவில் 6.3 பேர், இந்தோனேசியாவில் 1.7ரூ  பேர் இந்துக்கள். இவ்வாறு இந்து மதம் சிறுபான்மையாக இருந்தாலும் சுதந்திரமாக பினபற்றப்படுகின்றது. ஐரோப்பிய நாடுகளில் இந்து மதம் வளர்வதில் நமக்கொன்றும் ஆட்சேபனை இல்லை. ஆனால் கிறிஸ்தவம் இந்தியாவில் வளர்வதைக் கண்டு ஏன் அஞ்ச வேண்டும்?

கிறிஸ்தவம் என்று தோன்றியதோ அன்றிலிருந்தே அது இந்திய மண்ணிற்கு அறிமுகமாகிவிட்டது. இயேசுவின் சீடர்களில் ஒருவரான புனித தோமா கி.பி.53-ல் இந்தியாவிற்கு வந்து கிறிஸ்துவின் நற்செய்தியைப் பறைசாற்றினார் என்பதற்கான வரலாற்று சான்றுகள்உள்ளன. எனவே கிறிஸ்தவம் கி.பி முதல் நூற்றாண்டி லிருந்தே இந்திய மண்ணிற்கு பரிட்சயமானது என்பது உறுதியாகிறது. இன்றும் கேரள கிறிஸ்தவர்களில் ஒரு பிரிவினர்தாமஸ் கிறிஸ்தவர்கள்என்று அறியப்பட்டு வருகின்றனர் என்பது இந்திய மண்ணில் கிறிஸ்தவத்தின் நீண்ட நெடிய வரலாற்றைப் பறைசாற்றுகின்றது.

இந்தியாவிற்குப் பிறகே பல ஆசிய மற்றும்ஐரோப்பிய நாடுகளில் அறிமுகமான கிறிஸ்தவம்இந்தியாவைக்காட்டிலும் பன்மடங்கு வளர்ச்சி யடைந்துள்ளது என்பது இந்தியாவில் கிறிஸ்தவம் இன்னும் எவ்வளவு வளர வேண்டியிருக்கின்றது என்தைச் சுட்டிக் காட்டுகின்றது. இந்தோனேஷி யாவில் 9.8ரூ பேர் கிறிஸ்தவர்கள், இலங்கையில் 7.5ரூ பேர், மியன்மாரில் 7.9ரூ பேர், நமது அண்டை நாடான சீனாவில் 4 முதல் 5ரூ பேர் கிறிஸ்தவர்கள். இந்நாடுகள் அனைத்திலுமே இந்தியாவிற்குப் பிறகுதான் கிறிஸ்தவம் அறிமுகமானது. இன்னும் சில ஐரோப்பிய நாடுகளில் இந்தியாவிற்குப் பிறகே அறிமுகமான கிறிஸ்தவம் 50ரூ முதல் 90ரூ வரை வளர்ந்துள்ளது

இந்தியாவில் கிறிஸ்தவத்தின் வளர்ச்சி குறிப்பிடும்படியாக இல்லை என்பதே எதார்த்தம். கிறிஸ்தவம் இந்திய மண்ணில் ஆழமாக வேரூன்றாததற்குப் பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படு கின்றன. அவற்றில் தற்பொழுது புற்றீசல்போல் எழுந்து வரும் இந்துத்துவ சனாதன சக்திகளும் அவை முன்னெடுத்து வைக்கும் இந்துத்துவ அரசியலும் ஒரு முக்கிய காரணமாகக் கருதப்படு கின்றது. மேலும் இந்தியாவின் பன்மைத் தன்மையும் (ஞடரசயடளைஅ) ஓர் இயல்பானக் காரணமாகப் பார்க்கப் படுகின்றது. இந்தியாவில் முப்பத்து முக்கோடி தேவர்கள் இருக்கின்றார்கள் அதில் இயேசுவையும் ஒருவராக இணைத்துக் கொள்வதில் சிரமம் ஒன்றும் இராது.

புத்தரை ஓர் அவதாரமாகக் கருதுபவர் களுக்கு இயேசுவை இன்னோர் அவதாரமாகக் கருதுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்ற ஒரு பார்வையும் நிலவுகின்றது. இது தவிர இந்திய சமூகம் அடிப்படையில் மொழி, இனம், சாதி, சமயம், கலாச்சாரம் போன்ற இறுக்கமான கட்டமைப்புகளால் கட்டப்பட்ட ஒன்று. இக் கட்டமைப்பு அன்னிய சித்தாந்தங்களை எளிதில் ஏற்றுக் கொள்ளாது. இவை யனைத்திற்கும் மேலாக கிறிஸ்தவத்தின் கோட்பாடுகளான அன்பு, சகோதரத்துவம், சமத்துவம் போன்றவை சாதிய கோட் பாடுகளைத் தூக்கிப் பிடிக்கும் இந்து தர்மத்திற்கு முரணானவை. இவை போன்ற இன்னும் பல காரணிகள் இந்தியாவில் கிறிஸ்தவம் வளர்வதற்குத் தடையாக உள்ளன.

இந்திய மக்கள் தொகையில் 2.3ரூ மட்டுமே உள்ள கிறிஸ்தவர்கள்மதம் மாற்றுகிறார்கள் அதனால் இந்து மதத்திற்குப் பேராபத்து வந்து விட்டதுஎன்னும் கூற்று உண்மைக்கு முற்றிலும் மாறானது. உண்மையில் பெரும்வாரியாக மதம்மாற்றம் நடந்திருந்தால் இன்றைக்குக் கிறிஸ்தவர் களின் மக்கள் தொகை பன்மடங்கு பெருகியிருக்க வேண்டும். ஆனால் எதார்த்தம் என்னவெனில் 1981 கணக்கெடுப்பின்படி 2.32ரூ பேர் இருந்த கிறிஸ்தவ மக்கள் தொகை அதற்குப் பின் வந்த 30 ஆண்டு கால கணக்கெடுப்புகளிலும் 2.3ரூ என குறைந்து காணப்பட்டு வருகின்றது. இத்தகைய அவதூறான விமர்சனங்களில்பொருள் இல்லாமல் இருக்கலாம் ஆனால் நோக்கம் இருக்கின்றதுஎன்கிறார் நம்வாழ்வு இதழில் தொடர் கட்டுரைகளைத் எழுதி வரும் முனைவர் தேவசகாயம். அவர்களது நோக்கம் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல மக்களாட்சி தத்துவத்திற்கே ஆபத்தானது.

இத்தகைய தருணத்தில், இந்தியக் கிறிஸ்தவம் அகல கால் வைப்பதைவிட ஆழக் கால்வைப்பதே  மதிநுட்பமானது. அதாவது தம் மந்தையின்எண்ணிக்கையைப் பெருக்கிக் கொள்வதைவிட, இருக்கின்ற மந்தையை வலுப்படுத்துவதே எதிர்கால திருஅவைக்குச் சிறந்தது. அதற்கான தேவையும் இப்பொழுது உருவாகி வருகின்றது. ‘கடுகு சிறுத்தாலும் அதன் காரம் குறையாதுஎன்பார்கள். கிறிஸ்தவர்கள் 2.3ரூ பேரே இருந்தாலும் அவர்களுடைய தாக்கம் உப்பாகவும் புளிப்பாகவும்இருக்க வேண்டும். அத்தகைய தாக்கத்தைஏற்படுத்தக்கூடிய ஒரு களம் அரசியல்.

கிறிஸ்த வர்கள் அரசியலில் ஈடுபடவேண்டியதற்கான அவசியத்தைப் பற்றி எனது முந்தைய கட்டுரையில் விரிவாக விவாதித்தேன். தமிழக அரசியலைப் பொருத்தவரை தி.மு.. மற்றும் .தி.மு. ஆகிய இருபெரும் கட்சிகள் தமிழகத்தைத் தொடர்ந்து ஆண்டு வருகின்றன.கடந்த காலங்களில் இவ்விரு கட்சி களின் வெற்றியை, குறிப்பாக இக்கட்டான சூழலில் தி.மு..வுக்கும்,.தி.மு..வுக்கும் சிறுபான்மையினரின் ஓட்டுக்களே கை கொடுத்திருக்கின்றன. சிறுபான்மையினரைக் கிள்ளுக்கீரையாகக் கருதிவிட முடியாது என்பதற்கு  கர்நாடக சட்டமன்றத்தேர்தல் முடிவுகளை முன்னுதாரண மாகக் கூறலாம். கடந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பா.. அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் (104), குறைவான இடங்களைப் பெற்றிருந்த ஜனதா தளம் (37) காங்கிரஸோடு கூட்டணி வைத்து (78) அதன் சட்டமன்ற உறுப்பினர் திரு. குமாரசாமி தலைமையில் ஆட்சிஅமைந்திருப்பதை நாம் அறிவோம். இங்கே அரசியலில் சிறுபான்மையராக இருந்த திரு.குமார சாமியால் ஆட்சி அமைக்க முடிந்தது என்பது சிறுபான்மைத் தத்துவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாக அமைந்துள் ளது. எனவேசிறுமந்தையே கலங்காதேஎன்று இயேசுகூறுவதுபோல சிறுபான்மை கிறிஸ்தவர்களாகிய நாம் கலக்கமடையாமல் ஆக்கப்பூர்வமான அரசியல்சிந்தனைகளையும் செயல்பாட்டையும் முன்னெடுத் துச் செல்வோம்!

Comment