No icon

Laudato si Year Prayer

Laudato si’ சிறப்பு ஆண்டிற்கு சிறப்பு செபம் - திருத்தந்தை

மே 24 ஆம் தேதி ஞாயிறன்று தொடங்கியுள்ள, Laudato si’ சிறப்பு ஆண்டு பற்றிக் குறிப்பிட்டு, அவ்வாண்டிற்கென வெளியிடப்பட்டுள்ள சிறப்பு செபத்தைச் செபிக்குமாறு, இஞ்ஞாயிறு நண்பகலில் வழங்கிய அல்லேலூயா வாழ்த்தொலி உரைக்குப்பின் திருத்தந்தை பிரான்சிஸ் கேட்டுக்கொண்டார்,.

மே 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையிலிருந்து  2021ம் ஆண்டு மே 24 வரை, டுயரனயவடி ளi’ சிறப்பு ஆண்டு  கொண்டாடப்படும் என்று அறிவித்த திருத்தந்தை, இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்பட்ட 54வது உலக சமூகத்தொடர்பு நாள் பற்றியும் குறிப்பிட்டார். உலக சமூகத்தொடர்பு நாளை தமிழகத்தில் நம் வாழ்வு மற்றும் மாதா தொலைக்காட்சி இரண்டும் இணைந்து பிறிதொரு நாளில் கொண்டாடுகிறது.

நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாப்பது பற்றிய, இறைவா உமக்கேப் புகழ் என்று பொருள்படும் டுயரனயவடி ளi’ திருமடல் வெளியிடப்பட்டு ஐந்து ஆண்டுகள், இஞ்ஞாயிறோடு நிறைவடைகின்றது என்பதை நினைவுபடுத்திய திருத்தந்தை, இத்திருமடல், இப்பூமி மற்றும், ஏழைகள் சிந்தும் கண்ணீர் மீது கவனம் செலுத்துமாறு அழைப்பு விடுக்கிறது என்றும் கூறினார்.

வத்திக்கான் மாளிகையிலுள்ள தனது நூலகத்திலிருந்து வழங்கிய அல்லேலூயா வாழ்த்தொலி உரைக்குப்பின் இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் பொதுவான இல்லமாகிய இப்பூமி மற்றும், மிகவும் நலிந்த நம் சகோதரர் சகோதரிகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில், நல்மனம் கொண்ட அனைத்து மக்களும் பங்கேற்குமாறு கேட்டுக்கொண்டார்.

Laudato si’ சிறப்பு ஆண்டிற்கான  சிறப்பு செபம்

அன்பின் இறைவா

விண்ணையும், மண்ணையும் அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்தவரே!

எம் மனங்களைத் திறந்தருளும்;   எம் இதயங்களைத் தொட்டருளும்.

இதனால், உம் கொடையாகிய படைப்பின் ஓர் அங்கமாக நாங்கள் இருக்க இயலும்.

இந்த இக்கட்டான நேரத்தில் தேவையிலிருப்போருக்கு, குறிப்பாக ஏழைகள் மற்றும் மிகவும் நலிந்தோருக்கு நீரே உடனிருந்தருளும்.

இந்த உலகளாவிய பெருந்தொற்றின் விளைவுகளை நாங்கள் எதிர்கொள்ளும்போது

ஆக்கப்பூர்வமான  ஒருமைப்பாட்டை வெளிப்படுத்த எமக்க உதவியருளும்.

பொதுநலனுக்கான தேடலில் தேவைப்படும் மாற்றங்களை விரும்பி வரவேற்க எம்மைத் துணிவுள்ளவர்களாக்கும்.

நாங்கள் ஒருவர் மற்றவருடன் தொடர்புள்ளவர்கள் என்றும் ஒருவர் மற்றவரைச் சார்ந்தவர்கள் என்பதையும் இதற்கு முன்பு இல்லாததைவிட இப்போது நாங்கள் உணரச் செய்தருளும்.

இந்தப் பூமியின் அழுகுரலுக்கும் ஏழைகளின் கூக்குரலுக்கும் செவிமடுத்து அவற்றுக்கு மறுமொழி கூறுவதில் நாங்கள் வெற்றியடைய உதவும்.

இன்றைய துன்பங்கள் உடன்பிறந்த உணர்வுமிக்க, பேணிபாதுகாக்கப்பட்ட உலகைப் பெற்றெடுப்பதற்கான பேறுகால வேதனையாக மாறுவதாக.

இவையனைத்தையும், கிறிஸ்தவர்களின் சகாய அன்னை மரியாவின் அன்புப் பார்வையில், எம் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

Comment