No icon

அருள்முனைவர். ஸ்டீவன் ஆலத்தரா துணைப் பொதுச்செயலர், CCBI.

இந்திய இலத்தின் ஆயர்கள் பேரவையின் புதிய நிர்வாகிகள்

இந்திய இலத்தின் ஆயர்கள் பேரவையின் புதிய நிர்வாகிகள்

புதிய தலைவர்கள்

இலத்தின் வழிபாட்டு முறை திருச்சபையின் இந்திய ஆயர் பேரவை CCBI - தனது புதிய நிர்வாகத் தலைவர்களைப் புதிதாகத் தேர்ந்தெடுத்துள்ளது. ஜனவரி 7 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை  தமிழகத்தின் மகாபலிபுரத்தில் உள்ள புனித ஜோ உருவாக்க மையத்தில் நடைபெற்ற 31வது பொதுக்குழு மன்றத்தில் 132 மறைமாவட்டங்களில் இருந்து 143 ஆயர்கள் பங்கேற்றனர். ஜனவரி 12 ஆம் நாள் ஊஊக்ஷஐயின் புதிய தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் பற்றிய விவரம் பின்வருமாறு:

தலைவர்:

மேதகு பேராயர்: பிலிப் நேரி ஃபெராவோ, கோவா - டாமன் உயர் மறைமாவட்டம்.

துணைத் தலைவர்:

மேதகு பேராயர்: ஜார்ஜ் அந்தோணிசாமி, சென்னை - மயிலை உயர் மறைமாவட்டம்.

பொதுச்செயலாளர்:

மேதகு பேராயர்: அனில் கூட்டோ, டெல்லி உயர் மறைமாவட்டம்.

தலைவர்:

CCBI-யின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப் படுள்ள மேதகு பேராயர் பிலிப் நேரி பெராவோ அவர்கள் 65 வயது நிரம்பியவர், 2011 முதல் 2017 வரை ஊக்ஷஊஐ-யின் துணைத் தலைவராகப் பணியாற்றிய அனுபவமுள்ளவர். கோவா - டாமன் உயர் மறைமாவட்ட துணை ஆயராக தமது 40 ஆம் வயதில், 20-12-1993 அன்று நியமிக்கப்பட்டு, 21-03-2004 அன்று அதே உயர் மறைமாவட்டப் பேராயராக உயர்த்தப்பட்டு பணிபுரிந்து வருகிறார். இலத்தின் திருச்சபை (ஊஊக்ஷஐ) மற்றும் சீரோ மலபார், சீரோ மலங்கரா ஆகிய இரு கிழக்கத்திய திருச்சபைகளையும் உள்ளடக்கிய இந்திய இலத்தின் ஆயர் பேரவையின் (ஊஊக்ஷஐ) துணைத் தலைவராக பணியாற்றி வந்த மேதகு பேராயர் அவர்கள், ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பு (குநனநசயவiடிn டிக ஹளயைn க்ஷiளாடியீ’ள ஊடிகேநசநnஉந - குஹக்ஷஊ) - இன் "கல்வி மற்றும் நம்பிக்கைப் பயிற்சி பணிக்குழுவின் தலைவராகவும் பணிபுரிகின்றார்.

துணைத் தலைவர்:

துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேதகு பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி (வயது 65), சென்னை - மயிலை உயர்

மறைமாவட்டப் பேராயர் அவர்கள் 2012 இல் சென்னை - மயிலை உயர்மறை மாவட்டத்தின் ஆறாவது பேராயராகப் பொறுப் பேற்றார்.

முன்னதாக, பேராயர் அவர்கள் ஆப்ரிக்க, ஆசியா மற்றும் பால்டிக் நாடுகளில் உரோமை-திருப்பீடத்தின் அரசுசார் மறைப்பணிகளில் பெரும் பொறுப்புகள் ஏற்று பணியாற்றியவர்; கயானா, காம்பியா, லிபேரியா மற்றும் சியரா-லியோனே ஆகிய நாடுகளில் திருத்தந்தையின் பிரதிநிதியாக (ஹயீடிளவடிடiஉ சூரnஉiடி) பணியாற்றியவர். ஜோர்டன் நாட்டில் திருத்தந்தையின் அப்போஸ் தலிக்க திருத்தூது பணிகளின் பிரதிநிதியாகவும் பணியாற்றியுள்ளார்.

பொதுச்செயலாளர்:

டெல்லி உயர் மறைமாவட்டத்தின் பேராயர் மேதகு அனில் கூட்டோ அவர்கள் 2000 ஆம் ஆண்டில் டெல்லி துணைப் பேராயராக நியமனம் பெற்றார். பின், 2007-ல் ஜலந்தர் ஆயராக உயர்வு பெற்றார். 2012 இல் நமது முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் இவரை டெல்லி உயர் மறை மாவட்ட பேராயராக உயர்த்தினார்.

"நற்செய்தியின் மகிழ்ச்சி" என்னும் தலைப்பில், இந்திய இலத்தின் வழிபாட்டுமுறை திருச்சபையின் ஆயர்கள் இந்த 31 ஆவது முழு நிறையமர்வுக் கூட்டத்தினை நிகழ்த்தினர். மறைமாவட்ட மற்றும் பங்கு அளவில், அன்பு மற்றும் இரக்கப் பணிகளுக்கு மறு ஊட்டம் அளிக்கும் செயல்பாடுகளுக்கான வரைவுகளை "நற்செய்தியின் மகிழ்ச்சி" என்னும் தலைப்பில் இப்பகிர்வினை அமைத்துக்கொண்டுள்ளது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம் முழு நிறை அமர்வுக் கூட்டத்திற்கு இறைப்பணியில் நம்பிக்கையிலும் அன்பிலும் வளரவும் மிகுந்த கனி தரவும், பங்கேற்பாளர்கள் ஆயர் பெருமக்களுக்கு வாழ்த்துகள் வழங்கினார். இந்திய இறைமக்கள் தங்களது அழைப்பினை மகிழ் வோடு தாராள மனதுடன் வாழ, வத்திக்கான் அரசு முறை செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள் வழியாக வழங்கிய செய்தியில் திருத் தந்தை இறைமக்களை வாழ்த்தினார்.

 

Comment