No icon

பேராயர் மேதகு சின்னப்பா ச.ச அவர்களின் ஆயர் திருநிலைப்பாடு வெள்ளிவிழா

பேராயர் மேதகு சின்னப்பா . அவர்களின் ஆயர் திருநிலைப்பாடு வெள்ளிவிழா

சென்னை - மயிலை உயர்மறை மாவட்டத்தின் சார்பாக இதன் முன்னாள் பேராயர் மேதகு சின்னாப்பா ச.ச அவர்களின் ஆயர் திருநிலைப்பாடு வெள்ளிவிழா, சனவரி 29 ஆம் நாளன்று சாந்தோம், புனித பீட் மேல்நிலை பள்ளியின் கலையரங்கத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போது நடைபெற்ற பாராட்டு விழாவில் பேராயரின் வாழ்க்கை வரலாற்றை உயர் மறைமாவட்டத்தின் பொதுநிலையினர் தனி பதில்குரு பேரருள்பணி வின்சென்ட் சின்னதுரை வாசித்தளித்தார். புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் வரவேற்பு நடனமாட, உயர்மறைமாவட்ட முதன்மை குரு பேரருள்திரு. ஸ்டான்லி செபாஸ்டின் அனைவரையும் வரவேற்றார்.

பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோணி சாமி வெள்ளி விழா நாயகரை வாழ்த்தி பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசையும் வழங்கினார். விழாவிற்கு வந்திருந்த ஆயர்கள், முதன்மை குருக்கள்  பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். பின்னர் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் பேராயரை வாழ்த்தி மகிழ்ந்தனர். உயர் மறைமாவட்டத்தின் சார்பாக ஆவடி பங்குத்தந்தை அருள்பணியாளர் பால்ராஜ் துறவியர்கள் சார்பாக அருள்பணி. பெல்லார்மின் ச.ச. மற்றும் அருள்சகோதரி அந்தோணியம்மாள் குக்ஷளு, பொதுநிலையினர் சார்பாக திரு.வில்லியம் குமார் ஆகியோர் வாழ்த்தினர்.

பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி விழா மலரை வெளியிட்டார். உயர்மறைமாவட்ட முதன்மை குரு மரிய அமல்ராஜ் நன்றியுரை வழங்கி விழாவை நிறைவு செய்தார். இந்நிகழ்வினை அருள்பணி. வின்சென்ட் மற்றும் பீட்டர் தும்மா ஆகியோர் தொகுத்து வழங்கினர். அதனைத் தொடர்ந்து, விழா நாயகரின் தலைமையில் ஆயர்கள், முதன்மைக் குருக்கள், அருள்பணியாளர்கள், துறவியர், பெருந்திரளான திருநிலையினர் ஆகியோர் புடைசூழ ஆடம்பர கூட்டுப் பாடல் திருப்பலி நடைபெற்றது. இசையறிஞரான விழா நாயகர் இயற்றி இசையமைத்த "ஆண்டவரே நீர் எவ்வளவு பெரியவர்" என்ற தியானப் பாடல் பாடப்பட்டது. தருமபுரி ஆயர் மேதகு லாரன்ஸ் பயஸ் கருத்தாழ மிக்க மறையுரை வழங்கினார். இறுதியில் விழா நாயகர் ஏற்புரை வழங்கினார். சென்னை - மயிலை உயர்மறைமாவட்ட நிர்வாகம், வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த விழாவிற்கான ஏற்பாடுகளைச் சிறப்பாக செய்திருந்தது.                             

Comment