No icon

மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர்

திரு. சா. பீட்டர் அல்போன்ஸ் சிறப்பு நேர்காணல்

பெயர் ஒன்றே போதும். இவர்தம் புகழ் விளங்கும். இவர் ஒரு நடமாடும் பல்கலைக்கழகம். அரசியலில் நற்பெயரை மட்டுமே சம்பாதித்துள்ள இவர்,  காந்திய வழியில், நேருவின் வழிகாட்டுதலில், ஒரு பெருமைமிகு காங்கிரஸ்காரராக நேர்மையையும் அறத்தையும் ஒழுக்கத்தையும் நீக்கமற கற்றுத் தேர்ந்தவர்.

இவர் அரசியலில், சிறுபான்மையினருக்கும் விளக்கு முகமாக விளங்கி, சிறுபான்மையினராகிய நமக்கு முகவரி தந்துள்ளார். ஆங்கிலத்திலும் தமிழிலும் சரளமாக பேசும் திறன் படைத்த இவர், அனைத்து அரசியல் கட்சிகளும் கட்சி பேதமின்றி மதித்து போற்றும் மாண்புக்குரியவர். கத்தோலிக்கத் திருஅவையின் படிப்பினைகளையும் போதனைகளையும் கடைபிடித்து ஒழுகும் இவர், பல்வேறு ஆலயங்களுக்கும் ஆன்மீகத் தலங்களுக்கும் தாராளமாக உதவுகின்ற புரவலர். அரசியலில், பொதுவாழ்வில் பொன்விழா கண்டு கொண்டிருக்கும் இவர், நேரு குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர்.

தழுவிய காங்கிரஸ் பேரியக்கத்தின் கொள்கைகளோடு, மூப்பனாரின் தலைமைத்துவத்தில், கலைஞர் கருணாநிதியின் அன்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தோழமையில் தன்னைப் பட்டைத் தீட்டிக்கொள்கிற இவர், அப்பழுக்கற்ற அரசியலுக்குச் சொந்தக்காரர். இவரின் மேடைப்பேச்சுக்கு மாற்றுக் கருத்துடையோரும் எதிரிகளும் மயங்கிப் போவர். சொற்களை அடுக்கி, தன் கருத்தை வலிய முன்வைக்கும் இவரின் பாணியே வேறு. மடை திறந்த வெள்ளமாய் இவரின் வார்த்தைகள் செவிகளில் சுழன்றடிக்கும்.

மும்முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இவர், சாதி, மதம், மொழி கடந்து அனைவரின் அன்புக்கும் உரியவராகி, ஜனநாயகத்திற்கும் நறுமணம் தந்தவர். ஒரு காங்கிரஸ்காரருக்கு எளிமையும் கிறிஸ்தவருக்கே உரிய பேரன்பையும் தன் இரு கண்களாகக் கொண்ட இவர், அரசியலில் அனைவருக்கும் ஒளி வீசி வழிகாட்டும் கலங்கரை விளக்கம். ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று பொதுவாழ்வில் பொன்விழா காண்பவர்.

தமிழகத் திருஅவை இவருக்கு என்றும் நன்றிக் கடன் பட்டிருக்கிறது. இவர் இயேசு கிறிஸ்து நன்று நன்று என்று பாராட்டும் நம்பிக்கைக்குரிய நல்ல ஊழியர். இவருடைய கனிகள் நிறைந்த திராட்சைத் தோட்டம் அனைவருக்குமானது. இவர் ஒருபோதும் பதவிகளைத் தேடி போனதில்லை. மாறாக, பதவிகள்தான் இவரைத் தேடி வரும்.

மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக சிறுபான்மை ஆணையத் தலைவராக இவரைத் தேர்ந்ததே புதுமையிலும் புதுமை. அனைத்தையும் துறந்த துறவிகளே, ஆணையப் பதவிகளைத் தேடி அலைபாய்கின்ற இவ்வுலகில், சிறுபான்மை ஆணையத்தலைவராக திரு. பீட்டர் அல்போன்ஸ் அவர்களை, தமிழக முதல்வரே தேர்ந்துகொண்டதைப் பார்க்கும்போது, அந்த ஆணையத்தால் இவருக்கு பெருமை என்பதைவிட, இவரால் இந்த ஆணையத்திற்குத்தான் பெருமை.

சிலர் ஐந்து ஆண்டுகள் இருந்தும், சிலர் பத்து ஆண்டுகள் இருந்தும் சாதிக்காததை, கடந்த ஐந்தே மாதங்களில், ஆணையத் தலைவராக, பணிப் பொறுப்பேற்று, சாதித்து, முதல்வரின் தேர்வுக்கும் அங்கீகாரத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். அவரிடம் நம் வாழ்வுக்காக, ஆசிரியர் குடந்தை ஞானி அவர்கள் மேற்கொண்ட சிறப்பு நேர்காணல்...

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திமுக அரசு எந்த விதத்தில் சிறுபான்மையினருக்கு நல்ல அரசாக செயல்படுகிறது?

பொதுவாக இன்றைக்கு இருக்கிற கால சூழ்நிலையில், நம் ஜனநாயகத்தில் சிறுபான்மையினருக்கு ஒரு மிகப்பெரிய நெருக்கடி ஏற்படுத்தப்பட்டு, ஜனநாயகம் கொஞ்சம் கொஞ்சமாக பெரும்பான்மைவாதமாக மாறிக்கொண்டு இருக்கிறது. வாக்குகளைப் பெற வேண்டும் என்கிற வேகத்தில் ஒரு சராசரி அரசியல் கட்சியோ, ஒரு சராசரி அரசியல் கட்சியினுடைய தலைவரோ, பெரும்பான்மை வாக்குகளைப் பெறுவது எப்படி என்றுதான் சிந்திக்கிறார்களே ஒழிய, சிறுபான்மையினரைப் பற்றி சிந்திக்கிற அரசியல் கட்சிகளும் அரசியல் தலைவர்களும் மிக மிகக் குறைவு. அந்த வகையில்  நாம் திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பாராட்ட கடமைப்பட்டிருக்கிறோம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய மறைந்த தலைவர் கலைஞராக இருந்தாலும் சரி, அவருடைய காலங்களையொட்டி இந்த அரசை அமைத்து வழி நடத்திக்கொண்டு இருக்கிற நம்முடைய தமிழகத்தினுடைய முதலமைச்சராக இருந்தாலும் சரி, பெரும்பான்மைவாதம் பேசி வாக்குகளைச் சேகரிப்பதில்லை என்பதிலே உறுதியாக இருக்கிறார்கள். சிறுபான்மை மக்களுக்கான உரிமைகளை, அவர்களுக்கான வாழ்வாதாரங்களை அவர்களுடைய முன்னேற்றத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுகின்றவர்களாகவும், அதை தேவைப்படுகின்றவற்றை உடனுக்குடனே நிறைவேற்றிக் கொடுக்கின்ற மனநிலையோடு அவர்கள் அரசாங்கத்தை நடத்துகின்ற காரணத்தினால் தான் இன்று இந்தியாவிலேயே எங்கும், எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிலே சிறுபான்மையின மக்கள் மிக மன நிறைவோடும், மகிழ்ச்சியோடும், பாதுகாப்போடும், மாண்போடும் வாழக்கூடிய சூழ்நிலை இன்று தமிழ்நாட்டிலே இருக்கிறது என்றுச் சொன்னால் அதற்கு திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு நாம் நிச்சயமாக அதிலும் குறிப்பாக மாண்புமிகு முதலமைச்சருக்கு நாம் நிறைய நன்றிச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.

மாநில சிறுபான்மையினர் ஆணையம் என்றால் என்ன? முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் தங்களைத் தேர்ந்துகொண்டது எப்படி?

சிறுபான்மை ஆணையம் என்பது ஒரு சட்டப்பூர்வமான ஆணையம். இந்த ஆணையம் இந்த மாநிலத்தில் இருக்கிற மதவழிச் சிறுபான்மையினர், மொழிவழிச் சிறுபான்மையினருக்காகச் செயல்படுகிறது. மதவழிச் சிறுபான்மையினர் என்றால் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், ஜைனர்கள், புத்தர்கள், சீக்கியர்கள் ஆகியோர் மதவழிச் சிறுபான்மையினராக அரசியல் சாசனச் சட்டத்தால் அடையாளப்படுத்தப்பட்டவர்கள். மொழிவழிச் சிறுபான்மையினர் என்றால், தமிழ்மொழியைத் தவிரப் பிற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட தெலுங்கு மொழிப் பேசுகிறவர்கள், கன்னடம் பேசுகிறவர்கள், மலையாளம் பேசுகிறவர்கள் இவர்கள் மொழி வழிச் சிறுபான்மையினராக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த ஆணையம் இவர்கள் இரண்டுப் பேருடைய உரிமைகளை, வாழ்வாதாரங்களை, இவர்களுக்குக் கிடைக்க வேண்டிய அரசாங்கத்தினுடையத் திட்டங்களை அதன் பயன்களை இவற்றையெல்லாம் மேற்பார்வை செய்து அவைகள் ஒழுங்காகச் சென்றடைகிறதா? என்று பார்வையிட்டு அந்தத் திட்டங்களில் ஏதாவது பிரச்சனைகள் இருக்குமென்றுச் சொன்னால் அதை அரசின் கவனத்திற்குக் கொண்டுப் போக உதவும். இதுபோன்ற பணிகளைத் தான் இந்த ஆணையம் செய்கிறது.

அந்த வகையிலே இன்றைக்கு மொழிவழிச் சிறுபான்மையினரும், மதவழிச் சிறுபான்மையினரும் தமிழ் நாட்டினுடைய ஜனத்தொகையிலே ஏறக்குறைய 35ரூ விழுக்காடு உள்ளனர். ஆகவே, இவ்வளவுப் பெரிய ஜனத்தொகையை நிர்ணயிக்கக்கூடிய அவர்களுடைய வாழ்வாதாரங்களைப் பற்றி, அவர்களுடைய முன்னேற்றத்தைப் பற்றி சிந்திக்கிறோம். அவர்களைக் கொண்டு வந்து, ஒருங்கிணைந்த தமிழகத்தினுடைய வளர்ச்சியிலே இணைப்பதைப் பற்றியெல்லாம் சிந்திக்கக்கூடிய அந்த இடத்திலே என்னை முதலமைச்சர் அவர்கள் உட்கார வைத்திருக்கிறார்கள். இந்தப் பணியை நான் நன்கு திட்டமிட்டு செயலாற்றிக்கொண்டு இருக்கிறேன்.

மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவராக கடந்த ஆறு மாதங்களில் மிகச் சிறப்பாக செயல்படும் தாங்கள் இந்த ஐந்தாண்டு காலத்திற்கும் சிறுபான்மையினரின் நலனிற்காக செயல்படுத்த நினைத்துள்ள திட்டங்கள் யாவை?

மாவட்டந்தோறும் ஆய்வுக் கூட்டம்

மாவட்ட வாரியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் நேரடியாகப் போய் அங்கே இருக்கின்ற மாவட்ட ஆட்சித் தலைவரையும், மற்றவர்களையும், அதிகாரிகளையும் உடன் வைத்துக்கொண்டு, அந்தப் பகுதியிலே இருக்கின்ற சிறுபான்மை மக்களுக்கு இருக்கின்ற பிரச்சனைகள் என்ன என்பதையெல்லாம் எங்கள் ஆணையத்தினுடைய உறுப்பினர்களும், நானும் சென்று மாவட்டந்தோறும் பரிசீலித்து வருகிறோம். அரசாங்கத்திற்கு பல்வேறு கோரிக்கைகளை அனுப்பி இருக்கிறோம்.

சிறுபான்மையினர் நல அலுவலர்

முதல் முறையாக வரலாற்றிலே இதுவரை இல்லாத வகையிலே ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறுபான்மையினர் நலத்திற்கென்று ஒரு தனி அதிகாரியை நியமனம் செய்வதற்கான உத்தரவினைப் பெற்றிருக்கிறோம். இதுவரை ஒவ்வொரு மாவட்டத்திலும்,Backward Class Welfare Officerன்னு இருப்பார், ஆதி திராவிடர் Welfare Officerன்னு இருப்பார், அந்த Backward Class Officer தான் Backward Class Officerயும் சேர்த்துப் பார்த்துக்கொண்டிருந்தார். இப்போது முதல் முறையாக நான் நம்முடைய முதலமைச்சர் அவர்களிடம் எடுத்துச்சொல்லி சிறுபான்மைக்கென்று ஒரு நல அதிகாரி இருந்தால் தான் அந்தத் திட்டங்களை ஒருங்கிணைக்க முடியும். ஒரு Backward Class Officerஐ வைத்துக்கொண்டு அதைச் செய்யமுடியவில்லை என்றுச் சொன்னவுடனே, என் கோரிக்கையில் இருக்கிற நியாயத்தை உடனடியாக உணர்ந்துக் கொண்ட முதலமைச்சர் அவர்கள் இந்த ஆண்டு ஐந்து மாவட்டங்களுக்கு அந்த அதிகாரிகளை நியமித்து ஏறக்குறைய ஒன்றரை, இரண்டரைக் கோடி ரூபாய் செலவிலே அந்தப் பணியிடங்களை அனுமதித்திருக்கிறார். இனிவரும் ஆண்டுகளில், தொடர்ந்து இதேபோன்று அதிகாரிகளை எல்லா மாவட்டத்திற்கும் நியமித்துத் தருவதாக எனக்கு அவர் உறுதி அளித்துள்ளார்.

தேவாலயப் பணியாளர்கள் நல வாரியம்

அதைப்போலவே தேவாலயங்களிலே பணியாற்றுகின்ற பணியாளர்களுக்கு ஒரு நலவாரியம் வேண்டுமென்று கோரிக்கை நீண்ட நாட்களாக வைக்கப்பட்டு வந்தது. அதாவது இப்போது நமது இஸ்லாமிய சகோதரர்களுக்கு ‘உலமாக்கள் நல வாரியம்’ என்று அவர்களுக்காக ஒரு ஏற்பாடு இருக்கிறது. ஒரு இந்து மதத்தைச் சார்ந்த நண்பர்களுக்காக ‘கிராமப் பூசாரிகள் நல வாரியம்’ என்று ஒன்று இருக்கிறது. கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த தேவாலய ஊழியர்களுக்கு இதுவரை அப்படிப்பட்ட ஒரு ஏற்பாடு இல்லை. அதை நான் முதலமைச்சர் அவர்களைப் பார்த்து எங்களுடைய ஆணையத்தின் மூலம் தீர்மானம் போட்டு அவர்களிடம் கோரிக்கை வைத்தவுடனே அந்த நல வாரியத்தையும் அமைப்பதற்கான உத்தரவினை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் நம்முடைய நிதிநிலை அறிக்கையில் அறிவித்து இப்போது அதற்கான பூர்வாங்க வேலைகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அந்த நல வாரியம் ஒன்று, இரண்டு மாதத்திலே செயல்பாட்டுக்கு வரும்.

சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு...

இதெல்லாம் நாம் எடுத்திருக்கிற முக்கியமானப் பணி. இது சம்பந்தமாக இந்த அணியில் சிறுபான்மை கல்வி நிறுவனங்களை எப்படி வரையறுப்பது? அவர்களுக்கு எப்படி அனுமதி அளிப்பது? அவர்களுக்கு கிடைக்கும் பணியிடங்களில் அவர்களுக்கு நீண்டநாட்களாக அரசாங்கம் அந்த பணியிடங்களை வழங்க மறுத்ததின் காரணமாக பல்வேறு கல்வி நிறுவனங்கள் சுயநிதியில் செயல்பட வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டு, பெரும் கடன் சுமைகளில் இருக்கவேண்டிய சூழல் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆகவே, தலைவர் கலைஞர் அவர்கள் விட்டுசென்றபிறகு, இதனை தொடர்ந்து மீதமுள்ள பணியிடங்களை அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கின்றோம்.

சிறுபான்மை கல்வி நிறுவனங்களை அங்கீகரிப்பதற்கான நடைமுறைகளை தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

ஆலய கட்டுமானத்திற்கு வழிகாட்டு நெறிமுறைகள்

இவை எல்லாவற்றையும்விட, பல இடங்களிலேயே தேவாலயங்கள் கட்டுவதற்கோ, பள்ளி வாசல் கட்டுவதற்கோ இன்னும் சிறுபான்மையினருடைய வழிபாட்டு தலங்களைக் கட்டுவதிலும் அதை நிர்வகிப்பதிலும் பெரிய சிரமம் இருக்கின்றது. பல இடங்களிலே வகுப்புவாத சக்திகள் இந்த சிறுபான்மை மக்கள் வழிபடுகின்ற தேவாலயங்களிலும், பள்ளி வாசல்களிலும் வந்து தகராறு செய்வது, புதிய வழிபாட்டு தலங்கள் கட்ட வேண்டுமென்று சொன்னால் அதற்கு அனுமதி கிடைக்கின்ற இடத்திலே போய் அதற்கு கொடுக்கக் கூடாது என்று தகராறு செய்வது, அவர்கள் தகராறு செய்கின்ற காரணமாகவே மாவட்ட நிர்வாகம் அதனை மறுப்பது, காவல்துறை கண்காணிப்பாளர்கள் வழிபாடு செய்யக்கூடாதென்று தடுப்பது இதுபோன்று பல நிர்பந்தங்களுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அதேபோன்று அடக்க ஸ்தலங்கள் (கல்லறைகள்) புதிதாக சொந்த இடம் வாங்கி அதிலே இறந்தவர்களை அடக்க முயற்சித்தால்கூட மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுப்பதில்லை. ஆகவே, அதையெல்லாம் நாங்கள் முதலமைச்சரிடம் தெரிவித்திருக்கிறோம். அதற்கு ஒரு ளுவயனேயசன டீயீநசயவiபே ஞசடிஉநனரசந கேட்டிருக்கிறோம். ஒரு தேவாலயம் கட்ட வேண்டுமென்று சொன்னால் அதற்கு என்ன நிபந்தனைகள், அப்படி அந்த நிபந்தனைகளை நாங்கள் நிறைவேற்றி, வழிபாட்டு தலம் கட்டினால் அங்கே வந்து யாரும் வழிபாடு நடக்கும்போது இடையூறு செய்யக்கூடாது. அதை அரசாங்கம் எங்களுக்கு உறுதிசெய்து கொடுக்க வேண்டும்.

கல்லறைகளுக்கு அனுமதி

அதேபோல அடக்க ஸ்தலங்களுக்கு நாங்கள் கோரிக்கை மனு கொடுத்தால் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஐந்தாண்டுகள், ஆறு ஆண்டுகள் எந்த முடிவும் எடுக்காமல், யாரையும் அடக்கம் செய்வதற்கு அனுமதிக்காமல், அவர்கள் நாட்கள் கடத்துவதை சொல்லி, மனு கிடைத்த 90 நாட்களுக்குள் அதற்கு அனுமதி வழங்க வேண்டும் இல்லையென்றால் அனுமதி மறுப்பதற்கான காரணங்களை சொல்ல வேண்டும். அப்படி காரணங்கள் சொல்லி மறுக்கப்படுமே என்று சொன்னால் அதற்கு மேல்முறையீடு செய்வதற்கு சென்னையிலே வருவாய் துறை அதிகாரிக்கு அதிகாரம் வழங்கவேண்டும் என்றெல்லாம் நாங்கள் கேட்டிருக்கின்றோம்.

முதல்வர் தலைமையில் சிறுபான்மையினர்

சிறுபான்மை மக்களின் கல்வி நிறுவனங்களை ஒருங்கிணைத்து அந்த தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து ஒரு பெரிய கருத்தரங்கு ஒன்றை ஜனவரி மாதம் இரண்டாவது வாரம் நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம். அதற்கு முதலமைச்சர் அவர்கள் வருவதற்கு ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். அன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கின்ற எல்லா கல்வி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் இவர்களையெல்லாம் ஒரு தளத்தில் கொண்டுவந்து தமிழகத்தில் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அவர்களின் சக்திகளை பயன்படுத்துவதற்கு விவாதித்திருக்கின்றோம்.

கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக இந்த வாரியம் செயல்படவே இல்லை. இந்த வாரியத்தினுடைய தலைவர்கூட இரண்டு மாதம் அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறைதான் இந்த வாரிய அலுவலகத்திற்கே வந்தார். இப்பொழுது அதையெல்லாம் மேம்படுத்தி ஒரு தனி ஐஹளு அதிகாரியை எங்கள் வாரியத்திற்கு செயலாளராக நியமனம் செய்திருக்கிறார்கள். நான் தினசரி இப்பொழுது அலுவலகம் வருகிறேன். பல்வேறு பணிகளை முடுக்கிவிட்டிருக்கின்றோம்.

மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்கிறோம். மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு, சமூக உறவுகளை வலுப்படுத்துவதற்கு, சிறுபான்மை மக்களை அவர்களுடைய வளர்ச்சி, முன்னேற்றம், கல்வி, பொருளாதாரம் இவற்றைப் பற்றி பல்வேறு கோணங்களிலே என்ன செய்யலாம் என்பதனைப் பற்றியெல்லாம், சமூகத்திலே இருக்கிற தலைவர்கள் நம்முடைய வணக்கத்திற்குரிய பேராயர்கள், ஆயர்கள், சமுதாயத் தலைவர்கள், நம்முடைய அருள்சகோதரிகள், அருள்சகோதரர்கள், பல விதங்களில் அனுபவம் பெற்றிருக்கிற தொண்டு நிறுவனங்களை நடத்துகின்றவர்களையெல்லாம் ஒருங்கிணைத்து இந்த சமூகம் தனக்கும், தன்னோடு இருக்கின்ற தமிழ்நாட்டிற்கும் பயன்படுகின்ற முன்னேற்பாடுகளை செய்வதிலே நான் முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறேன். இறைவன் அருளால் முயற்சி வெற்றிபெற வேண்டுமென்று நம்புகிறேன்.

தொடர்ந்து தேய்ந்துவரும் தாங்கள் சார்ந்த காங்கிரஸ் கட்சிக்கு இந்தியாவில் எதிர்காலம் உண்டா?

இன்றைக்கு காங்கிரஸ் கட்சிக்கு இங்கு பல நெருக்கடிகள் ஏற்பட்டிருப்பது என்பது உண்மைதான். பொதுவாக காங்கிரஸ் கட்சி ஏறக்குறைய 130 ஆண்டுகள் கடந்த ஒரு இயக்கம். எழுபது, எழுபத்தைந்து வருடம் ஆட்சியில் இருந்த இயக்கம். இது நீண்ட நாட்களாக இருந்த காரணத்தினாலும், இது நீண்ட நாள் ஆட்சியில் இருந்த காரணத்தினாலும், காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருப்பதற்கு, அரசாங்கத்தை காப்பதற்கு பல மேடைகளிலே பல சமரசங்களை செய்துகொள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியினுடைய அடிப்படை கொள்கையிலேகூட சில நேரங்களில் முனைப்பாகவும், உறுதியாகவும் இருக்கமுடியாத சூழ்நிலையெல்லாம் ஏற்பட்டதோ என நான் அஞ்சுகிறேன். அதனாலே காங்கிரஸ் கட்சியினுடைய ஸ்தாபன அமைப்புகள் (டீசபயnளையவiடிn) கட்டுகுலைந்து போயின.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எல்லா ஊர்களிலும் இருந்த ஒரே கட்சி ‘காங்கிரஸ் கட்சி’ என்ற பெயர்தான். 1947க்கு பிறகு இரண்டு பொது தேர்தல்கள் காங்கிரஸ் கட்சியை விட்டால் வேறு கட்சியே கிடையாது. ஆனா, என்ன வித்தியாசம் என்று சொன்னால் அந்த காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய செல்வாக்கு இருந்ததன் காரணம்: தேசம் முழுவதும் ஒரே ஒரு கோரிக்கையான சுதந்திரம்தான். ஆகவே, அதை பிரதிபலிக்கக்கூடிய சக்தி காங்கிரசுக்கு இருந்தது. உ.பி யில் இருக்கிறவர்கள், தமிழ்நாட்டுல இருக்கிறவர்கள், வங்காளத்தில் இருக்கிறவர்கள் எல்லாரும் அரசியல் சுதந்திரம் வேண்டுமென்று கேட்டார்கள். காங்கிரஸ் கட்சி அரசியல் சுதந்திரத்திற்காக போராடியது. ஆகவே, காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய செல்வாக்கோடு இருந்தது. ஆனா, சுதந்திரம் பெறபெற மாநிலங்களின் தங்கள் உரிமைகளை அடிக்கடி கேட்க ஆரம்பித்த பிறகு, எல்லா மாநிலங்களுடைய உரிமைகள் பல இடங்களிலே வந்து ஒன்றுக்கொன்று மோதலை (ஊடிகேடiஉவ) ஏற்படுத்தின. அதாவது உதாரணமா காவேரி பிரச்சனை. நமக்கும் கர்நாடகாவிற்கும் மோதலை ஏற்படுத்தியது. அதேபோல பல்வேறு திட்டங்களை, முதலீடுகளைப் பங்கீட்டு கொள்வதிலே அரசாங்கத்தினுடைய மத்திய அரசாங்கத்தின், ஒன்றிய அரசின் திட்டங்களைப் பெற்றுக்கொள்வதற்கு ஒரு மாநிலத்திற்கு மாநிலம் போட்டி. மாநில உரிமைகளை வந்து அந்தந்த மாநில மக்கள் கேட்பது, இரண்டாவது மொழி அடையாளங்களை போற்றக்கூடிய ஒரு சூழ்நிலை. தமிழ்மொழி! அதை சுற்றியிருக்கக்கூடிய தாய்மொழிபற்று, சமஸ்கிருதம் படிக்க மாட்டேன், இந்தி படிக்க மாட்டேன் என்று நாம் சொல்லுகிற நமது தமிழகத்தினுடைய இந்த மண்ணின் வாசனை. ஆனால் இதனை உத்தரபிரதேசத்தில் உள்ள காங்கிரஸ்காரன் இப்படி சொல்ல முடியாது, இராஜஸ்தான்ல இருக்கிறவன் சொல்லமுடியாது. அகில இந்திய காங்கிரஸ் கட்சி சொல்ல முடியாது. அப்பொழுது என்ன ஆகிறது என்று சொல்லபோனால் இந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கும் மாநில மக்களுக்கும் உள்ள நெருக்கம் விட்டுப்போகக் கூடாது. மாநில கட்சிகள் பல இடங்களில் செல்வாக்கோடு இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில்தான் எப்படி சுதந்திரம் என்று ஒன்றை வைத்துக்கொண்டு, காங்கிரஸ் கட்சி ஒரு மிகப்பெரிய செல்வாக்குள்ள அரசியல் கட்சியாக இந்தியா முழுவதும் இருந்ததோ, இப்பொழுது பாஜக ‘இந்து மதம்’ என்ற ஒன்றை ஒரு மையப்பொருளாக வைத்து, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே கட்சியாக நடத்திவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் சொல்லுகிற இந்துமதமோ, அவர்கள் சொல்லுகிற வகுப்புவாதமோ உண்மையிலேயே இந்து மதத்தோட அடிப்படையான தார்மீக தத்துவங்களுக்கு முழுக்க முழுக்க எதிரானது என்பதை மக்கள் மத்தியிலே வெளிக்கொண்டு வருவதற்கான அந்த வாய்ப்பினை இந்தியாவிலுள்ள மற்ற அரசியல் கட்சிகள் இழந்துவிட்டார்கள். இப்பொழுது எப்படி தேர்தலோ, மற்றதோ நடத்தப்படுகிறது என்று சொன்னால் ஒரு ஊர்ல போய் நான் இந்து என்று சொல்லி ஒருத்தர் வாக்கு கேட்டால், அடுத்தவர் போய் நான் வந்து ஐ யஅ ய க்ஷநவவநச ழiனேர என்று சொல்லி தான் வாக்கு கேட்கிறார்களே ஒழிய, தேர்தலுக்கு எந்த மதம் என்பது தேவையில்லை. மக்களுடைய வாழ்வாதாரங்களைப் பற்றி பேசுவோம் என்கிற முன்னெடுப்புகளை பேசுவோம் என்பதைப் பற்றி எந்த அரசியல் கட்சியும் பேசமாட்டார்கள், நானும் அதைத்தான் சொல்கிறேன்.

இந்தியாவிலும் தமிழகத்திலும் வளர்ந்து வரும் பாஜகவின் மதப் பெரும்பான்மைவாதத்தை எப்படி எதிர்கொள்வது?

தமிழ் நாட்டிலே, தமிழக முதலமைச்சர் மதப் பெரும்பான்மைவாதத்தை வெற்றிகரமாக எதிர்கொண்டிருக்கிறார். இந்தியாவிலே பல இடங்களிலே உள்ளே நுழைய முடிந்த பாஜகவால், தமிழ்நாட்டிலே உள்ளே நுழைய முடியாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்றால், தமிழ்நாட்டிலே திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய தலைவர் பின்பற்றிய அந்த சூத்திரம்தான்.

அவர் என்ன செய்தார் என்று சொன்னால் மிக கவனத்துடன் இருந்து, பாஜகவுக்கு எதிராக, கொள்கை ரீதியாக இருக்கிற அத்தனை கட்சிகளையும் ஒரே தளத்திலே ஒருங்கிணைத்தார். அதற்காக பல சமரசங்களை செய்வதற்கு அவர் தயாராக இருந்தார்; விட்டுக்கொடுக்க தயாராக இருந்தார். தன்னுடைய சுய மரியாதை என்று கூட நினைக்கவில்லை. பல நேரங்களிலே பலருடைய வீடுகளுக்குச் சென்று கூட, அந்தத் தலைவர்களை பார்த்து அவர்களை நலம் விசாரித்து, அந்த கட்சிகளை ஒருங்கிணைத்து, அவர்கள் தகுதிக்கு மேலே சில இடங்களில் வந்து அவர்கள் தேர்தலில் போட்டியிட ஆசைப்பட்டாலும் கூட, அதையும் சில நேரங்களிலே விட்டுக்கொடுத்து அந்த அணியை கட்டுக்கோப்பாக வைத்தார்.

தேர்தலிலே வெற்றி பெற்ற பிறகும் கூட, அவர் வந்து அந்த அணியை விட்டுவிடவில்லை. அதற்குபிறகும் என்ன பன்றாருனா டாக்டர் ராமதாஸ் அவர்களைகூட போய் பார்க்கிறார். அவருக்கு வாழ்த்து சொல்கிறார், அவர் கேட்ட கோரிக்கையை நிறைவேற்றி கொடுக்கிறார். கேப்டன் விஜயகாந்த் வீட்டிற்கு போகிறார் அவர் கையில் பணத்தை வாங்குறார், நலம் விசாரிக்கிறார். ஏனென்றால் இவர்களெல்லாம் பாஜகவுல சேர்வது அந்த வகுப்புவாத சக்திகளை வந்து அடிமைப்படுத்துவதாகும். அதைவிடக்கூடாது என்று நினைத்து அதை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். இதை வந்து அகில இந்திய அளவில் செய்ய வேண்டும்.

அகில இந்தியளவிலே இதை போன்ற ஒரு அணியை உருவாக்குவதற்கான பொறுப்பும், கடமையும் காங்கிரசுக்கு இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் தான் இந்த நாட்டினுடைய பிரதமராக வருவதற்கு சகல தகுதிகளும் படைத்தவர் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. அவர் உடனடியாக அகில இந்திய காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்று, இந்தியாவிலேயே இருக்கின்ற மதச்சார்பற்ற ஜனநாயகத்தில் நம்பிக்கைகொண்ட, சமூக நீதியில் நம்பிக்கைகொண்ட, மாநில உரிமைகளை பாராட்டுகின்ற கட்சிகளையெல்லாம் ஒரு தளத்திலே சேர்த்து, ஒரு அணியை சேர்ப்பார் என்று சொன்னால் நிச்சயமாக பாஜகவை தோற்கடிக்க முடியும். ஏனென்றால் அவர்கள் 35 விழுக்காடுகளைப் பெற்று ஆறு மாநிலங்களிலேதான் அந்த வாக்கு வங்கிகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். 65 விழுக்காடு மக்கள் அவர்களுக்கு எதிராகத்தான் வாக்களித்திருக்கிறார்கள். ஆனால், அந்த 65 விழுக்காடு மக்கள் சிதறி சின்னாபின்னமாக கிடக்கின்ற காரணத்தினால், அவர்களே அந்த வாக்குகளை சிதறடிக்க முயற்சிகளை மேற்கொள்கின்றார்கள். காங்கிரஸை பலவீனப்படுத்தியதால் தான் அது நடக்கும் என்பதற்காக தொடர்ந்து காங்கிரசை பலவீனப்படுத்தியிருக்கிறார்கள். இதற்கான ஜனநாயக நிறுவனங்களை எல்லாம் செயலிழக்கச் செய்துவிட்டு, நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம், சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை உள்ளிட்ட அரசாங்கத்தினுடைய முகமைகள் அனைத்தையும், இதைபோன்ற பத்திரிகைகள், ஊடகங்கள், பெரும் ஊடகங்களையெல்லாம் பெரும் முதலாளிகள் கைப்பற்றி கொண்டார்கள். ஆகவே, இதையெல்லாம் தன் கையில் வைத்துக்கொண்டு, ஜனநாயகத்தை பெரும்பான்மைவாதமாக மாற்றுவதற்கு பாஜக முயற்சிக்கிறது. இந்த பெரிய ஆபத்தை உணர்ந்து எல்லா அரசியல் கட்சிகளும் தத்துவார்த்த ரீதியாக, கொள்கை ரீதியாக பாஜக-வை எதிர்க்கின்றவர்கள் தங்களுக்கு இடையிலே இருக்கின்ற சுவர்களை இடித்து எல்லாரும் ஒரு தளத்திலே இணைவதன் மூலமாகத்தான் பாஜகவை வீழ்த்த முடியும். அந்த முன்னெடுப்பை திரு. ராகுல் காந்தி அவர்களும், காங்கிரஸ் கட்சியும் செய்ய வேண்டும் என்பதுதான் எங்களை போன்ற மூத்த காங்கிரஸ் தலைவர்களின் விருப்பம், வேண்டுகோள்.

கிறிஸ்தவ சிறுபான்மையினரின் ஒரே வாரப் பத்திரிகையான ‘நம் வாழ்வு’ வார இதழோடு மிகுந்த நெருக்கமும் அக்கறையும் கொண்ட நீங்கள் நம் வாழ்வின் வளர்ச்சிக்காக சொல்லும் ஆலோசனைகள் என்ன?

‘நம் வாழ்வுப்’  பத்திரிகையோடு எனக்கு ஒரு நீண்ட நெடிய தொடர்பு உண்டு. அருள்தந்தை வின்சென்ட் சின்னத்துரை அவர்கள் இருந்த காலத்திலிருந்தே, அருள்தந்தை மதுரை ஆனந்த் அவர்கள் இருந்த காலத்திலிருந்தே, அருள்தந்தை டோமினிக் போனப் பிறகு, அடுத்து குடந்தை ஞானி என்னும் நீங்கள் இருக்கிற இந்நாள் வரைக்கும், நான் எல்லாருடனும் தொடர்பில் தான் இருக்கிறேன். நம்முடைய ஆயர்களிடம் நான் பலமுறை இதைப் பற்றிப் பேசி இருக்கிறேன். ‘நம் வாழ்வு’ப் பத்திரிக்கையில் அந்த விழா வருடாந்திரக் குடும்ப விழா நடத்துகிறபோது அங்கே ஆயர்கள் எல்லாம் வந்தாங்கன்னாச் சொல்லுவேன் இந்தப் பத்திரிக்கையை வந்து ஒவ்வொரு கத்தோலிக்கக் குடும்பத்திற்கும் சேர்க்க வேண்டியப் பொறுப்பை அந்தந்த மறைமாவட்ட ஆயர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு எவ்வளவோ வழிகள் இருக்கின்றன, திருமணத்திற்கு வந்து பயிற்சிக் கொடுக்கிறீர்கள்; திருமணத்திற்கு நீங்கள் பலவகையான நிபந்தனைகள் கொடுக்கிறீர்கள். இந்தப் பயிற்சி முடித்தால் தான் கல்யாணம்ன்னுச் சொல்லுகிறீர்கள். அப்ப அவர்களிடம், திருக்குடும்பம் அமைக்கப் போகும் புதுமணத் தம்பதியரிடம்               ‘நம் வாழ்வு’க்கு ஒரு சந்தா போடுங்க, ‘நம் வாழ்வு’க்காக ஒரு சந்தாப் போடுங்க என்று சொல்ல வேண்டும். ஆண்டுச் சந்தா 52 இதழ்களுக்கு ரூ.500 சந்தா என்பது  பெரிய காரியம் இல்லை, ஆனால், அந்தக் குடும்பத்திற்கு அந்த ‘நம் வாழ்வு’ போய்ச் சேர்ந்தால்தான் அந்தப் பழக்கம் வரும், அதைப் படிக்கக் கூடியப் பழக்கம் வரும்.

அதைப்போலவே தான் நான் மாதா டிவியையும் சொல்லுகிறேன், மாதா டிவியைச் செய்திச் சேனலாக மாற்றுங்கள். ஏனென்றால் நம்மைப் பற்றி தவறானக் கருத்துக்கள் நிறைய ஊடகங்களில் பரப்பப்படுகிறது. நாம் எவ்வளவோ தொண்டு செய்கிறோம், எவ்வளவோ சேவை செய்கிறோம், இந்த தேசம் நல்லா இருக்கனும் என்று நினைக்கிறோம், தமிழ்நாடு நல்லா முன்னேறனும் என்று நினைக்கிறோம், எல்லா மார்க்கத்தைச் சேர்ந்தவர்களும் ஒற்றுமையாக இருக்கனும், எல்லாருக்கும் உதவிப் பண்ணனும் என்று நினைக்கிறோhம். நம்முடையக் கல்வி நிறுவனங்களிலே எல்லா மதத்தைச் சார்ந்த மக்கள் படிக்கிறார்கள். நாம் நடத்துகிற தொண்டு நிறுவனங்களில் எல்லா மக்களும் பயன் பெறுகிறார்கள். ஆனால், இவ்வளவுச் செய்தப் பிறகும் கூட ஒரு குறிப்பிட்ட வலதுசாரி மதவாதச் சக்திகள் நம்மை வந்து மத மாற்றத்திற்காகத் தான் இவர்கள் எல்லாரும் இங்கே இருக்கிறார்கள் என்பதைப் போன்ற ஒரு பொய்த்தோற்றத்தை உண்டாக்குகிறார்கள். அவற்றை நீங்கள் எதிர்த்து வைக்கக்கூடிய வாதங்கள் என்ன? அதற்கான தரவுகள் என்ன? இது வந்து நம்ம ஆளுங்களுக்கேத் தெரியாது. ஆகவே, அதையெல்லாம் கொடுக்கக்கூடிய பத்திரிகை தான் நம் வாழ்வு. இது மட்டுமே போதாது. நம்முடைய மாதா தொலைக்காட்சி மாற வேண்டும். ஆகவே அதைச் செய்தி சேனலாக மாற்றனும். நம் வாழ்வு வந்து 15,000 சந்தாதாரர்கள்தான் என்று சொல்கிறீர்கள். இதைக் குறித்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன். ஐ யஅ எநசல ளயன யbடிரவ வை. குறைந்தது ஒரு இலட்சம் பத்திரிகையாவதுப் போகனும், ஒரு இலட்சம் பத்திரிகைப் போனால்தான் நல்லது. நீங்கள் இன்றைக்கு ஒரு சிறப்பான தலையங்கம் எழுதுறீங்க, செய்திகளைத் தர்றீங்க. ஒரு மறைமாவட்டத்தில நடக்கிற எல்லா விஷயங்களையும் மற்ற எல்லாரும் தெரிந்துக் கொள்ளுவார்கள். ஒரு ஆயர் என்னச் செய்கிறார்? நம்முடைய சபைகள் என்ன செய்கின்றன? கிறிஸ்தவ சபைகள் எல்லாம் ஒரு தனித் தனித் தீவுகளாக இருக்கின்றன. ஒரு ஒருங்கிணைந்த முயற்சி இல்லை. ஒரு பெரிய கல்வி நிறுவனங்களை நடத்தி, ஏராளமான மாணவர்களை வைத்து பெரிய அளவிலே செய்கிறார்கள். ஆனால், அவர்கள் எல்லாம் திரும்ப திருச்சபைக்கு என்னத் தருகிறார்கள் என்றுப் பார்த்தால் ஒன்றுமே தரவில்லை. அதைப் பற்றியெல்லாம் ஆயர் பேரவையும் யோசிக்கனும். தமிழகத்திலிருக்கிற கத்தோலிக்கத் திருச்சபையும் யோசிக்கனும். அவர்களை ஒட்டுமொத்த தமிழகத்திலுள்ள வளர்ச்சிக்காக பயன்படுத்துகின்ற சூழ்நிலையை உருவாக்க வேண்டும், இதற்கு நம் ‘நம் வாழ்வு’ வார இதழ் பயன்படும் என்று எண்ணுகிறேன்.

 

Comment