No icon

குடந்தை ஞானி

திருமணமான தம்பதியரின் ஒவ்வோர் அடியையும் வழிநடத்தும் இறைவன்

திருஅவையில் திருமணமான தம்பதியருக்கு, தான் வழங்கும் கிறிஸ்மஸ் கொடையாக, தன் நெருக்கத்தையும், தியானிப்பதற்குரிய வாய்ப்பையும் வெளியிடும் கடிதம் ஒன்றை திருக்குடும்ப திருவிழாவன்று தான் வெளியிட்டுள்ளதாக, நண்பகல் மூவேளை செபவுரைக்குப்பின் திருத்தந்தை பிரான்சிஸ் அறிவித்தார். திருமணமான தம்பதியர், தங்கள் பயணத்தில் நன்மைத்தனத்தின் பாதையில் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியையும் வழிநடத்தும் இறைவனின் கனிவையும் நன்மைத்தனத்தையும் வாழ்வில் உணர்வோம் என்ற அழைப்பையும் திருத்தந்தை பிரான்சிஸ் முன்வைத்தார்.

உலகம் முழுவதும் உள்ள குடும்பங்களுக்கென, கடிதம் ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளதாக உரைத்த திருத்தந்தை, குடும்பங்கள் குறித்த உலக கூட்டம் நெருங்கிவரும் இவ்வேளையில், இறைவேண்டல் வழியாக இதற்குத் தயாரிப்போம் என்ற அழைப்பையும் முன்வைத்தார். இன்றைய உலகில், குறிப்பாக, இத்தாலியில் தம்பதியர் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாமல் இருப்பது குறித்து ஆழ்ந்த கவலையையும் வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இது குறித்த விழிப்புணர்வு உருவாக்கப்பட்டு, வருங்கால ஆபத்திலிருந்து இந்த சமுதாயம் காப்பாற்றப்படவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் தேதி திருஅவையில் இடம்பெறவிருக்கும் உலக குடும்பங்கள் கூட்டத்திற்குத் தயாரிப்பாக, குடும்ப ஆண்டை அறிவித்துள்ள திருத்தந்தை, தற்போது, திருமணமான தம்பதியருக்கென வழிகாட்டுதல் கடிதம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். திருமண வாழ்வின் அனைத்து இடர்நிலைகளிலும், மகிழ்ச்சியிலும், எப்போதும் இறைவன் நெருக்கமாக இருக்கிறார் என்பதை நினைவூட்டியதுடன், கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் இக்காலத்தில், தானும் குடும்பங்களோடு, தாழ்ச்சியுடனும், பாசத்துடனும், உடன்நடந்து செல்வதாக திருத்தந்தை பிரான்சிஸ் அறிவித்துள்ளார்.

Comment