தவக்காலச் சிந்தனைகள்- COVID 19
புதிய ஆன்மீகம் தேடி (கொரோனா பின்னணியில்)
இந்த 2020 -ஆம் ஆண்டின் தப/வைர (ஸ்) காலம்; கொரோனா வகையைச் சார்ந்த வைரஸ் பரவி உலகெங்கையும் அச்சுறுத்;தும் வைரஸ் காலமாக மாறி விட்டது. இந்நாட்;களில்; நமது பாரம்பரிய பக்தி முயற்சிகளைக் தவறாது கடைபிடித்;து வருகின்ற தூய கத்தோலிக்கத் திருஅவையின் மக்களாகிய நமக்கு, நாம் பிறந்தது முதலே இதுவரை அனுபவித்;திராத மாறுபட்ட சூழ்நிலைக்கு ஆட்பட்டிருப்பது வருத்;தமளிக்கிறது. தவ நாட்களில் தவறாது ஆலயத்திற்குச் சென்று பக்தி முயற்;சிகளில் பங்கேற்று தவக்கால தியானக் கூட்டங்கள் சிலுவைப் பாதை பாவ சங்கீர்த்தனம்; திருப்பயணங்கள் என்ற நம் வழக்கமான நிகழ்வுகள் தடைபட்டு விட்டன. ஆலயத்;திற்குச் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டு மாதா தொலைக்காட்சி வழியாக திருப்பலி முதலான பக்தி நிகழ்;வுகளில் பங்;கேற்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். அதிலும்; புனித வார நிகழ்வுகளுக்குக் கூட ஆலயம் சென்று பங்கேற்க முடியாது என்ற செய்தி இன்னும் பேரிடியாக நம் செவிகளை வந்தடைந்துள்ளது. இந்த ஆண்டின் வித்தியாசமான தவக்கால சூழலை நமக்குள்ளே சென்று உள்ளார்ந்த விதமாக சிந்தித்துப் பார்க்கின்ற போது இந்த மாறுபட்ட தவக்காலம் நமக்கு மாறுபட்ட புதிய அனுபவத்தைத் தந்து மாற்றத்தை நோக்கிய புதிய வளர்ச்சி நிலைக்குக் கடந்து செல்ல அழைப்பு விடுக்கிறது.
புதிய அனுபவம்- புதிய சிந்தனை:-
இந்த தவக்காலம் புதிய அனுபவத்தை புதிய வளர்ச்சி நிலையை நோக்கி நம்மை இட்டுச் செல்கிறது. ஆம்! இதுவரை நாம் செய்து வந்த பக்தி முயற்சிகள் நம் ஆன்மீகத்தினுடைய துவக்க நிலை மட்டுமே. இந்த துவக்க நிலையை- முதற்படியை ஏறியுள்ள நாம் தொடர்ந்து ஏறிச் செல்ல முயலாமல் அல்லது தெரியாமல் அந்த நிலையிலேயே தங்கி விட்டோம் அல்லது தேங்கி விட்டோம். அடுத்த படியில் காலெடுத்து வைப்பது பற்றி.- அடுத்த நிலைக்குச் செல்வது பற்றிச் சிந்திக்கவில்லை. சிறு குழந்தைக்குக் கடவுளை அறிமுகம் செய்ய சாமி படத்தை அல்லது சுரூபத்தைக் காட்டி கும்பிடச் செய்கிறோம். வளர்ந்து பெரியவர்களான பின்பும் அந்தப் படத்தோடு- அந்தச் சுரூபத்தோடு மட்டுமே நம் பக்தியானது தேங்கிப் போய் நிற்கிறதே!. சுரூபத்தில் காண்கின்ற இயேசுவின் திருவுருவை உள்ளத்திற்குள் காணும் அடுத்த கட்டத்திற்கு-அடுத்த படிக்கு நாம் ஏறியிருக்கிறோமா?
காலம் வருகிறது; ஏன் வந்தே விட்டது! அப்போது உண்மையாய் வழிபடுவோர் தந்தையை அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில் வழிபடுவர்.
தம்மை வழிபடுவோர் இத்தகையோராய் இருக்கவே தந்தை விரும்புகிறார். கடவுள் உருவமற்றவர்
அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில் தான் வழிபட வேண்டும் என்றார்.(யோவான் - 4: 23- 24)
இந்த உரையாடலை இயேசு ஒரு பெண்ணிடம் பேசியதாக யோவான் நற்செய்தியில் வாசிக்கிறோம். அதிலும் தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த சமாரியப் பெண். அந்த காலகட்டம் பெண்களை மனிதர்களாகவே கருதாத நாயினும் கீழாக மதித்த சமுதாயம் வாழ்ந்தது. அப்படிப்பட்ட சமுதாயத்தில் அதுவும் கிணற்றடியில் தனியாக நின்ற பெண்ணிடம் பேசி மிகப் பெரிய ஆன்மீகத் தத்துவத்தை விளக்கியிருக்கிறார். பன்னிரெண்டு வயது சிறுவனாக இருந்த போது தம் பெற்றோருடன் யெருசலேம் ஆலயத்திற்குச் சென்றவர் மீண்டும் அவர்களோடு திரும்பாமல் அங்கேயே தங்கி யூத குருக்கள் மறைநூல் அறிஞர்கள் மத்தியில் உரையாடிமறைநூலுக்கு விளக்கம் அளித்தவர் அவர்களுக்கு விளக்கம் அளிப்பதெல்லாம் வீண் என உணர்ந்து இப்பொழுது இங்கே சாதாரணப் பெண்;ணிடம்; உரையாடி விளக்கம் அளிக்கிறார். அவள் தன் வாழ்க்கையில் பல கணவர்களைப் பெற்;றிருந்து அவர்களைப் பிரிந்தோ அல்லது இழந்தோ தற்போது கணவனல்லாத ஒருவருடன் வாழ்ந்து வருகின்ற அவளுடைய வாழ்க்கைப் பின்னணியையும் அவர் அறிந்திருந்தார். ஆனால் அத்;தகைய பெண் மறைநூலில் உள்ளபடி தம் முன்னோர் எவ்வாறு வழிபட்டு வந்தனர் என்பதையும் மெசியா வருவார் வந்து தங்களுக்கு மேலானவற்றைக் கற்பிப்பார் என்பதையெல்லாம் அறிந்திருந்து பேசுகின்ற திறத்தைக் கண்டு அவளோடு தொடர்ந்து பேசுகின்றார். இதுவரை தம்மைப் பற்றி வெளிப்படையாகக் கூறாத இயேசு அப்பெண்ணிடம் தாமே மெசியா என்பதை வெளிப்படையாகக் கூறுகிறார். கடவுளைச் சரியான விதத்தில் வழிபடுவது எவ்வாறு என்ற உயர்ந்த ஆன்மீகக் கொள்கையை அப்பெண்ணுக்கு விளக்குகின்றார்.
பாரம்பரிய கத்தோலிக்க கிறிஸ்தவர்களாகிய நம்முடைய ஆன்மீக முதிர்ச்சி நிலை எவ்வாறு உள்ளது? நம்முடைய வழிபாட்டு முறைகள் நம்மை ஆன்மீக முதிர்ச்சிக்கு இட்டுச் செல்லும் விதத்தில் அமைந்துள்ளனவா?. நமக்கு திருச்சபை வழியாக ஆன்மீக நடத்துநர்கள் பெற்றோர் பெரியோர் வழியாகக் கொடுக்கப்பட்ட போதனைகளை வழிகாட்டுதல்களை மனதில் உள்வாங்கி அவற்றை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருக்கிறோம். அது நல்லது தான். ஆனால் அதைத் தாண்டி அடுத்த கட்டத்திற்கு நாம் சுயமாக உணர்ந்து முன்னேறிச் செல்ல வேண்டிய ஞானத்தை ஆன்மீக முதிர்ச்சியைத் தேடிக் கண்டடையாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். விவிலியத்தை வாசிக்கின்ற போதும் தனிமையில் அமர்ந்து செபிக்கின்ற போதும் உள்ளத்தின் ஆழத்தில் ஆவியானவரின் செயல்பாட்டை உணர்கிறோமா?. நம் அன்றாட வாழ்வில் நம்முடைய விருப்பங்களுக்கு முதலிடம் தருவதை விடுத்து இறைத் திருவுளத்தை நாடித் தேடுகிறோமா? ஆன்மீகத்தில் ஊறித் திளைத்த நம் தமிழ் மண்ணின் ஆன்மீக வளத்தைத் தெரிந்து கொள்ள அவற்றைக் கற்றுக் கொண்டு நம்முடைய ஆன்மீகத்தை வளமடையச் செய்ய முயற்சி செய்திருக்கிறோமா?. நம் உள்ளத்தின் ஆழத்தில் இறைவன் உறைந்திருப்பதை உணர்வதே உண்மையான ஆன்மீகம். இக்கருத்தை அருமையாக பாடல்களாகப் பாடிச் சென்றுள்ளனர் ஆன்மீகவாதிகளான நம் தமிழ் முன்னோர்.
நெஞ்சம் உமக் கேயிட மாகவைத்தேன்
நினையாதொரு போதும் இருந்தறியேன்
தம் உள்ளத்தையே கடவுள் உறைவதற்குரிய கோவிலாக வைத்திருப்பதால் எல்லா நேரமுமே அவரின் பிரசன்னத்தை உணர்ந்து கொண்டேயிருப்பதாப் பாடுகிறார். கடவுள் உள்ளத்திற்குள் இருப்பதை உணர்வதால் அவரை மறப்பது அரிது. எனவே அங்கே பொய்மைக்கோ பேராசைக்கோ வஞ்சகம் சூது இவற்றிற்கோ இடமிருப்பதில்லை. மேலும்
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் என்றும்
காயத்துள் மெய்ஞ்ஞானக் கள்ளுண்ண மாட்டாதே
மாயக்கள் உண்டரென்று உந்தீபற
வறட்டுப் பசுக்களென்று உந்தீபற என்றும்
கடவுள் வாழும் ஆலயம் மனித உடலும் உள்ளமுமே என்பதை அருமையாகப் பாடியுள்ளார்கள். அதாவது காயம் என்றால் உடல். நம் உடலினுள் உள்ளத்தில் கடவுளைக் கண்டு கொள்வதே மெய்ஞ்ஞானக் கள் உண்பது. அதாவது மெய்ஞ்ஞானமாகிய வானக அமுதினை உண்பது. அதனைக் கண்டுணர்ந்து உண்ணத் தெரியாமல் வெளியார்ந்த பொருட்களிலே கடவுளைத் தேடுபவர்கள் அத்தகைய ஞான அமுதத்தைக் கண்டு கொள்ள முடியாத வறட்டுப் பசுக்கள் போன்றவர்கள். பசு- ஆன்மா. வறட்டுப் பசு - கடவுளின் உண்மை உருவினைக் கண்டுணராத ஞான வறட்சியுடைய ஆன்மா.
வறட்டுப் பசுக்கள் என்ற கூறியிருப்பது போல வெளியார்ந்த பக்தி முயற்சிகளில் மட்டுமே நம்முடைய ஆன்மீகமானது நிலைபெற்றுத் தேங்கி நிற்கின்றது. வெறும் அடையாளங்கள் மட்டுமே நம் ஆன்மீக வாழ்வை நிறைத்துக் கொண்டு நிற்கின்றன. சுரூபங்ளைத் தடவி முத்தி செய்வதும் சப்பரப் பவனி அதோடு கூடிய வெளி ஆடம்பரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதும் நம் திருச்சபையில் பாரம்பரியமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகின்ற வழிபாட்டு சடங்குகளில் கூட அதன் உள்ளார்ந்த பொருளைச் சரியாக உணராமல் கடமைக்கு வேடிக்கை பார்ப்பது போன்று பங்கேற்பதும் ஆகிய இவை யாவுமே மேலோட்டமான பக்தி முறைகளாய் அமைந்து விடுவதால் உள்ளார்ந்த ஆன்மீக வாழ்வுக்கு நிறைவான வாழ்வுக்கு நம்மை இட்டுச் செல்லவில்லை. நம்முடைய வானகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போன்று நாமும் நிறைவுடைய மக்களாக வாழ நாம் வழிநடத்தப்படவில்லை. செபம் வேறு வாழ்க்கை வேறு என இரண்டிற்கும் தொடர்பின்றி வாழ்கிறோம். மணிக்கணக்கில் ஆலயத்திலிருந்து செபித்து வந்த பிறகு மீண்டும் அதே கோப தாபங்கள் போட்டி பொறாமை வஞ்சகம் சூழ்ச்சி ஆகிய நம் மனப்பாங்குகள் மீண்டும் அதே இயல்புடன் நம்மை வந்து தொற்றிக் கொள்கின்றன. அதிலும் குறிப்பாக கடவுளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு வாழும் துறவிகள் கோவில் பூனை தெய்வத்துக்கு அஞ்சாது என்று சொல்லப்படுவது போன்று தங்களைக் கடவுளுக்கு மிக நெருக்கமானவர்களாகக் கருதிக் கொண்டு எத்தனையோ தியானங்கள் கருத்தரங்குகள் அன்றாடம் தவறாது கட்டளை செபங்கள் திருப்பலி இவற்றில் பங்கேற்று வந்தாலும் தனிப்பட்ட உள்ளார்ந்த வாழ்வில் எத்தகு ஆன்மீக முதிர்ச்சியும் இன்றி சிலர் வாழும் நிலையே காணப்படுகிறது. அன்றாடம் நாம் விமர்சித்து வரும் அரசியல்வாதிகளை விட இன்னும் கீழிறங்கிச் சென்று பட்டம் பதவி புகழ் இவற்றைத் தேடுவதிலும் பணத்தை பொருள்களை நேர்மையற்ற முறைகளில் சேர்த்துக் குவிப்பதையும் வெகு விமரிசையாகச் செய்து வருகிறார்கள். (ஆனால் இதில் விதிவிலக்காக துறவிகள் அருட்பணியாளர்கள் சிறந்த ஆன்மீகவாதிகளாக மக்கள் நலனுக்காகத் தங்களைக் கரைத்துக் கொள்பவர்களாக வாழ்கிறவர்களும் நிச்சயமாக பல பேர் இருக்கிறார்கள்.) இத்தகையோர் நம் உள்ளத்தில் இறைவன் எப்போதும் உறைந்துள்ளார் நம் உடல் இறைவன் வாழும் ஆலயம் என உணரத் தவறி நிற்கிறோம். அதனால்தான் நற்கருணையை நாம் பெறுகின்ற போது கூட நம் கரங்களில் பெறுவதை நாமே தீட்டாகக் கருதுகிறோம். பெரிய திருத்தலங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடும் இடங்களில் அறியாத பிற சமய மக்கள் யாரும் தவறுதலாகப் பெற்று, தவறாகப் பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்காக நாவில் பெற்றுக் கொள்ள வலியுறுத்தப்படுகிறது. ஆனால் நாம் வழக்கமாகச் செல்லும் ஆலயங்களில் அருட்பணியாளர்கள் நமக்குக் கைகளில் கொடுக்கத் தயாராக இருந்தும் நாம் பெற்றுக் கொள்ளத் தயங்குவது ஏன்?. நாவில் பெற்று உள்ளே உட்கொள்ளும் நாம் நமது கரங்களைத் தீட்டாகக் கருதுவது ஏன்?. தன் தாயின் கருவில் பத்து மாதங்கள் உருப்பெற்று உதிரத்தை உணவாக்கி வளர்ச்சி பெற்றுப் பிறந்தவர்கள் பிறகு தான் பிறந்த கருவறையையும் வெளிவரும் உதிரத்தையும் தீட்டெனக் கருதி அந்தத் தாய்மையை பெண்மையை இரண்டாம் பட்சமாக ஓரங்கட்டி ஒதுக்கி வைக்கும் உணரா ம(h)க்களைக் கொண்ட சமுதாயத்தில் வாழ்கிறோமல்லவா?.
எனவே கோயிலுக்குச் செல்வதோ திருவிழாக்கள் கொண்டாடுவதோ நம் பாரம்பரிய பக்தி முயற்சிகளில் செல்ல வேண்டிய பாதையைக் காட்டுவதற்காக நிறுத்தப்பட்டுள்ள வழிகாட்டும் பெயர்ப்பலகையைப் பார்த்தவுடன் இது தான் ஊர் என எண்ணி அந்தக் கம்பத்தைப் பிடித்துக் கொண்டே நின்று விடுவோமா? அந்தப் பெயர்ப் பலகை வழிகாட்டும் திசையில் தொடர்ந்து பயணித்து ஊருக்குள் செல்வோமல்லவா! அதுபோலத் தான் நாம் இப்போது பிடித்துக் கொண்டிருக்கின்ற அடையாளங்களும் வெளியார்ந்த நம்முடைய பக்தி முறைகளும். இவை கடவுளைத் தேடி கண்டுகொள்வதற்கு நமக்கு வழிகாட்டும் வழிகாட்டுக் கம்பங்கள் போன்றவையே. நாம் போற்றி வணக்கம் செலுத்துகின்ற அன்னை மரியாளும் புனித அந்தோணியார் முதற்கொண்ட சகல புனிதர்களும் பரம்பொருளாம் கடவுளை நோக்கி நாம் பயணிக்க நமக்கு வழிகாட்டக் கூடிய வழிகாட்டிகளே! புனிதர்களுக்குச் செய்யும் பக்தி முயற்சிகளோடு நாம் நிறைவடைகின்ற போது வழிகாட்டும் கம்பங்களைப் பிடித்துக் கொண்டே தங்கி விடுகிறவர்களாகிறோம். அவர்கள் நமக்கு கடவுளை நோக்கி வழிகாட்டுகின்ற திசையில் நாம் பயணிப்பதில்லை. அதாவது அவர்கள் வாழ்க்கையில் விளங்கிய புண்ணிய மாதிரிகைகளை இன்னல்களிலும் துன்பங்களிலும ; இறைத்திருவுளத்தை வாழ்ந்த அவர்களின் வாழ்வு முறையை நாம் பின்பற்றுவதில்லை. நம்முடைய தேவைகளை உடனுக்குடன் பெற்றுத் தரக்கூடிய நம் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி வைக்கக் கூடிய அட்சய பாத்திரங்களாகவே அவர்களை நாம் பார்க்கிறோம்.
இத்தகைய நிலையிலிருந்து மாற்றம் பெற்று வளர்ச்சி காண நம்முடைய ஆன்மீக நிலையின் அடுத்த கட்டத்திற்குக் கடந்து செல்ல சரியான வாய்ப்பாக இந்த 2020 தபஸ் காலம் வைரஸ் தொற்று பரவலின் காலமாக மாறி நம்மை வழக்கமான பக்தி முயற்சிகளிலிருந்து தவிர்த்து தனிமைப்படுத்தி வைத்துள்ளது. இதுவும் இறைவன் நமக்குத் தந்துள்ள அரிய வாய்ப்பே! இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி நமக்குள்ளே உள்நோக்கி ஆழமாகப் பயணிப்போம். எத்தனையோ பேர் இந்த கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு மடிகின்ற வேளையில் நம்மை உயிருடன் இறைவன் காப்பாற்றி வைப்பார் என்றால் நிச்சயமாக இந்த மனமாற்றத்தோடு கூடிய புதிய வாழ்வு முறைக்கு ஆழ்ந்த ஆன்மீக நிலைக்கு நாம் கடந்து செல்வதற்காகவே! எவ்வாறு குடும்பம் உறவுகளை மறந்து தொழில் சம்பாத்தியம் என்று அலைந்தவர்கள் எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்து விட்டு குடும்பத்தினருடன் தங்கி அன்பான குடும்ப வாழ்வுக்குள் உந்தித் தள்ளப்பட்டார்களோ அதிகாரம் பதவி என ஆட்டிப்படைக்க நினைத்தவர்கள் நம்முடைய வாழ்வும் நிரந்தரமற்றது என அச்சம் கொள்ள ஆரம்பித்தார்களோ கடவுளைத் தொழுவது வீண் வேலை என நினைத்தவர்கள் கடவுளே எங்களைக் காப்பாற்ற மாட்டீரா எனக் கதறி கண்ணீர் விட ஆரம்பித்தார்களோ! அதே போல் நாமும் நம் கடந்த கால வாழ்வைப் புதுப்பித்து புதிய வாழ ;வை நோக்கி வழிகாட்டும் புதிய ஆன்மீகத்திற்குள் கடவுள் விரும்பும் உண்மையான ஆன்மீகத்திற்குள் அடியெடுத்து வைக்கும் ஓர் உன்னதமான தவக்காலமே இந்த 2020 - ஆம் ஆண்டின் தவக்காலம். இறைமகன் இயேசு சமாரியப் பெண்ணுக்குக் கூறியவாறு கடவுளை அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில் வழிபடுகின்றவர்களாக நம் தாயும் தந்தையுமான இறைவனின் திருவுள விருப்பத்திற்கு ஏற்ப நம் உள்ளங்களை அவர் விரும்பி உறையும் ஆலயமாக்கிட ஆன்மீக முதிர்ச்சி பெற்றிட வழிகாட்டும் உன்னத காலமாக இத்தவக்காலத்தைக் கொண்டாடுவோம். கிறிஸ்துவின் உயிர்ப்பு நம் உள்ளங்களில் நிகழ்ந்து பேரொளி நம்முள் சுடர்ந்து ஒளி வீசட்டும்! ஆமென்!.
---
Comment