No icon

நம் வாழ்வு சிறப்பிதழுக்கான வாழ்த்துரை

16வது உலக ஆயர்கள் மாமன்றம் - 2023

மாமன்ற செயல்பாடுகளில் பங்கேற்கவுள்ள நாம் அனைவரும் இந்நாட்களில் தூய ஆவியானவரின் வழிகாட்டுதலால் தூண்டப்பெற்றுச் செயல்பட உங்கள் ஒவ்வொருவருக்காகவும் நான் செபிக்கின்றேன், நீங்களும் இதற்காக செபித்திட அன்போடு கேட்டுக்கொள்கின்றேன். இந்த மாமன்றம் குறித்துக்காட்டும்கூட்டொருங்கியக்கப் பயணம் ஒவ்வொரு மறைமாவட்டத்திலுள்ள எல்லாப் பங்குகளிலும், ஆழமான ஒன்றிப்பு (deeper communion), முழுமையான பங்கேற்பு (fuller participation), நற்செய்தி பணிவாழ்வுக்கு நம்மை முழுமையாகத் தந்திடுதல் (greater openness to fulfilling our mission in the world) என்னும் கருப்பொருள்களின் அடிப்படையில் நாம் எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறோம் என்றும், இன்னும் எவற்றில் நாம் வளர்ந்திட வேண்டும் என்றும் உங்கள் அனைவரின் மேலான கருத்துகளையும் தந்திட வேண்டும். உங்கள் அனைவரின் குரலுக்கும்செவி சாய்க்க உங்கள் மேய்ப்பர்கள் என்னும் நிலையில் நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

இவ்வுலகில் நாம் தனித்து நடப்பவர்கள் அல்லசேர்ந்து பயணிக்கவே நாம் அழைக்கப்பட்டிருக்கின்றோம் என்றும், இன்னும் எவற்றில் நாம் வளர்ந்திட வேண்டும் என்றும் உங்கள் அனைவரின் மேலான கருத்துகளையும் தந்திட வேண்டுகின்றேன். உங்கள் அனைவரின் குரலுக்கும்செவி சாய்க்கஉங்கள் மேய்ப்பர்கள் என்னும் நிலையில் நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

 கோவிட்-19 பெருந்தொற்று போன்றவைஉலகளாவிய சமூகமாக (Global Community) நம்மை மீண்டும் அடையாளப்படுத்தியிருக்கிறது. ஆக, நிகழ்காலத்தின் அறிகுறிகளுக்கு மத்தியில், திருஅவைக்கு கடவுள் விடுக்கும் அழைப்பை வாழ்வதற்காகவும், நமது மனநிலைகளையும், திருஅவையின் கட்டமைப்புகளையும் புதுப்பிக்கவும் ( To renew our mentalities and our ecclesial structures in order to live out God’s call for the Church amidst the present signs of the times) நாம் மேற்கொள்ளவிருக்கும் இம்மாமன்றச் செயல்பாடுகள் நமக்கு உதவிடும் என்பதில் ஐயமில்லை.

இன்று ஒவ்வொரு தலத் திருஅவையிலும் (பங்கிலும், மறைமாவட்டத்திலும்) “ஒன்றிணைந்த பயணம் என்பது எப்படி நடக்கிறது? நாம்ஒன்றாகப் பயணம் செய்வதில் வளர்ந்திட என்னென்ன முயற்சிகளை எடுக்க ஆவியானவர் நம்மை அழைக்கிறார்? (What steps is the Spirit inviting us to take in order to grow as a synodal Church?) என்னும் அடிப்படை கேள்விதனை (D.26) மனதில் தாங்கி, பங்கு அளவில், அன்பியங்களில், நிறுவனங்களில், துறவற இல்லங்களில், பக்தசபைகளில், இளையோரிடத்தில், சிறுவர்களிடத்தில் இன்னும் சிறப்பாக ஓரங்கட்டப்பட்டவர்களிடத்திலும் திருஅவையை விட்டு ஒதுங்கி இருப்போரிடத்திலும் கருத்துகளை கேட்டறிந்து அதை முறையாகக் குறிப்பெடுத்து பங்குத்தந்தை வழியாக ஒவ்வொரு மறைமாவட்டத் தலைமைச் செயலகத்திற்கு அனுப்பப்படும்.

இம்மாமன்றம் குறித்து ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் ஏறெடுக்கப்படும் பரப்புரைச் செயல்பாடுகளிலும், கருத்தரங்குகளிலும், கலந்தாய்வுக் கூட்டங்களிலும், கருத்துக் கேட்டல் நிழ்வுகளிலும் இறைமக்கள், துறவியர், குருக்கள் என எல்லாரும் ஆர்வத்துடனும், ஈடுபாடுடனும் பங்கேற்று திருஅவை புத்தாக்கம் பெற்றிட உங்கள் தனிப்பட்ட பங்களிப்பினை இந்நாட்களில் நல்கிட அன்புரிமையுடன் வேண்டுகின்றேன். இந்த மாமன்றப் பயணமானது 5 படிநிலைகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. தயாரிப்பு நிலை (Preparation phase), பயிற்சி அளித்தல் நிலை (Training phase), கருத்துக் கேட்டல் நிலை (Consulation phase), தரவுகளைப் பகுப்பாய்வு செய்யும் நிலை (Consolidation phase), கருத்துகளை அனுப்பும் நிலை (Dispatching phase) என்பதாகும்.

இறைமக்களின் நம்பிக்கையை மலரச் செய்யவும், காயங்களைப் பிணைக்கவும், புதிய மற்றும் ஆழமான உறவுப்பாலங்களை உருவாக்கவும், எண்ணங்களைப் பிரகாசமாக்கவும், இதயங்களை கதகதப்புடன் வைத்திடவும் மற்றும் நமது பொதுவான மறைப்பணிகென நம் கைகளுக்கு வலிமையை மீட்டெடுக்கவும் (PD. 32) நாம் ஏறெடுத்துள்ள இம்மாமன்றச் செயல்பாடுகள் ஒவ்வொரு தலத் திருஅவைக்கும் பேருதவியாக இருந்திடும் என்று நான் உளமாற நம்புகிறேன்.

இத்திருப்பணிகளில் தூய ஆவியார் நம் உடனிருப்பாராக. ‘நம் வாழ்வுவழியாக வெளிவரும் இச்சிறப்பிதழுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றேன். ஆசீருடன்...

+ மேதகு முனைவர் அருள்செல்வம் இராயப்பன் D.D., D.C.L..

ஆயர், சேலம் மறைமாவட்டம்

Comment