No icon

மேதகு ஆயர். ஸ்டீபன், தூத்துக்குடி மறைமாவட்டம்

‘கிறிஸ்மஸ்’ சொல்லும் சேதி

கிறிஸ்மஸ் என்பது ஒரு கடவுளின் பிறப்பு. இன்று அது பல பரிமாணங்களைக் கடந்து மிஞ்சி நிற்கிறது. அதன் ஆழம் அகலம் என்வென்பதுதெரியாத பொருளாயிருக்கிறது. எனினும், மனித அனுபவத்துக்கும் அறிவுக்கும் எட்டுதற்போல அவரவர்கள் அந்தபிறப்பைப் பார்த்து மகிழ்கிறார்கள்.

1. ஒரு குழந்தையின் பிறப்பு

இன்று இயேசுவின் பிறப்பு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. அது எல்லாராலும் கொண்டாடப்படுகிறது. ஏனெனில், அக்குழந்தை எல்லாருக்கும் எல்லாமுமாய் ஆனது. மனிதனான கிறிஸ்து பிறப்பில் ஒரு குழந்தையின் பிறப்பை மட்டுமல்ல மனுக்குலத்தின் பிறப்பே இங்கு கொண்டாடப்படுகிறது. இவர்பிறக்கும் போது இவரைதீவனத் தொட்டியில் கிடத்தினர்என்பர். ஆனால், பிரபஞ்சமே கொள்ள முடியாத இவர் ஒரு மாட்டுத் தொழுவத்தில் பிறந்தது பலருக்கு ஒரு விந்தையாக உள்ளது. இம்மாமன்னரின் தரிசனம் ஏழைகளுக்கும் கிடைத்தது, ஞானிகளுக்கும் கிடைத்தது.

அப்படியெனில் மனிதனாய் பிறந்ததெய்வம்

ஏழைகளுக்கும், ஏற்றமிக்கோருக்கும் காட்சியளிக்கிறார். ஆனால், அவர்கள் தூய உள்ளத்தினராயிருக்க வேண்டும். ஏழையாயினும் செருக்குக் கொண்டால் கடவுளைக் காணமுடியாது. செல்வந்தனாயினும் தூய உள்ளம் கொண்டால் ஆண்டவரின் தரிசனம் அவருக்குக் கிடைக்கும். எனவே தூய உள்ளமே இறைவனின் தரிசனம் பெறும் (மத்.5:8)

2. இலவசப் பரிசு

இயேசுவைக் காசில்லாமலே காணலாம். வேசமில்லாமல் தான் அவரை நேசிக்க முடியும். இயேசுவின் பிறப்பில் கடவுள் அருள் பொங்கி வழிகிறது. அவர் மனிதனை சந்திக்க வருகிறார். மனிதனின் மத்தியில் தங்கியிருப்பதிலே அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

மனிதன் மடையனாயிருந்தாலும்

மாற்றுத்திறனாளியாயிருந்தாலும்

மயக்கத்தில் மிதந்தாலும்

மனிதநேயமன்றிப் போனாலும்

தவறிழைத் தாலும் ஆண்டவர் அவனைக் கைவிடுவதில்லை என்பதுதான் இயேசு பிறப்பின் பொருள். இயேசுவுக்குஇம்மானுவேல்என்றும் பெயருண்டு. அதற்குக்கடவுள் நம்மோடுஎன்பதாகும். கடவுள் மனிதனை அதிகமாக அன்பு செய்ததின் வெளிபாடுதான் கிறிஸ்மஸ். அன்பு இலவசம் தானே!

3. மனிதனும் புனிதனே:

கடவுள் மனிதனோடிருந்தால் அவன் புதிய மனிதனாகிறான், புரட்சிக் கருத்துக்களை விதைக்கிறான், புனிதத்தைக் கனியாகத் தருகிறான். உலகெங்கும் உயிர்தரும் வற்றாத ஆறு பாய்ந்துகொண்டேயிருக்கும்.

உண்மைபேசும் மனிதனில்

நீதியைச்சொல்லும் வாழ்வினில்

அன்பைப் பேசும் உள்ளத்தில் அவர்

களிநடனம் புரிகிறார். ‘மனிதன் புனிதனே

4. உடம்பில் உறையும் தெய்வம்

ஒவ்வொரு மனிதரிலும் கடவுளின் கரிசனை பொங்கிவழிகிறது. ஒவ்வொரு மனிதரிலும் அவர் குடி கொள்கிறார். இந்தஉடம்பில் கடவுள் வாசம் செய்கிறார். இதைப் பேணவேண்டும். எந்த மனிதனின் உடம்புஅடியின் வலியில் துடிக்கிறதோ, நோயின் பிடியில் வாழுகிறதோ, உறவின் முறிவால் அழுகிறதோஅவனில் கடவுளும் துடிக்கின்றார்.

நமது தமிழ் மறையும்

உடம்பினை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனேஎன்றும்

உடம்பினை முன்னும் இழுக்கென்று இருந்தேன்

உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்

உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று

உடம்பினையார் இருந்துஒப்புகின்றேனே

என்றும் கூறும் வார்த்தைகள் விவலியத்தை எதிரொலிக்கின்றன. இக்கூற்று எப்படி நமது உடம்பு இறை உறையும் கோயிலாகிறது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

நீங்கள் கடவுளுடைய கோயில் என்றும், கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா? ஒருவர் கடவுளின் கோயிலை அழித்தால் கடவுள் அவரைஅழித்துவிடுவார். ஏனெனில் கடவுளின் கோயில் தூயது. நீங்களேஅக்கோயில். (1 கொரி. 3:16).

உங்கள் உடல் கிறிஸ்துவின் உறுப்புகள்நீங்கள் உங்களுக்கு உரியவரல்ல, கடவுள் உங்களை விலைகொடுத்து மீட்டுள்ளார். எனவே உங்கள் உடலால் கடவுளுக்கும் பெருமைசேருங்கள்: (1கொரி 6:15, 19,20) என்றுபவுல் கூறுகிறார்.

5. உடல் புனிதத்தின் வாய்க்கால்

பாழாய்ப்போன உடம்பு என்றும் அது நம்மை சிறைவைக்கும் இருட்டறை என்றும், பாவத்தில் நம்மை விழத்தாட்டும் சக்தி என்றும் சாத்தானென்றும் தீயதாகப் பார்ப்பதை கிறிஸ்மஸ் விரட்டியடிக்கிறது.

இந்த உடம்பைக் கொண்டிருந்த இயேசுதான் தன் கரங்களால் மக்களைஆசீர்வதித்தார். கால்களால் நடந்துசென்று நோயாளிகளை சந்தித்தார். திருவாய் மலர்ந்து போதனைகள் தந்தார். இந்த உடம்பை புனிதத்தின் வாய்க்காலாக மாற்றியவர் இயேசு.

எந்தபாவத்துக்கும் பிராயசித்தம் செய்வதுநமதுஉடம்பே.

இயேசு தனது ஊன் உடலில் ஏற்றகாயங்கள் வழியாக இந்தஉலகின் பாவங்களைத் தகர்த்தெரிந்தார்.

எனவே, உடலை தீய செயலுக்குப் பயன்படுத்தக் கூடாது.

திருடு, கொலை, கொள்ளை, புறணி, அவதூறு அனைத்தும் மனிதனைக் கொல்லும் நஞ்சு. உன் உடம்பு தீயதா? நல்லதா?

அந்தமுடிவைச் சொல்பவர்நீதான்?

கிறிஸ்மஸ் அதாவது இன்றுகிறிஸ்து பிறப்பது உன் கையில்.

உனது உள்ளம் தூய்மையானால்

உனது உடம்பில் கள்ளமில்லையெனில்

இயேசு உன்னில் பிறக்கிறார்.

அனைவருக்கும் கிறிஸ்து பிறப்புவாழ்த்துக்கள்! புலரும் புத்தாண்டுமகிழ்வாய் அமையட்டும்!.

Comment