No icon

வாட்டம் போக்கும் வசந்தம்

புனிதமிகு தவக்காலம் வந்து விட்டது. இது சாம்பலை அடையாளமாக்கிக்கொண்ட சோகத்தின், சாபத்தின் காலமல்ல. சோத னையை முன்வைத்து சோர்வைக் கட்டாய
மாக்கும் சோகைக் காலமுமல்ல. பாவிக்கும் பாவத்திற்கும் ஒதுக்கப்பட்ட ஒடுக்கத்தின் காலமுமல்ல.
இது இழப்பின் காலமுமல்ல, இறப்பின் காலமுமல்ல. இது சிலுவையைக் கட்டிப்பிடித்து அழுகின்ற காலமல்ல, சிரமங்களை வருவித்துக் கொள்ளும் வாட்டத்தின் காலமுமல்ல. 
‘லெண்ட்’ என்று அயல் மொழிகளில் அழைக்கப்படும் தவக்காலத்தின் பொருள் ‘வாட்டம்’ அல்ல, மாறாக ‘வசந்தம்’ என்பதாகும்.
நம் உள் நிலையையும் நம் உண்மை நிலையையும் நம் உறவு நிலையையும் அலசி சீராய்வுக்குட்படுத்தும், நம்மில் மண்டிக்
கிடக்கும் அழுக்குகளையும், மன்னிப்புப் பெற வேண்டிய பாவ நிலைகளையும், மாற்றப்பட
வேண்டிய வாழ்வுமுறைகளையும், ஈடு செய்யப்
பட வேண்டிய தீமையின் விளைவுகளையும், கூர்மைப்படுத்தப்பட வேண்டிய மழுங்கிய மனச்சான்றுகளையும் இறைவார்த்தையின் வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் காலம்.
நம்மை நாமே அருளடையாளங்களின், குறிப்பாக ஒப்புரவு அருளடையாளத்தின் ஆற்றலுக்குட்படுத்தி, விழத்தாட்டுகின்ற தீமைகளின் சரிவு சாய்வுகளில் அரங்கேறும் தனிமனிதத் தடுமாற்றங்களையும் சமூகச்
சீரழிவுகளையும் தாழ்ச்சியுடனும் உண்மை யுடனும் ஏற்றுக்கொள்ளும் காலம். இறை வனின் காருண்ய அன்பில் கரைந்து, நமக்கு
நாமே ஒரு புதிய நம்பிக்கையைத் தொகுத் தெடுத்துக்கொண்டு, ஆழமாகும் செபம், பிறர் நலம் விழையும் ஈகை, இரக்கம், தன்மறுப்புநிறை ஒறுத்தல் நோன்பு - ஆகிய மூன்று மரபு நாண்களால் பின்னியெடுத்து  நாம் தேர்ந்து மேற்கொள்ளும் தவ முயற்சி, அதனால் நாம் பெறும் அருள்நிலை பயிற்சி, அதன் விளைவாக நாம் அடையும் முழு மனித வளர்ச்சி ஆகியவற்றை, நமக்குச் சாத்தியமாக்கும் காலம். ஆவியில் கனிந்த முதிர்ச்சி சிலுவை
வழியில் நாம் வென்றெடுக்கும் இறை யாட்சிக்குரிய மகிழ்ச்சி - என்று உயிர்த்
தெழுந்தவரோடு புதுவாழ்வுக்கு உயிர்த் தெழுந்து ஆவியின் புனிதநிலையில் உயர்ந்து
வாழ வழங்கப்படும் வாய்ப்பும் வரங்களும்தான் ஆண்டுதோறும் நம்முன் விரித்து வைக்கப் படும் தவக்காலம். 
தேவையானது துப்புரவு மட்டுமேயல்ல, ஒப்புரவும்தான். கிழிக்கப்பட வேண்டியது உடையல்ல, உள்ளம். உணர்வில் கண்ணீர் உகுத்து கரைவதல்ல தவநெறி தத்துவம், சிலுவையில் காயம் ஏற்று (பாவக்), கடன் செலுத்துவது நோன்பின் இலட்சியம். 
இறைவன் விரும்புவது வலிமிகு பலி
ஆவியின் புதிய தென்றல் நம்மைத் தழுவும் இந்நாள்களில் நாம் அடைந்த புதிய தெளிவு, கண்ட
புதிய கனவுகள், பெற்ற புதிய பார்வை, வளர்த்தெடுத்த புதிய நம்பிக்கை, ஈட்டிக்கொண்ட புதிய உத்வேகம்,
செய்துகொண்ட புதிய அர்ப்பணம், உருவாக்கிக் கொண்ட திட்டவட்டமான தீர்மானங்கள் - இவற்றின் விளைவாக, புனிதத்தைத் தழுவிக்கொண்டு, திக்குத் தெளிந்த, தீர்க்கம் நிறைந்த பாதையில் வழுவாது பயணிப்பதை இந்த 40 நாள்களில் நமது வழக்கமான பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். இதன் பயனாக, தொடர்கின்ற 365 நாள்களும் அதையே வாடிக்கையான வாழ்வாக
முறையாக்கிக் கொண்டு, நம் வாழ்நாளின் ஆண்டுகளாக
ஒவ்வொன்றையும் மீட்பின் நலன் களுக்குட்படுத்தி அமைத்து, நம் வாழ்வு முழுவதையும் பேறுடையதாய் ஆக்கிக்கொள்வோம். 
உயிர்ப்பின் மக்களாவோம்!
உயிர்த்தவரில் உயர்ந்து மகிழ்வோம்!
     தரிசு நிலமாய்க் கிடக்கும் என்னைப் பரிசு நிலமாய் மாற்றும் இறைவா
    தீயவன் என்னில் களைகளை விதைப்பதில் கருத்தாய் இருக்கிறான். பதுங்கி வாழ்கிறான் மறைந்து செயல்படுகிறான் - அந்தோ களைகள் ஓங்கி வளர்கின்றனவே!
    பகைவன் வந்து களைகளைப் பயிராய் விதைத்தான் - ஐய்யா உம் நிலத்தை, என் நலத்தைக் கெடுத்தானே
    களைகள் உடன் வளர அனுமதித்தீரே - காரணம், தீயவன் அழிய வேண்டும் என்பதைவிட  நல்லவன் வாழ வேண்டும் என்பதே உம் திருவுளமன்றோ 
    பதராய் வாழும் என்னைப் பதமாய் எடுத்துப் பலன் தரச் செய்குவாயா ஐயனே!

Comment