No icon

4. கடவுளோடு ஒப்புரவாவோம்

தவக்காலத் தொடர்

1.பாவங்களை அறிவோம்
அறிவியலும் தொழில்நுட்பமும் மட்டுமல்ல; நாம் வாழும் இக்காலத்தில் பாவங்கள், அக்கிரமங்கள், அநியாயங்கள், ஊழல்கள், இலஞ்சம்... இவை யாவும் இமயம் போல் வளர்ந்து பெருகியுள்ளன. நமது கைப்பேசியின் தொடுதிரையைத் தொட்டாலே என்னென்னவோ அசிங்கங்கள்  அரங்கேறுகின்றன.
பாவம் பற்றிய உறுத்தலை, மனிதன் இன்றைக்கு இழந்து நிற்பதை ‘ஐயோ பாவம்’ என்கிறார் ஓர் இறையியல் அறிஞர். தான் செய்வது தவறு என்கிற உணர்வு இன்றி, இதைத்தானே எல்லாரும் செய்கிறார்கள்; நானும் செய்தால் என்ன? என்கின்ற, நியாயப்படுத்துகின்ற எண்ணங்கள் நம்மில் மேலோங்கி நிற்கின்றன.
அகப்பட்டுக் கொள்ளாதே! முடிந்தவரை சுருட்டு! பிடிப்பட்டால்தான் திருடன். பிடிபட வில்லை என்றால் அவன் சமூகத்தின் பெரிய மனிதன் என்கின்ற வெளிவேடம் இங்கே மிகவும் மலிந்துவிட்டது.
சிறையில் உள்ள எல்லாரும் குற்றவாளிகளு மல்ல, வெளியில் சுதந்திரமாய் சுற்றித் திரிபவர்கள் எல்லாரும் யோக்கியர்களும் அல்ல என்பதுதான் இன்றைய யதார்த்தம்.
ஆண்டிற்கு ஒருமுறையாகிலும் ஒப்புரவு
அருளடையாளத்தில் பங்கு பெற்று அருள்பெற, தாய்மையில் நடைபயில திருஅவை அறிவுறுத்து கின்றது. ஆனால் பாவம் மலிந்த இவ்வுலகில் பாவிகளாகிய நாம் ஆயுளுக்கு ஒருமுறையாவது ஒப்புரவு அருளடையாளம் பெறுகிறோமா? என்பதே கேள்வி. 
வாரம் ஒருமுறை ஒப்புரவு அருளடையாளம் பெறுவது நல்லது என்கிறார் நம் திருத்தந்தை பிரான்சிஸ். ஆனால் வாரம் ஒருமுறை ஒப்புரவு அருளடையாளத்தில் பங்கு பெறும் பலர் அதை வாடிக்கையாக, வெற்றுச் சடங்காக மட்டுமே அணுகுகின்றனர். 
விவிலியப் பின்னணியில் பாவம் பற்றிய சரியான புரிதல்கள் நமக்குத் தேவை. இன்றைக்குப் பலர் பாவம் என்கின்ற வார்த்தையை விலக்கி, ஒதுக்கி விடுகின்றனர். மேலும் அந்த இடத்தில் அதற்கு இணையாக குற்றம் என்கின்ற வார்த்தையைப் பயன்படுத்தி அதன் கனாகனத்தைக் குறைக் கின்றனர். 
வெறுமனே, “கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்” என்று சொல்வது போதுமானதல்ல என்பது என் கருத்து. நமது பாவங்கள் கடவுளுக்குத் தெரியாதா? என்பர் சிலர். ஆதலால் பொதுவான அறிக்கை போதும் என்பது அவர்கள் கருத்து.
நமது பாவங்கள் கடவுளுக்குத் தெரியும் தான். ஆனால் பாவ அறிக்கை செய்து அப்பாவங்களை நாம் செய்தோம் என்று ஒத்துக் கொள்ளும்போது, அது நம் பாவத்தையும் பாவ சுபாவத்தையும் நமக்கு ஆழமாய் உணர வைக்கிறது.
எடுத்துக்காட்டாக கடவுள்
 1)    ஆதாமிடம் “நீ எங்கே இருக்கிறாய்?” (தொநூ 3:9) என்று கேட்டார்.
2)    யாக்கோபிடம் “உன் பெயர் என்ன?” (தொநூ 32:27) என்று கேட்டார்.
3)    இயேசு சமாரியப் பெண்ணிடம், நீர் போய் உம் கணவரை இங்கே கூட்டிக் கொண்டு வாரும்” என்றார் (யோவா 4:1-18).
இங்கே கடவுளுக்கும் இயேசுவுக்கும் எல்லாம் தெரியும்தான். ஆனால் இதில் அவர்கள் தன்னிலை உணர இறைவனும் இயேசுவும் விரும்பினர்  என்பது தெளிவு. ஆதலால்தான் இயேசு, “நீர் கூறியது உண்மையே’ என சமாரியப் பெண்ணிடம் மொழிந்தார். பாவ அறிக்கை என்பது கடவுளுக்குத் “தெரிவிப்பது” அல்ல. மாறாக, ஏற்கெனவே அவருக்குத் தெரிந்ததை “உறுதிப்படுத்துவது” ஆகும். ஆகவே நாம் சில்லறையாகப் பாவம் செய்து மொத்தமாக ஒரே வாக்கியத்தில் அறிக்கை செய்வது நியாயமாகாது. குறிப்பான பாவ அறிக்கைதான் நாம் பாவங்களை விட்டு விடவும் புதுவாழ்வு வாழவும் நமக்கு தூண்டுதல் தரும். மேலும் தோல்விகளுள், சறுக்கல்கள் இவைகளுக்கான மூலகாரணத்தை நாம் புரிந்து கொள்ளவும் உதவும்.
நாம் எந்த அளவு நமது பாவத்தன்மையை உ™ருகிறோமோ அந்த அளவுக்கு நம்
கடவுளின் இரக்கம், பரிவு, அன்பு ஆகிய
வற்றை துய்த்துணர்
வோம். எடுத்துக்காட் டாக பாவிப் பெண் நிகழ்வைக் குறிப்பிட லாம். லூக் 7:36-47ல் வரும் அந்தப் பாவிப் பெண்மணி அங்கே கூடி இருந்தவர்களின் இழிசொற்களையும் விமர்சனங்களையும் கண்டு கொள்ள
வில்லை; காயப்பட வும் இல்லை. ஆனால் மாறாக, விலையுயர்ந்த நறுமணத் தைலத்தை முழுமையாக ஆண்டவர் காலடிகளில் கொட்டினாள். கண்ணீர் மழை பொழிந்தாள். கூந்தலால் துடைத்தாள். முத்த மழை பொழிந்து இயேசுவை அன்பொழுக ஆராதித்து மகிழ்ந்தாள். பாவத்தைப் பற்றிய உணர்வு அப்பெண் மணியை தாழ்மைக்கு வழிநடத்தியது. இயேசுவை வியந்து, பார்த்து, ஆராதிக்க வைத்தது. 
2) சுய ஆய்வு செய்வோம்
ஒவ்வொரு நாளும் மதிய உணவுக்கு
முன்னும் மாலையில் துயில் கொள்ளப்போகும்
போதும் உள்ளங்களை ஆய்வு செய்யும் நல்ல பழக்கம் நம் முன்னோர்களிடம் இருந்தது.
குருமடங்களிலும் கன்னியர் பயிற்சி இல்லங் களிலும் நாள் அட்டவணையில் இதற்கென்று நேரம் ஒதுக்கப்பட்டிருக்கும்.
இரைச்சல் நிறைந்த இன்றைய நாள்களில் இந்த நல்ல பழக்கத்தை நாம் மறந்தே போனோம். ஒப்புரவு அருளடையாளக் கொண்டாட்டத்திற்கு வரும்போது கூட போதுமான அளவு நேரம் எடுத்து உள்ளத்தைச் சுயஆய்வு செய்வதில்லை. 
வாழ்வில் நடந்த நிகழ்வுகள், உறவுகள், குறுக்கிட்ட நபர்கள். செய்த செயல்கள், சிந்தித்த தீர்மானங்கள்... போன்ற அனைத்தையும் நாம் சுய ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் பாவத்தின் தன்மை தெளிவாகும். நாமும் இரக்கம் மிகுந்த கடவுளோடு ஒப்புரவோம்.
சுயஆய்வுக்கு உதவக்கூடிய சில விவிலிய வசனங்களை ஈண்டு காண்போம். இவ்வசனங்களில் பல்வேறு பாவங்கள் பற்றிய பட்டியல்கள் உள்ளன. நாம் எங்கே தவறியுள்ளோம் என்பது பற்றிய தெளிவுபெற இப்பட்டியல் நமக்குத் துணை புரியட்டும்.
1)     கடவுள் வெறுக்கும் 6 செயல்கள் பற்றி நீதிமொழிகள் 6:16-19ல் வாசிக்கிறோம். அவை: இறு மாப்புள்ள பார்வை, பொய்யுரைக்கும் நாவு,  குற்றமில் லாரைக் கொல்லும்
கை, சதித்திட்டங் களை  வகுக்கும் உள்ளம், தீங்கிழைக்க விரைந்தோடும் கால், பொய்யுரைக்கும் போலிச் சான்று, நண்பரிடையே சண்டை மூட்டிவிடும் செயல்.
2)  பாவங்கள் 13
என்று மாற்கு 7:21-23ல் வாசிக்கிறோம். அவையாவன: பரத்தமை, களவு, கொலை, விபச்சாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு, தீய எண்ணங்கள்.
3)     திருத்தூதர் பவுல் உரோ 1:29-32ல் 22 வகைப் பாவங்களைப் பட்டியலிடுகின்றார். அவையாவன: எல்லா வகை நெறிகேடுகள், பொல்லாங்கு, பேராசை, தீமை; பொறாமை, கொலை, சண்டை சச்சரவு, வஞ்சகம், தீவினை, புறங்கூறுதல், கடவுள் வெறுப்பு, இழித்துரைப்பு, செருக்கு, வீம்பு பாராட்டுதல், தீய வழிகள் கண்டுபிடித்தல், பெற்றோருக்குக் கீழ்ப்படியாதிருத்தல், சொல் தவறுதல், மதிகெடுதல், பாசமற்றிருத்தல், இரக்கம் இல்லாதிருத்தல்.
4)     கலாத்தியர் திருமுகத்தில் பவுல் மேலும் 17 வகைப் பாவங்களைக் குறிப்பிடுகிறார். அவை ஊனியல்பின் செயல்கள் என்கிறார். அவை: பரத்தமை; கெட்ட நடத்தை; காமவெறி; சிலை வழிபாடு; பில்லி சூனியம்; பகைமை; சண்டை சச்சரவு; பொறாமை; சீற்றம்; கட்சி மனப்பான்மை; பிரிவினை; பிளவு; அழுக்காறு; குடிவெறி; களியாட்டம்.
5)     இறுதி நாள்களில் கொடிய காலங்கள் வருகின்றன என்று கூறும் திருத்தூதர் பவுல் கீழ்வரும் 18 பாவப் பட்டியல் அதை முன்னறிவிக்கின்றன என்று 2 திமோ 3:2-5ல்
எடுத்துரைக்கின்றார். அவை; தன்னலம் நாடுதல்; பண ஆசை; வீம்பு; செருக்கு; பழித்
துரைப்பு; பெற்றோருக்குக் கீழ்ப்படியாமை; நன்றிமறத்தல்; தூய்மை யின்மை; அன்பின்மை;
ஒத்துப் போகாமை; புறங்கூறுதல்; தன்னடக்க மின்மை, வன்முறை; நன்மை விரும்பாதல்; துரோகம்; கண்மூடித்தனம்; தற்பெருமை; சிற்றின்பம் கடவுளை விரும்பாமை.
பாவங்களை ஒவ்வொன்றாகச் சொல்வது நல்லது. 1கொரி 10: 6-11ல் திருத்தூதர் பவுலின் அணுகுமுறை நமக்குப் படிப்பினையில் உள்ளது. இங்கே பவுல் ஒவ்வொரு பாவத்தையும் தனித்தனியே பிரித்துப் பேசுகிறார். எல்லாவற்றையும் மொத்தமாகக் கூட்டிக் கழித்து ஒரே வசனத்தில் சொல்லியிருக்கலாம். ,ஆனால் ஒவ்வொரு பாவத்தையும் தனித்தனியே கவனம் செலுத்தி ஆயும்போதுதான் அதன் பாவத்தன்மையின் ஆழம் நன்றாகப் புலனாகிறது. 
இவ்வளவு ஆய்வுக்குப் பிறகும் நாம் நமது பாவங்கள் அனைத்தையும் அறிக்கையிட்டு விட்ட தாகக் கூற முடியுமா? முடியாது. நாம் நம்மால் நினைத்துப் பார்க்கும் பாவங்களையும் தூய ஆவியார் உணர்த்தும் பாவங்களையும் ஒன்றுவிடாமல் அறிக்கையிட வேண்டும். ஏனெனில் 1 யோவா 1:8-9ன் படி, “பாவம் நம்மிடம் இல்லை என்போமென்றால் நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்வோம். உண்மையும் நம்மிடம் இராது. மாறாக நம் பாவங்களை நாம் ஒப்புக் கொள்வோமென்றால் கடவுள் நம் பாவங்களை மன்னித்து குற்றம் அனைத்திலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்துவார்.” வாருங்கள், பாவங்களை அறிக்கையிடுவோம். மன்னிப்பைப் பெறுவோம்.கடவுளோடு ஒப்புரவாகுவோம்.

Comment