No icon

3. காயின்

ஜெபம்

சீடர் ஒருவர், தன் பெரிய குருவிடம் ஆசிபெறச் சென்று கொண்டிருந்தார். அந்தப் பகுதியில் வாழ்ந்த யோகிக்கோ,  பெரிய குருவின் மேல் பொறாமை. சீடனைப் பார்த்து, உன் குருவுக்கு எதுவுமே தெரியாது. அவர் ஒரு முட்டாள். நீ அவரை விட பெரிய முட்டாள். உன்னுடைய குருவால் ஏதாவது அற்புதம் செய்ய முடியுமா? என்னை மாதிரி தண்ணீரில் நடக்க முடியுமா? இப்படி ஒண்ணுமே தெரியாத அவரிடம் போய், ஏன் நேரத்தை வீணாக்குகிறாய்? எனக் கேட்டார்.
அதற்கு சீடர் சொன்னார், “நான் ஏன் அவரை குருவாக ஏற்று
வணங்குகிறேன்னா, அவர் ஒரு
போதும் பொறாமைப் படமாட்டார், கோபப்பட மாட்டார், யாரைப்பற்றியும் குறை சொல்ல மாட்டார், தற்பெருமை கொள்ள மாட்டார். எல்லாரிடமும் சாந்த
மாக, அன்பாகப் பேசுவார். இதைத் தான் நான் அற்புதங்களிலெல்லாம் பெரிய அற்புதமாக நினைக்கிறேன்” என்றார். உடனே யோகி வெட்கி தலைகுனிந்தார். ”உன் முகம் வாடி
யிருப்பது ஏன்? நீ ஏன் சினமுற்றிருக்
கிறாய்” என்று ஆண்டவர், காயினை விசாரித்தார். நம் உள்ளங்களை ஊடுருவிக் காண்கிறவர், நம் உள்ளார்ந்த குறைகளை அறிந்தவராய் இருக்கிறார். நாம் நம்மைப்பற்றி அறிந்திருப்பதைவிட, அவர் முற்றும் அறிந்தவராய் இருக்கிறார். காயின் பெரிய பாவத்தில் விழும் முன்பே, அதாவது காயின் கொலைகாரனாய் மாறிவிடாதிருக்க கொலைக்குக் காரணமாயிருந்த பொறாமையிலிருந்து விடுதலை பெற அவனுக்கு உணர்த்தினார் நம் நல்ல கடவுள்.
காயினோ, தன் உள்ளார்ந்த குறைகளை உணர்த்திக் காட்டுகின்ற ஆண்டவரின் அன்பை உணராமல், தன்
இதயத்தைக் கடினப்படுத்திக் கொண்டான். கொலைக்கார னாகவே மாறிப்போனான். ஆபேல் கொழுத்த ஆடுகளை பலியாகக் கொடுத்தான், ஏற்றுக் கொள்ளப்பட்டது. காயின் தன் விளைச்சலின் பலனை காணிக்கையாகக் கொடுத்தான், ஏற்றுக் கொள்ளப்படவில்லை.  கடவுள் அசைவம் என்று நினைத்துவிடத் தேவையில்லை. காயின் தன் காணிக்கை ஏற்றுக்கொள்ளப்பட வில்லையே என்பதற்கான காரணத்தை கடவுளிடமோ, அல்லது தன் தம்பி ஆபேலிடமோ விசாரித்திருக்கலாம்.
இரண்டு காரணங்களாக இருக்குமோ என நாம் தியானத்திற்காக எடுத்துக்கொள்வோம். ஆபேல், காயினுடைய பலியினைவிட, மேலான பலியைக் கடவுளுக்கு செலுத்தினார் (எபி 11:4). கடவுளுக்கு பிரியமானது எது என்று ஆபேல் பெற்றோரிடம் விசாரித்தார், தியானித்தார், தீர்மானித்துச் செயல்பட்டார்.
என் பெற்றோர் ஆதாம், ஏவாள் பாவம் செய்தபின், அவர்களுக்காக கடவுள் தோல் ஆடை செய்து அணிவித்தாரே, அப்படியானால் ஓர் ஆடு அடிக்கப்பட்டிருக்க வேண்டும் (தொநூ 3:21). பழைய ஏற்பாட்டில் பாவங்கள் கசப்பான மாத்திரை, இனிப்பால் மறைக்கப்பட்டன (திபா 32:1). ஆனால் இயேசு இரத்தம் சிந்திய பிறகு பாவங்கள் யாவும் மன்னிக்கப்படுகின்றன (1யோவா 1:7).
ஆக என் பெற்றோரின் பாவங்கள் மறைக்கப்பட ஓர் ஆடு அடிக்கப்பட்டதுபோல, உலகோர் அனவரின் பாவங்களும் மன்னிக்கப்பட, மாசற்ற செம்மறி அடிக்கப்பட வேண்டும் என்று தரிசனம் பெற்றிருப்பாரோ! இயேசுவுக்கு முன் அடையாளமான ஈசாக்கிற்கு பதிலாக, ஒரு செம்மறி ஆடு அடிக்கப்பட்டதும், பழைய ஏற்பாட்டில் மக்களின் பாவங்களுக்குப் பரிகாரமாக ஆடுகள் அடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
ஆகவே, ஆபேல் கடவுளுக்குப் பிரியமான கணிக்i கயாக ஆட்டை பலிக்கொடுத்தார். நேர்மையாளர் என்று சான்று பெற்றார் (எபி 11:4). கடவுள் என்னிடம் விரும்புவது என்ன என்று உணர்ந்து அதையே காணிக்கையாக்குவதல்லவா சிறப்பு!
காயினுடைய காணிக்கை மட்டுமல்ல, அவனுமே சரியில்லை. ஆண்டவர் ஆபேலையும் அவன் காணிக்கையையும் கனிவுடன் கண்ணோக்கினார். காயினையோ, அவன் காணிக்கையையோ அவர் கண்ணோக்கவில்லை (தொநூ 4:4,5). காணிக்கையைக் காண்பதற்கு முன்பு காணிக்கையைத் தரும் நபரை ஆண்டவர் காண்கிறார் என இந்த வாக்குகள் உணர்த்துகின்றன!
“காயீனைப் போல் நீங்கள் இராதீர்கள்; அவன் தீயோனைச் சார்ந்தவன், ஏனெனில் தன் சகோதரனைக் கொலைசெய்தான். எதற்காக அவரைக் கொலை செய்தான்? ஏனெனில், அவன் சகோதரனுடைய செயல்கள் நேர்மையானவையாக இருந்தன (1யோவா 3:12). காயினுடைய மனமெல்லாம் கசப்பால் நிறைந்திருந்தது. பொறாமைத் தீ உள்ளத்துள் எரிந்து கொண்டிருக்க, எத்தனை கணிக்கை கொடுத்து, என்ன பயன்?
“நீங்கள் உங்கள் காணிக்கைகளை பலி
பீடத்தில் செலுத்த வரும்போது, உங்கள் சகோதர
சகோதரிகள் எவருக்கும், உங்கள் மேல் ஏதோ
மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின் முன், உங்கள் காணிக் கையை வைத்துவிட்டுப்போய், முதலில் அவரிடம்
நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையை செலுத்துங்கள்” (மத் 5:23,24). உள்ளதே போதுமென்று, உள்ளதற்காக நன்றி செலுத்தியிருக்கலாம்; பொறாமை ஏற்பட தன் மனமே காரணம் என்று, தூய ஆவியாரின் உதவிக்காக மன்றாடியிருக்கலாம்; ஆபேல் மீது
பொறாமை ஏற்படுகிறதே, அவரை ஆசீர்வதித்து
ஜெபித்திருக்கலாம்….. காயின் ஆசீர்வதிக்கப் பட்டிருப்பான். நல்ல மனதோடு கடவுள் விரும்பும் காணிக்கை செலுத்துவோம்.
 

Comment