No icon

வாழ்வும் வழிபாடும்

புனித வாரக் கொண்டாட்டங்கள்

பாடுகளின் குருத்து ஞாயிறு

இயேசு எருசலேமில் நுழைதல்
இது பாஸ்கா விழா கொண்டாடும் காலம். எருசலேம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து மக்கள் எருசலேம் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். எருசலேமைச் சுற்றி 20 மைல் தூரத்திற்கு உட்பட்ட ஒவ்வொரு யூத ஆணும் இவ்விழாவிற்கு வரவேண்டும். இது யூதச் சட்டம். பாலஸ்தீன யூதர்கள் மட்டுமல்ல, உலகத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் யூதர்கள், தங்கள் தேசியத் திருவிழாவைக் கொண்டாட பல்வேறு எதிர்பார்ப்புகளோடு எருசலேம் நோக்கி திருப்பயணமாக பயணிக்கிறார்கள். இயேசுவும் எருசலேமிற்கு பயணிக்கிறார் (யோவா 2:13; மத் 20:17; லூக் 18:31).
லூக்கா நற்செய்தியாளர் இதை கலிலேயா விலிருந்து எருசலேம் நோக்கித் திருப்பயணம் என்று அழைக்கிறார் (யளஉநவே கசடிஅ ழுயடநைந வடி துநசரளயடநஅ). இந்த ‘யளஉநவே’ என்ற சொல்லின் அர்த்தத்தைப் புவியியல் முறைப்படி பார்க்கும்போது அர்த்தம் விளங்கும். கலிலேயா, கடல் மட்டத்திற்கு 690 அடி கீழேயும், எருசலேம், கடல் மட்டத்திற்கு 2500 அடி மேலேயும் அமைந்துள்ளன. நற்செய்தியாளர்களின் பார்வையில் இயேசுவைக் குறித்துச் சொல்லப்பட்ட இறைவாக்குகள் நிறைவேற வேண்டியுள்ளன. உள் எழுச்சி (ஐnநேச யளஉநவே) என்று இயேசு எருசலேம் நோக்கிப் பயணிப்பதன் மூலம் அவர்தம் பெயர் விளங்குமாறு அவர் தெரிந்தெடுக்கும் இடத்திற்குச் சென்றார் என்ற இணைச்சட்ட நூலின் வார்த்தைகளைப் பிரதிபலிக்கிறது (12:11; 14:23).
ஆக, இயேசுவின் இந்த எருசலேம் பயணத்தின் நோக்கம் பழைய பலிகளுக்குப் பதிலாக தன்னையே சிலுவையில் பலியாகக் கொடுக்கப் போவதை குறிக்கிறது. இதைத்தான் எபிரேயர் 9:24 சொல்கிறது. “அதனால்தான் கிறிஸ்து மனிதரின் கையால் அமைக்கப்பட்டதும் உண்மையான தூயகத்திற்கு முன்னடையாளமாய் இருப்பதுமான இவ்வுலகத் தூயகத்திற்குள் நுழையாமல் விண்ணுலகிற்குள்ளேயே நுழைந்திருக்கிறார். கடவுளின் திருமுன் நிற்கிறார்.” கடவுள் முன்னிலை யில் நிற்கின்ற இந்த ‘யளஉநவே’ சிலுவை மற்றும் பாடுகள் வழியாக நிறைவேறுகிறது - இதுதான் இறைவனின் மலைக்கு (ஆடிரவேயin டிக ழுடின) ஏறிச்செல்லும் இறுதிவரை அன்பு செலுத்தியதைக் குறிக்கிறது (யோவா 3:1).
எருசலேம் பயணத்தின் நோக்கம்
இயேசுவின் இந்த திருப்பயணத்தின் நோக்கம் எருசலேம் தேவாலயமாக இருந்தாலும் இயேசுவின்மீது மக்கள் கொண்ட பார்வை வேறு விதமாக, புதிய பார்வையாக இருந்தது. இயேசு வும் இயேசுவின் சீடர்களும் எரிகோவை விட்டு வெளியே சென்றபோது, இதில் பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர் (மத் 20:29; மாற் 10:46). அவர்கள் எரிகோவை விட்டு வெளியே சென்றபோது, திமேயுவின் மகன் பர்த்திமேயு வழியோரம் அமர்ந்திருந்தார். பார்வையற்ற அவர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். நாசரேத்து இயேசுதாம் அத்திருப்பயணிகள் கூட்டத்தில் போகிறார் என்று கேள்விப்பட்டு, “இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று உரக்கக் கத்தினார் (மாற் 10:46, 47). இயேசு அவரைப் பார்த்து, “உமக்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்றதும் பார்வையற்றவர் அவரிடம், “ராபூனி, நான் மீண்டும் பார்வை பெறவேண்டும்” என்றார். இயேசு அவரிடம், “நீர் போகலாம்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று” என்றார். உடனே அவர் மீண்டும் பார்வைபெற்று, அவரைப் பின்பற்றி அவருடன் சக திருப்பயணியாக வழிநடந்தார் என்று மாற்கு எழுதுகிறார் (மாற் 10:49-52).
இயேசு மெசியா : புதிய தாவீது அரசர்
இப்பொழுது இதைப்பார்த்த மக்கள் கூட்டத்துக்கு இது ஒரு வியப்பான செய்தியாக மாறுகிறது. இயேசு அங்கே தாங்கள் எதிர்பார்த்த ஒரு மெசியாவாக, ஒரு புதிய தாவீதரசராக, மக்களின் ஏக்கங்களை, எதிர்பார்ப்புகளைத் தீர்த்து வைக்கும் புதிய தாவீதரசராகத் தென்படுகிறார். இதைத்தான் தம் சீடரோடு இயேசு மேற்கொண்ட தயாரிப்பும் உறுதி செய்கிறது. இயேசுவும் ஒலிவ மலையிலுள்ள பெத்பகு, பெத்தானியா என்னும் ஊர்களுக்கு அருகில் வர, தம் இரு சீடர்களை அனுப்பி, கழுதைக் குட்டியை அவிழ்த்து வரச் சொன்னார். ஆக, பெத்தானியா இயேசுவிற்குப் பழக்கமான நகரம். அங்கு அவருக்கு நிறைய நண்பர்கள் உண்டு. எனவே ஏன் அதை அவிழ்கிறீர்கள் என்று கேட்டனர். “இது ஆண்டவருக்குத் தேவை” என்ற வார்த்தையில் சொல்ல வேண்டும். இதுதான் கடவுச்சொல் (யீயளளறடிசன). இது முதலாளிக்கு இயேசுவின் நேரம் நெருங்கிவிட்டதை உணர்த்தும் அறிகுறி.
இயேசுவைக் குறித்து, மெசியாவைக் குறித்து சொல்லப்பட்ட மறைநூல் வாக்கு நிறைவேறும் நேரம். “மகளே சீயோன்! மகிழ்ந்து களிகூறு; மகளே எருசலேம்! ஆர்ப்பரி! இதோ உன் அரசர் உன்னிடம் வருகிறார்; அவர் எளிமையுள்ளவர்; கழுதையின்மேல், கழுதைக் குட்டியாகிய மறியின்மேல் அமர்ந்து வருகிறார்” (செக் 9:9) என்ற செக்கரியாவின் வாக்கு, இங்கே இயேசுவை எளிமையான அரசராக சித்தரிக்க நிறைவேறுகிறது. உலகின் கடைக்கோடியிலிருந்து எருசலேம் திருவிழாவிற்கு வந்த யூதர்களுக்கு, தன்னையே பலியாக்கும் திருப்பொழிவு செய்யப்பட்ட மெசியாவாக இயேசு காட்டுகிறார். தாமே இறைவாக்கினர்களால் முன்குறிக்கப்பட் டவர், திருப்பொழிவு செய்யப்பட்ட அரசர், மெசியா என்பதை வெளிக்காட்டுகிறார்.
அமைதியின் அரசர்
இயேசுவின் விருப்பம் இங்கே அரண்மனையில் அமர்வது அல்ல, மாறாக மக்களின் மனங்களில் ஆட்சி செய்வது. மேற்கத்திய நாடுகளில் கழுதை அருவறுக்கத் தக்க விலங்கு, ஆனால் கிழக்கத்திய நாடுகளில் அது ஒரு செல்லப் பிராணி. அதனால்தான் அரசன் கழுதையில் வருகின்றபோது, அதை அமைதியின், எளிமையின் சின்னமாகக் கருதினார்கள். போருக்குக் குதிரை, அமைதிக்குக் கழுதை என்ற எண்ணமும் இருந்தது. எனவே அமைதியின் அரசர் இயேசு கழுதையின்மேல் ஏறி அன்பையும், அமைதியையும் கொணர, கழுதையின்மேல், கழுதைக் குட்டியாகிய மறியின்மேல் ஏறி வருகிறார். அக்கழுதைக் குட்டியின்மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டு, இயேசுவை அதன்மேல் ஏற்றி, மேலுடைகளை வழியில் விரித்துக்கொண்டே சென்றனர். இது தாவீது அரசரின் அரியணைக்கு, அவரது மகன் சாலமோன் அருள்பொழிவு செய்யப்படுவதை சுட்டிக்காட்டுகிறது: தாவீது அரசர், “குரு சாதோக்கையும் இறைவாக்கினர் நாத்தானையும், யோயாதாவின் மகன் பெனாயாவையும் என்னிடம் அழைத்து வாருங்கள்” என்றார். அவ்வாறே அவர்கள் அரசர் முன் வந்தார்கள். அரசர் அவர்களிடம், “உங்கள் தலைவனுடைய அலுவலரும் நீங்களும் சேர்ந்து என் மகன் சாலமோனை என் கோவேறு கழுதையின் மேல் அமர்த்திக் கீகோனுக்கு அழைத்துச் செல்லுங்கள். அங்கே குரு சாதோக்கும் இறைவாக்கினர் நாத்தானும் அவனை இஸ்ரயேலின் அரசனாகத் திருப்பொழிவு செய்யட்டும். எக்காளம் முழங்க, “சாலமோன் அரசர் வாழ்க!” என்று வாழ்த்துங்கள்” (1 அர 1:32-34).
மக்கள் தங்கள் மேலுடைகளை வழியில் விரித்து, வாழ்த்தும் மரியாதையும் செலுத்துவதை இஸ்ரயேல் அரச பாரம்பரியத்தில் காண்கிறோம். இதையே ஏகூ இஸ்ரயேல் அரசனாகத் திருப்பொழிவு செய்யப்பட்டபோது, அவன் தோழர்கள் செய்தார்கள். “அவர்கள் அனைவரும் விரைந்து தம் போர்வையைக் கழற்றி அவற்றை வெறுமையாய் இருந்த படிகளில் விரித்து, எக்காளம் ஊதி, “ஏகூவே அரசர்!” என்று முழங்கினர் (2 அர 9:13).
ஆக, இயேசுவின் சீடர்கள் இயேசுவை மறியின்மேல் அமரவைத்து, தாவீது அரச வம்சத்துக்கு, பாரம்பரியத்திற்கு மரியாதை செலுத்துகின்றனர். தாவீது குலத்திலிருந்து எழுந்துவரும், தாங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த மெசியா இவர்தான் என்பதை இந்நற்செய்தி காட்டுகின்றது. இதே ஆர்வமும், எழுச்சியும், எதிர்பார்ப்பும் எருசலேமுக்குத் திருப்பயணம் மேற்கொண்ட எல்லாருடைய மனத்தையும் தூண்டியெழுப்புகிறது. எனவே அங்கே வந்திருந்த திருப்பயணிகள் தங்கள் மேலுடைகளை வழியில் விரித்துக் கொண்டே சென்றனர். சிலர் மரங்களிலிருந்து கிளைகளை வெட்டி வழியில் பரப்பி, இஸ்ரயேலின் திருப்பயண திருவழிபாட்டில் (ஐளசயநட’ள ஞடைபசiஅ டுவைரசபல) இருக்கின்ற புகழ்ப்பாக்களை தங்கள் உதடுகளில் உரக்கக் கூவி ஆர்ப்பரித்தனர்: “ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம்” (திபா 118:26); “ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப் பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக!” உன்னதத்தில் ஓசன்னா! (மாற் 11:9-10). இதை மனத்தில் கொண்டே இயேசுவுக்கு வாழ்த்துக்கூறி, வரவேற்று ஆர்ப்பரித்தார்கள்.
இங்கே நாம் இன்னொரு முக்கியமான சொல்லை மறந்துவிடக் கூடாது. ஓசன்னா! ஓசன்னா என்னும் எபிரேயச் சொல்லுக்கு ‘விடுவித்தருளும்’ என்று பொருள். தங்களுக்கு என்று, தங்களை காப்பாற்றுவதற்கென்று யாருமே இல்லாமல், அடிமைப்பட்டுக் கிடந்த மக்கள், ‘எங்களை விடுவித்தருளும்’ ‘எங்களை மீட்டருளும்,’ ‘எங்களுக்கு உதவ வாரும்! என்று அரசர்களையும் கடவுளையும் நோக்கிக் கதறுகின்ற மக்களின் கண்ணீர் குரல், இன்று இயேசுவை தாங்கள் எதிபார்த்த மெசியாவாக அவரை நோக்கித் திரும்புகிறது.
இது திருப்பாடல் ஆசிரியரின் குரலோடு சேர்ந்துள்ளது: “ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம்; ஆண்டவரே மீட்டருளும்! ஆண்டவரே! வெற்றி தாரும்!” (திபா 118:24-25). ஆக அந்நிய தேசத்தில் அரசர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த மக்கள், ஆரவாரம் முழங்க, வெற்றி ஆர்ப்பரிப்போடு எருசலேமில் நுழைந்ததை இந்த பாடுகளின் குருத்து ஞாயிறு நமக்கு நினைவூட்டுகிறது. நாற்பது நாள்களாக உண்ணா நோன்பிருந்து, உடலை வருத்தி, ஐம்புலன்களை அடக்கி, ஆண்டவர் இயேசுவின் பாடுகளை ஆழமாகத் தியானித்தோம். பல்வேறு கவலைகளோடும், கண்ணீரோடும், துன்ப துயரங்களோடும் கூடி நிற்கும் நாம், நம்மை மீட்க, இயேசுவை வரவேற்று, ஆர்ப்பரித்த அந்த மக்களின் மனநிலைக்கு இப்பாடுகளின் குருத்து ஞாயிறு நம் அனைவரையும் கொண்டு செல்லட்டும்.

பெரிய வியாழன்

காலடிகளைக் கழுவும் சடங்கு
“பாஸ்கா என்னும் புளிப்பற்ற அப்ப விழா நிகழ இன்னும் இரண்டு நாள்கள் இருந்தன” (மாற் 14:1). ஐந்து நாள்கள் இடைவெளியில் சரித்திரத்தின் மிகச்சிறந்த இரண்டு துப்புரவுச் சடங்குகள் நடந்தேறுகின்றன. சனிக்கிழமை இயேசு, பெத்தானியாவில் தொழுநோயாளர் சீமோன் இல்லத்தில் பந்தியில் அமர்ந்திருந்தபோது இலாமிச்சை நறுமணத் தைலம் கொண்டு, மரியா அவரின் பாதங்களைக் கழுவினார் (மாற் 14:3). வியாழக்கிழமை இயேசு சீடர்களின் பாதங்களைக் கழுவுகிறார்.
இயேசுவின் நேரம், இறுதி மாலை நேரம்
“பாஸ்கா விழா தொடங்கவிருந்தது. தாம் இவ்வுலகத்தை விட்டுத் தந்தையிடம் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை இயேசு அறிந்திருந்தார். உலகில் வாழ்ந்த தமக்குரியோர் மேல் அன்பு கொண்டிருந்த அவர் அவர்கள் மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார்” (யோவா 13:1). இயேசுவின் நேரம் நெருங்கிவிட்டது. தாம் விட்டுவந்த தந்தையிடம்  திரும்பும் நேரம் நெருங்கிவிட்டது. இயேசு சீடர்கள் மேல் உள்ள பிரியத்தால் பற்றி எரிகிறார். இறுதி இரவு விருந்தோடு, இயேசுவின் நேரம் நெருங்கி வருகிறது; எந்த நோக்கத்தை இலக்காக கொண்டு, தொடக்கத்தில் தொடங்கினாரோ (யோவா 2:4) அந்த நேரம் வந்துவிட்டது. இது அவர் இவ்வுலகை விட்டுப் பிரியும் நேரம்; இறுதிவரை அன்பு செய்யும் நேரம் (டடிஎந வடி வாந நனே).
எல்லாம் நிறைவேறும் நேரம் (வநவஜீடநளவயi) (யோவா 19:30). இந்த இறுதி (வஜீடடிள) முழுமையாக பலியாக்கும், தன்னையே இரவுக்குக் கையளிக்கும் நேரம். இயேசுவின் இறுதி நேரத்தில் இவ்வுலகை விட்டுச் செல்லும் அவர் தாமாகத் தனியாகத் திரும்பிச் செல்லவில்லை. மண்ணிலிருந்து உயர்த்தப்படும்போது அனை வரையும் அவர்பால் ஈர்த்துக்கொள் கிறார் (யோவா 12:32). தொடக்கத்தில் அவர் தமக்குரியவர்களிடம் வந்தபோது, அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை (யோவா 1:11). ஆனால் இப்போது அவர்கள் ‘தமக்குரியோர்’ ஆகிவிட்டார்கள். அவருடைய மண்ணுலக வாழ்க்கை அந்நியர்களை அவருக்குரியவர்களாக்கிவிட்டது. அதனால்தான் சீடர்களோடு வாழ்ந்தபோது “என்
சகோதரர்கள்”, “என் மந்தையே”, “என் நண்பர்களே,”
என்றழைத்தவர், பிரியும் நேரம் வந்தபோது “எனக்குச் சொந்தமானவர்களே” என்று அழைக்கிறார்.
இயேசு தம் சீடர்களின் பாதங்களைக் கழுவிய நிகழ்வை வெகுதுல்லியமாக எழுதுகிறார் புனித யோவான் (13:4-5) “இயேசு பந்தியிலிருந்து எழுந்து, தம் மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு, ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டார். பின்னர் ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துச் சீடர்களுடைய காலடிகளைக் கழுவி இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார்.” இந்த வசனத்தில் ஏழு செயல்பாடுகளைக் கவனிக்கிறோம். இயேசு இங்கே தாழ்ச்சியில் உயர்ந்து நிற்கிறார். எந்தத் தலைவனும் செய்யாத காரியத்தைச் செய்கிறார். “தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்” என்று போதித்தவர், பரிசேயனுடைய செபத்தைவிட பாவியான வரி தண்டுவோரின் செபமே சிறந்தது என்பதைச் சொன்னவர், குழந்தையைக் கையில் எடுத்து இவனே உயர்ந்தவன் என்று உயர்த்திப் பிடித்தவர், இன்று தானே அடிமையாய் பணிவிடையில் குனிந்து நிற்கிறார் (பிலி 2:7-6).
பாதம் கழுவும் இயேசுவின் நிகழ்வை அவருடைய மனுவுருவான மறைபொருளுக்கு ஒப்பிட்டுக் கூறலாம். இயேசு விண்ணகப் பந்தியில் தந்தையை விட்டு எழுந்தார்; மகிமையெனும் ஆடையைக் களைந்தார்; தம் தெய்வீகத்தின்மேல் “மனிதம்” என்ற துண்டைக் கட்டினார். நம் முன்பாக முழந்தாளிட்டார். நம் பாதங்களைக் கழுவித் துடைத்தார்.
நம்மை இறைவிருந்தினில் பங்குகொள்ள தம் இரத்தத்தை கழுவாயாக ஊற்றி, தம்மவர்களின் ஆன்மாக்களை கழுவத் தொடங்கினார். இதைத் தான், “தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக் குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கி கொண்டவர்கள்” என்று திருவெளிப்பாடு நூல் கூறுகிறது (திவெ 7:14).
ஆக இயேசுவின் இறுதிவரை அன்பு நம்மைத் தூய்மையாக்குகிறது; கழுவுகிறது. அவர் காலடிகளைக் கழுவும் செயல் அடிமையின் தன்மை பூண்ட அன்பின் செயல், நம்முடைய அதிகாரம், ஆணவம், பதவி, பட்டம் ஆகியவற்றைக் களைந்து இயேசுவின் பந்தியில் அமர நம்மைத் தூய்மைப்படுத்துகிறது.

புனித வெள்ளி

இருள்
இருள், வெளிச்சத்தை ஜெயித்த நாள். தீமை, நன்மையை வென்றதாக சரித்திரம் இல்லை எனக் கூறக்கேட்டிருக்கிறோம். ஆனால் சில தற்காலிக வெற்றிகளை இருள் தக்க வைத்துக்கொள்கிறது. ’நானே ஒளி’ என்றார் இயேசு. ஒரு நண்பகல் நேரம் நள்ளிரவாய் மாறியது அவரது மரணத்தில்! நானே வழி என்றார் இயேசு. படை வீரன் ஒருவன் ஈட்டியால் அவர் இதயம் திறந்து பாதை உண்டாக்கினான். நானே உண்மை என்றார் இயேசு. அவர் இறந்தபோதுதான் அந்த உண்மை உணரப்பட்டது. அதுவும் ஓர் அந்நியனால் இருளை ஜெயிக்க இறைவனே இருட்டுக்குள் போக வேண்டியிருந்தது. சாவை ஜெயிக்க... இறைவனே சாகவேண்டியிருந்தது. இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் இடைவெளி உண்டா? இல்லை எனத்தான்படுகிறது. எங்கே இருள் முடிகிறதோ அங்கே வெளிச்சம் தொடர்கிறது. இனி இருள் வந்த வழியையும், வெளிச்சம் வெற்றிகொண்ட நிலையையும் இணைத்துப் பார்ப்போம்.
தோட்டம்
ஆதியில் ஒரு தோட்டம். அதன் நடுவே அழகாய் ஒரு மரம், பச்சை மரம். அதிலிருந்து அலகை பேச, அதனடியில் நின்று ஆதாமும் ஏவாளும் அதைக் கேட்கின்றனர்.
குன்று
ஊருக்கு வெளியே ஒரு குன்று; அதன் மேல் அசிங்கமாய் ஒரு பட்ட மரம். அதிலிருந்து ஆண்டவர் பேசுகிறார். அதனடியில் அன்னை மரியாவும், அன்புச் சீடனும் திராணியற்று நிற்கின்றனர். வாழ்வு தர வேண்டிய மரத்திலிருந்து சாவு வந்தது. பட்ட மரத்திலிருந்து வாழ்வு பிறந்தது. ஏதேன் தோட்டத்தில் கனியானது பார்ப்பவர் விரும்பத்தக்க வண்ணம் கவர்ச்சியாய் இருந்தது. மரியா வயிற்றில் உதித்த இயேசு என்னும் கனியோ, காண்போர் கண்களை மூடிக்கொள்ளும் வண்ணம் இருந்தது. ஆதாமும் ஏவாளும் இணைந்து மனுக்குலத்திற்கு மரணத்தைக் கொண்டு வந்தனர். புதிய ஆதாமும், புதிய ஏவாளும் வாழ்வைத் துன்பத்துடன் கொண்டு வருகின்றனர்.
கல்வாரி
கண்முன் நிற்கிறது கல்வாரி!
ஓ! அந்தப் பலிக்குதான் எவ்வளவு வல்லமை! 
ர்    இதுவரை நிறைவேற்றப்பட்ட எல்லா மிருகப் பலிகளுக்கும் இயேசுவின் இரத்தம் முற்றுப் புள்ளி வைக்கிறது.
ர்    ஆண்டுக்கொருமுறை நிறைவேறிய யூதப்பலி அன்றாடப் பலியாய் திருத்தி எழுதப்படுகிறது.
ர்    கல்வாரியின் உளி ஓசை காலம் முடியும் மட்டும் நம் காதுகளுக்குள் பேசிக் கொண்டுதானிருக்கும்.
கல்வாரி மலையைக் கழுவிய இயேசுவின் இரத்தத்துக்கு எவ்வளவு வல்லமை!
ர்    ஆபேலின் இரத்தம் பழிவாங்கத் துடித்தது, அதுவும் தன்னை இரத்தம் சிந்த வைத்தவனை.
ர்    இயேசுவின் இரத்தம் இவர்களை மன்னியும் என்று எல்லாருக்கும் பரிந்து பேசுகிறது.
ர்    ஆபேல் இரத்தம் காலச் சக்கரத்தில் காணாமல் போனது.
ர்    இயேசுவின் இரத்தம் கல்வாரி தொடங்கி காலத்தின் கடைசி மனிதன் வரை, பருகுவதற்காக பாய்கிறது.
ர்    ஆட்டுக்குட்டியின் இரத்தம் எகிப்தில் வாழ்ந்த எபிரேய குலத்தை மரணத்திலிருந்து காப்பாற்றியது.
ர் செம்மறியாம் இயேசுவின் இரத்தம், மரணம் பிளந்து மறு உலகிற்கே மாந்தர் அனைவரையும் அழைத்துச்செல்கிறது.
 கல்வாரிக் கதவுகளை திறப்போம்!
    மூவொரு இறைவன். . .
    முப்பத்து மூன்று ஆண்டுகள் மண்ணில் குடியிருந்தவர்,
 மூன்று ஆண்டுகள் போதித்தவர்,
 மூன்று சிறப்புச் சீடர்களைத் தேர்ந்தவர்,
 மூன்று சோதனைகள் மேற்கொண்டவர்,
 மூன்று நாள் வேதனை அனுபவித்து,
 மூன்றாம் நாள் உயிர்த்தெழ,
 மூன்று மணி நேரம், மூன்று ஆணிகளில் தொங்கி,
 மூன்று மணிக்கு உயிர்விட்டவர்...,
 மூடிய விழிகளுடன், திறந்த இதயத்துடன் நம்மைப் பார்க்கிறார்.
நான் விட்டு வந்த சிலுவை
கல்வாரியில் காத்திருக்கிறது அநாதையாய்
பரலோகம் பார்க்கத் துடிக்கும் மானிடம்
கல்வாரியில் கால்பதிக்க யோசிக்கிறது!
பாரம் தவிர்க்கத் துடிக்கும் மானிடம்
பாவம் தவிர்க்கத் துடிப்பதில்லை
சுமக்கத் தானே சிலுவை!
அறையத் தானே ஆணிகள்
அடிக்கத் தானே உளிகள்!
துன்பங்கள் என்றால் தண்டனை என்று சொன்னது யார்? மனிதனின் பாவத்திற்கு தண்டனையாய் துன்பம் வருகிறது என்றால் மனிதன் செய்யும் அன்றாடப் பாவத்திற்கு எவ்வளவு துன்பங்கள் அனுபவிக்க வேண்டும். என்றாவது ஒரு நாளாவது அவன் மகிழ்ச்சியாய் வாழமுடியுமா?
துன்பம் என்பது விண்ணகத்தின் திறவுகோல். . .
வா. . . மானிடா!
நான் தூக்கிய, சுமந்த சிலுவையை
உனக்காய் விட்டு வந்திருக்கிறேன். . .
தூக்கிச் சுமந்து வா. . .
வீட்டில் உனக்காய் காத்திருக்கிறேன்
இது கடைசி வெள்ளி அல்ல. . .

உயிர்ப்பு ஞாயிறு

அதிகாலை நேரம். நான்காம் சாமம் (3 மணியிலிருந்து 6 மணிக்குள்) பொழுது புலராத இருட்டு நேரம். மனிதர்கள் கண்விழிக்கும் முன்பே... அன்பு ஒரு சிறிய படையாக இயேசுவின் கல்லறையைத் தேடி நடந்து வருகிறது. மகதலா மரியா கைகளில் படிகச் சிமிழோடும் சக தோழி களோடும் இயேசுவின் கல்லறை தேடி வருகிறார். ஒளியைத் தேடி இருட்டுக்குள் நடந்து வருகிறார்.
யூத நம்பிக்கையின்படி, இறந்த மனிதனின் ஆவி மூன்றுநாள் அவனது உடலைச் சுற்றிக் கொண்டிருக்கும். மூன்றாம் நாள் உடல் சிதைவுற்ற நிலையில், அடையாளம் மாறிப்போக, ஆவி நிரந்தரமாய் பிரிந்துவிடும். எனவே மூன்று நாள்கள் அந்த உடலை வாசனைத் திரவியங்களால் பூசி, மரியாதை செலுத்துவது வாடிக்கை. எனவேதான் மரியா தேடி வருகிறார். ஓய்வு நாள் தொடங்கப் போகிறதே, சடலங்கள் சிலுவையில் இருக்கக்கூடாதே என்று அவசர அவசரமாய் இறக்கப்பட்ட இயேசுவின் உடலுக்கு, ஆற, அமர அஞ்சலி செலுத்தி, அடக்கம் செய்ய நேரமிருக்கவில்லை பெரிய வெள்ளிக்கிழமை அன்று! எனவே, அவசர கதியில் அடக்கம் செய்யப்பட்ட இயேசுவின் உடலுக்கு நறுமண பொருள்கள் பூச, அவசரமாய் அதிகாலையிலேயே எழுந்து வருகிறார் மகதலா மரியா.
ஊர்ந்து ஊர்ந்து அருகே வந்து... எடுக்க நினைக்கும் பொம்மை எட்டாதபோது... வேதனை யோடு அழுகிறது குழந்தை. அதைப் போலவே, தேடி வந்த தெய்வீகம், தேடி வந்த இடத்தில் இல்லையே என்ற ஏக்கத்தில் கண்ணீர் வடிக்கிறார். அன்பு அழுது புலம்புகிறது. கண்ணுக்கு எட்டியது
கைக்கு எட்டவில்லையே என்று கண்களே வேதனைப்படுகின்றன. மரணத்தில் அவர் பட்ட
அவமானம் போதாதென்றா மரித்த பின்னும்
அவமானப்படுத்த அவருடலைத் திருடிவிட்டார்கள்?
தேடுங்கள் கிடைக்குமென்றாரே... அவரையே
தேட வைத்து விட்டாரே. தட்டுங்கள் திறக்கு மென்றாரே, கல்லறை திறந்து, அவரையே திருடி விட்டனரே! தேடி வந்தவர் தேம்பி நிற்கிறார். அன்பு தவிக்கிறது.
சட்டென்று காட்சிகள் மாறுகின்றன
பொழுது புலர்கிறது. இருள் விலகுகிறது. கல்லறையைக் காவல் காத்த காவலர்களும் அங்கில்லை. கல்லறைக்குள் வைக்கப்பட்ட இயேசுவும் அங்கில்லை. இயேசு அவள் பின்னால் நின்று கொண்டிருக்கிறார். உயிர்ப்பின் செய்தி முதன் முதலில், தேடி வந்த ஒரு பாவிக்குக் கிடைக்கிறது. கண்ணீர் ஆனந்தக் கண்ணீராக ஆடைமாற்றிக் கொள்கிறது. அரையிருட்டில் நடந்து வந்தவர், ஒளி வெள்ளத்தில் உயிர்ப்பின் செய்தியை நெஞ்சில் சுமந்து கொண்டு ஓடுகிறாள்.
பெண்களின் அன்புக்கு ஆழம் அதிகம். அழுத்தம் அதிகம். அந்த அன்புக்குப் பரிசாக உயிர்ப்பின் செய்தியை முதலில் கேட்கும் பாக்கியம் பெறுகிறார் மகதலா மரியா.
அடுத்தாக. . .
இயேசுவின் கல்லறையைத் தேடி வருகிறார் கள் இரண்டு சீடர்கள்: பேதுரு - இயேசுவை அதிகமாக அன்பு செய்த தலைமைச் சீடர்.
யோவான் - இயேசு அதிகமாக அன்பு செய்த சீடர். இயேசு அங்கே இல்லை. ஆனால் அவரைப் பொதிந்து வைத்த துணிகள், அதே நிலையில் இருக்கின்றன. யோவான் இப்படிச் சிந்திக்கிறார். இயேசுவின் உடல் திருடப்பட்டிருந்தால் ஏன் இந்தத் துணிகள் மட்டும் இப்படி இங்கே இருக்க வேண்டும்? அதுவும் வைத்தது வைத்தபடியே. காலியான கல்லறை இயேசுவின் உயிர்ப்புக்கு முதல் சாட்சி என்றால், கலையாத துணிகள் இரண்டாம் சாட்சியாக விளங்குகின்றன.
சீடர்களில் இயேசுவை அதிகமாக அன்பு செய்தவர் பேதுரு. இயேசுவால் அன்பு செய்யப்பட்டவர் யோவான். இவர்கள் இயேசுவின்  உயிர்ப்புக்கு இரண்டாம் சாட்சிகளாய் விளங்குகிறார்கள்.
இறுதியாக. . .
இயேசுவின் உயிர்ப்பில் நிகழும் அன்பின் நிகழ்வுகள் ஓர் உண்மையை நமக்கு உணர்த்து
கின்றன. ஒரு மனிதனை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவனை ஆழமாக அன்பு செய்ய வேண்டும்.
அன்பு அறிந்துகொள்ள கற்றுக்கொடுக்கிறது. அறிவு தடுமாறும் நேரத்தில், அன்பு அறிந்து கொள்கிறது. ஆய்வுகள் எட்ட முடியா முடிவுகளை அன்பு ஆர்ப்பாட்டமில்லாமல் அடைந்து விடுகிறது.
இயேசு பிறந்தபோது மறைநூல் அறிஞர்கள் அவரைக் கண்டுகொள்ள முடியவில்லை. பாமர மக்கள் கண்டுகொண்டனர்.
இயேசு உயிர்த்தபோது தலைவர்கள் தடுமாறினார்கள்; அவரைப் பார்க்காமலே சீடர்கள் அறிந்து கொண்டார்கள்!
இயேசுவை. . . அதிகமாக அறிந்துகொண்டால் நேசிப்பேன் என்பது தவறு. இயேசுவை ஆழமாக நேசித்தால் அவரை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும்.
எனவே இவ்வுயிர்ப்பு ஞாயிறும், இவ்வுயிர்ப்பு விழாவும், இயேசுவை ஆழமாக நேசித்து முழுமையாகப் புரிந்து கொள்ள உதவட்டும். வாழ்த்துகள்!

Comment