No icon

4. ஆபேல் (நல்ல மனதோடு)

ஜெபம்

ஓர் ஊரிலே ஒரு
தொழிலாளிக்குத் திருமணம்
நடந்தது. ஊரார் அனைவரும் அத்திருமணத்திற்கு வந்திருந் தனர்.
அந்த ஊர் வழக்கப்படி,
கணவன் தன் மனைவிக்கு ஏதாவது பரிசு வழங்க வேண் டும். அந்தத் தொழிலாளி, சிறு கடிதம் எழுதி ஒரு பாட்டிலி னுள் போட்டு தன் புது மனைவிக்குக் கொடுத்தார். வேறு பரிசு எதுவும் வழங்க வில்லை.
புது மனைவி கடிதத்தை எடுத்துப் படித்துப் பார்த்தார். படித்ததும் அவர் முகம் மலர,
ஆனந்தம் பொங்க, நடன மாடத் தொடங்கினார், ’இதுவே
மிகச் சிறந்த பரிசு’ என்று மகிழ்ந்து பாடினாள்.
விருந்தினர்களோ, அறிந்து கொள்ள வேண்டு
மென்று மிகவும் ஆர்வமடைந் தார்கள். கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறார் எனக் கேட் டார்கள்.
அந்தத் தொழிலாளி அதிகம் குடித்து வந்தார். நான் இன்று முதல் என் வாழ்வின் மிகப் பெரிய தீங்கான குடியை விட்டுவிடுகிறேன் எனக் கடிதத்தில் எழுதியிருந்தார்.
கொடுக்கும் பரிசை
விட, கொடுக்கும் மனம்தானே பிரதானமானது. ”இவர் படை யலை ஏற்க வேண்டாம்” இது மோசேயின் மன்றாட்டு (எண் 16:15).
கடவுளுக்கு ஆராதனை செய்ய தூபங்களோடு வந்த கூட்டத்தார், மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுப்பவர்களாக இருந்தார்கள்.
உள்ளத்தில் கோபம், எரிச்சல், பகை, பழிவாங்கும் எண்ணம் கொண்டிருக்க, எத்துணை சிறந்த காணிக்கை கொடுத்தாலும் என்ன பயன்?
மோசேயின் மன்றாட்டைக் கேட்ட ஆண்டவர், தூபம் காட்ட வந்த 250 பேரையும் எரித்துப் போட்டார் (எண் 16:31).
“நீ பீடத்தின் மேல் காணிக்கை செலுத்த வரும்பொழுது உன் சகோதரனுக்கு உன் மீது மனத்தாங்கல் இருப்பதாக அங்கே நினைவுற்றால், அங்கேயே பீடத்தின் முன் உனது காணிக்கையை வைத்து விட்டு முதலில் போய், உன் சகோதரனோடு சமாதானம் செய்துகொள். பின்னர் வந்து உன் காணிக்கையைச் செலுத்து (மத் 5:23,24).
காயினின் உள்ளமெல்லாம் கசப்பால் நிறைந்திருந்தது. ஆனால் ஆபேலின் உள்ளமோ ஆண்டவருக்குள் ஆனந்தமாக இருந்தது. ஆகவே மறைநூல் சொல்கிறது, ”ஆண்டவர் ஆபேலையும் அவன் காணிக்கை யையும் ஏற்றுக் கொண்டார்” (தொநூ 4:4). நாம் வழங்கும் காணிக்கை பெரிதல்ல. கொடுப்பவரின் மனம் எப்படி உள்ளது எனக் காண்பதே, ஆண்டவரின் தேர்வு.
சவுல் அமலேக்கியரைத் தோற்கடித்ததும்,  அற்பமானவைகளை யெல்லாம் அழித்துப்போட்ட பின், நல்லனவற்றை, அழகானவற்றை அழிக்காமல் விட்டுவந்தார். ஏன்? கடவுளுக்கு காணிக்கை கொடுப்பதற்காக!
 கடவுள் ஏற்றுக் கொள்ளாது மிகுந்த கோபம் கொண்டார். ஏனெனில், அமலேக்கியரிடம் போர் தொடுத்து வெற்றி பெற்ற பின், யாவற்றையும் அழிக்கச் சொல்லியிருந்தார் நம் கடவுள் (1சாமு 15:3).
கடவுள் அழிக்கச் சொன்னவை அழகானவை, நல்லவை என நம் கண்ணில் தெரிந்தாலும், சொல்வதைக் கேளுங்கள். “ஒரு பாதை ஒருவருக்கு, நல்வழிபோலத் தோன்றலாம். முடிவிலோ அது சாவுக்கு நடத்தும் பாதையாகிவிடும் (நீமொ 14:12).
சினிமா, நாவல், தீய நட்பு அழகானவைதான், ஆனால்  அவற்றை அழித்துவிடச் சொல்கிறார். அதன் பிறகுதான், நம் மன்றாட்டுத் தொடர வேண்டும்.
காயின் விளைச்சலின் பலனைக் காணிக்கையாக்கினான். ஆனால் மறைநூல் சொல்கிறது, ஆண்டவர் காயினையும் அவன் காணிக்கையையும் ஏற்றுக்கொள்ளவில்லை. காணிக்கை அழகாக இருந்தது. ஆனால் அவன் உள்ளமோ அறுவருப்பாக இருந்தது.
நற்செய்தியில் ஏழைக் கைம்பெண், காணிக்
கையை மட்டுமல்ல, தன்னையும் சேர்த்து முழுமையாக அர்ப்பணித்தார். பணக்காரர்களோ, ஏழைக் கைம்பெண்ணை விட, அதிகப் பணம் போட்டது உண்மைதான். பல பூஜ்ஜியங்கள்! அவ்வளவுதான்! என்னையும் சேர்த்துக் காணிக்கையாக்கும்பொழுதே எண் ஒன்று முன்பாக சேர்ந்து மதிப்பும் மகிமையுமாகிறது.
“இளையோரே! இளமைப் பருவம் மகிழ்ச்சியோடிருப்பதற்கே. இளமையின் நாட்களில் உள்ளக் களிப்புடனிருங்கள். மனம் விரும்புவதைச் செய்யுங்கள்; கண்களின் நாட்டத்தை நிறை வேற்றுங்கள். ஆனால் (சஉ 11:9), ’ஆனால்’ என்ற வார்த்தை வந்துவிட்டதே, ஆகவே முந்தின காரியங்கள் யாவும் தவறாய்ப் போயிற்று. அவள் கெட்டிக்காரி, ஆனால் பிடிவாதம் அதிகம். அவர் நல்லவர்தான் ஆனால், ‘ஆனால்’ என்ற வார்த்தை ஆண்டவருக்கு முழுமையாக அர்ப்பணமாகாத நம் தாழ்நிலையைத் தெரிவிக்கிறது.
ஆண்டவரிடமிருந்து, நம்மைப் பிரிக்கிற பலவீனம் என்ன? அதனையும் சேர்த்து காணிக்கை யாக்கி விடுவோம். ஆபேலுடைய காணிக்கைகள் ஏற்றவையெனக் கடவுளே சான்று பகர்ந்தார். நேர்மையாளர் என்று கடவுளிடமிருந்து சான்று பெற்றார் (எபி11:4). ஆண்டவர், நம்மைக் குறித்து சான்று பகர்வாராக, நம் மன்றாட்டு ஆண்டவரை மகிழ்விப்பதாக.                                                                                           
(தொடரும்)

Comment