No icon

7. திருமதி லோத் (மன்றாட்டில்லாத பயணம்)

செபம்

ஒரு யோகி பல ஆண்டு
களாக மன்றாடி வந்தார். இத்தனை ஆண்டுகள் மன்றாடி யும் சோர்வு அடைந்தார். இது
வரை நான் நல்லதொரு மன் றாட்டு செய்யவில்லையே என்பதுதான் அவரது அலுப்புக் குக் காரணம். பல நாள்கள் சிந்தித்தார். ஒரு நாள் நல்ல தொரு மன்றாட்டைக் கண்டுபிடித் தார். இதோ இறைவா தீயவனிட மிருந்து என்னைக் காப்பாற்று, அத்தீயவன் நான் தான்.
எனக்கு நானே நல்லவன், அதைவிட எனக்கு நானே தீயவன். காரணம் தீமையான பாவங்கள் என்னிடமிருந்தே புறப்படுகின்றன. ஆகவே அந்த யோகியைப்போல் பாவங்
களைக் களைத்தவர்களாய் தூய்
மையை ஆடையாய் அணிந்தவர் களாய் ஆண்டவரை நோக்கி இடைவிடாது மன்றாட வேண் டும்.
திரும்பிப் பார்க்கக் கூடாது என்ற கருத்தை வலியுறுத்து வதற்காகப் பழைய ஏற்பாட்டின் எத்தனையோ மனிதர்களில் லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள் என்கிறார் நம் ஆண்டவர் (லூக் 17:31-33).
புனிதர்களைக் கொண்ட வெற்றித் திருஅவை, உத்தரிக்கிற நிலை ஆன்மாக்களைக் கொண்ட
துன்புறும் திருஅவை, பூமியில்
வாழும் மாந்தரைக் கொண்ட பயணத் திருஅவை என்பதெல் லாம் சேர்ந்ததே இயேசுவின் மறை உடல் எனும் திருஅவை யாகும்.
நாம் பயணத் திருஅவை யின் உறுப்பினர்கள். கிறிஸ்துவு டனிருந்து கிறிஸ்துவுடன் கிறிஸ்துவை நோக்கி விரைந்து
செல்லும் பயணிகள். நின்று விடவோ, மெதுவாக செல்லவோ, திரும்பிப் பார்க்கவோ வேறு திசையில் செல்லவோ அனுமதி கிடையாது.
நாம் வாழ்ந்து கொண்டிருப்
பதற்குக் காரணம், யாரோ ஒரு நேர்மையாளரின் மன்றாட்டால் தான் என்பதை மறந்துவிடக் கூடாது. பாவம் பெருகிவிட்ட பூமி இன்னமும் அழியாமலிருக்கக் காரணம் நமக்காக எப்பொழுதும் மன்றாடிக் கொண்டிருக்கும் நம் மீட்பர் இயேசுவே (உரோ 8:34).
லோத்தின் குடும்பம் கந்தக நெருப்பின் அழிவிலிருந்து காப்பாற்றப் படக் காரணம், லோத் நேர்மையாளர் என்பதிலும் மேலாக, ஆபிரகாமின் பரிந்துரை மன்றாட்டினால்தான் என்று தொநூ 19:27 சொல்கிறது. ஆகவே தகுதியற்ற தங்களுக்குக் கிடைத்த ஆசிகளுக்குத்  தங்
களைத் தகுதியுள்ளவர்களாக்கிக் கொள்ள அவர்கள் செய்திருக்க வேண்டிய இரண்டு காரியங்கள்:
1.    ஆண்டவரைப் புகழ்ந்து கொண்டே
2.    திரும்பிப் பாராமல் முன்னோக்கி ஓடியிருக்க வேண்டும்.
ஆண்டவர் மேல் கண்
களைப் பதியவைத்து இடைவிடா
மல் புகழ்வது அல்லவோ வெற்றி தரும் மன்றாட்டு. மனத்தை மேலே எழுப்புவது அல்லவோ சுகம் தரும் மன்றாட்டு.
1)    இடைவிடாமல் புகழ்ந்து கொண்டிருப்பது, நமது பயண வாழ்வை வளமாக்குவதாகும். நமக்கு வரும் துன்பத்தையும் இன்பத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது, கடவுள் நம்மேல் எவ்வளவோ அக்
கறை உள்ளவராக இருக்கி றார். எத்தனையோ ஆசிகளைப் பொழிகிறார் எனக் காண்கிறோம். நன்றி சொல்லாதிருக்க முடியுமோ? தீமையாய் தோன்றும் யாவை
யும் நன்மையாய் மாற்றப் போகிறாரே. முறுமுறுப்பு நியாயமா? ஆகவே என்ன நேர்ந்தாலும் நன்றி கூறு வோம் (1தெச 5:17).
        ஆண்டவரை நாம் எந்
நேரமும் போற்றிக்கொண்டே
யிருப்போம்.  (திபா 34:1) ‘நன்றி இயேசுவே, நன்றி ஆண்டவரே’ என்ற புகழே நம் நாவில் ஒலித்துக் கொண்டிருப்பதாக.
    2)    திரும்பிப் பாராமல் முன்
னோக்கி ஓடிக்கொண்டே யிருப்பது, பயண வாழ்வை வெற்றி பெறச் செய்வதாகும்.
பயணத்திருச்சபையை போராடும் திருச்சபை என்றும் அழைப்பதுண்டு. நம் பயண வாழ்வில் போராட்டங்கள் பல
உண்டு. ஆகவே பயணத்தில் வெற்றிவாகை சூட வேண்டு மானால் சில நிபந்தனைகளைக் கடைபிடித்துதான் ஆக வேண்டும்.
1.    இயேசுவின் மேல் கண்களை
பதிய வைத்து விட வேண்டும்
(எபி 12:2). இயேசுவிடமிருந்து நம் பார்வையைத் திருப்பு வதே பாவம். 
2.    பாவத்தை உதறித் தள்ளி விட்டு மன உறுதியுடன் ஓட வேண்டும் (எபி 12:1).
3.    பாவ சார்புகளை ஆசை களைக் கீழ்ப்படுத்த வேண் டும் (1 கொரி 9 : 24-27).
கீழ்ப்படுத்தாவிட்டால் நாம் பரிகாசப் பொருளாகி விடுவோம்.
4.    கடந்ததைக் குறித்துக் கலங் காதிருக்க வேண்டும் (பிலி 3:14). கடந்ததை நினைத்துக் கலங்கினால் வருபவை நம்மை இன்னும் கலக்கம் அடையச் செய்யும்.
5.    தொடர்ச்சியாக ஓடிக் கொண்
டிருக்க வேண்டும் (பிலி 3:16). இவ்வளவு முன்
னேறி விட்டேனே என்று பெருமைப்பட்டால் பின்னோக்கித் தள்ளப்படும் நிலை உண்டாகும். 
6.    பயணம் உயிரினும் மேலானது என்ற மனஉறுதி கொண்டிருக்கவேண்டும் (திப 20:24). உயிரினும் மேலானதாகக் கருதவில்லை யானால் திசைமாறும் அபாயம் உண்டு.
7.    போதனையில் திரும்பிப் பார்க்கக் கூடாது. திருஅவை அறிவிக்கிற சத்தியங்களை யெல்லாம் தேவரீர் தாமே அறிவித்தபடியினால் நானும் உறுதியாக விசுவசிக்கிறேன் என்ற மன்றாட்டை மறந் தால் பிறசபைகளின் நூதனப் போதனைகள் நம்மை
குழப்பமடையச் செய்துவிடும்.
8.    நம்பிக்கையைப் பாதுகாப் பதில் கருத்தாயிருக்க வேண்
டும் (2 திமொ 4:7). பரலோகக்
கருவூலமான நம்பிக்கையைப் பாதுகாக்க வில்லையெனில் அது எடுபட்டுவிடும்.
9.    ஆண்டவரின் துணையுடன் ஓட வேண்டும் (2 சாமு 22:30).
கடவுளின் ஆவியால் இயக்கப்படாவிட்டால் கடவுளிடம் போய்ச் சேர முடியாது.
ஆண்டவரைப் பின் தொடராமல் புறங்காட்டித்  திரும்புகிறவர்களை அழித்துவிடுவோம் (செப் 1:6) என்றும், திரும்பிப் பார்ப்பவன் கடவுளின் அரசிற்குத் தகுதியற்ற வன் (லூக் 9:62) என்பதும் ஆண்டவரின் வாக்குகள்.
திருமதி லோத் உலகப்
பற்று மிகுந்தவர். ஆபிரகாமிட மிருந்து பிரியும்போது லோத்
சோதோமைத் தேர்ந்தெடுக்க இவர்தான் தூண்டியிருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
திரும்பிப் பார்க்கக் கூடாது என்ற இறைக் கட்டளைக்குக் கீழ்ப் படியாமல் உப்புச் சிலையாகிப் போனதாலும் (தொநூ 19:26) லோத் நேர்மையாளர் என மறைநூல் கூறுவதாலும் (2பேது 2:7) இப்படிக் கூறுகிறேன். பாவம் பெருத்த பூமி என்ற அபாயம் இருந்தாலும், செல்வச் செழிப்புள்ள பூமி என்பதே அவர் கண்ணுக்கு விருந்தாயிருந்தது.
பெரும் அழிவிலிருந்து, தன்னையும் தன் கணவரையும், பிள்ளைகளையும் ஆண்டவர்
காத்துக் கொண்டாரே என்று
நன்றி சொல்லாமல் முறுமுறுத் தாள். தான் ஆசையாய் சேர்த்த சொத்துகளையெல்லாம் விட்டுச் செல்கிறோமே எனத் திரும்பிப் பார்த்தார்.
தனது தகுதியின்மை யிலும், ஆபிரகாமின் மன்றாட்டால் தான், தான் காப்பாற்றப்பட்ட உண்மையை மறந்தார். உப்புச் சிலையானார். பாதி வழியில் உப்புச் சிலையாகும்படி, வாழ்வுப் பயணத்தை திசை திருப்புவது என்ன?

Comment