No icon

வரப்புச் சண்டை!

தனுசும், முத்துக்குமாரும் உடன்பிறந்தோர். தனுசு குடும்பத்தினரும், முத்துக்குமார் குடும்பத் தினரும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக இணைந்து எல்லா விழாக்களிலும் மிகவும் மகிழ்ச்சியாகக் கொண்டாடுவர். விடுமுறைக் காலங்களில் பேருந் தினை அமர்த்தி உல்லாச பயணம் மேற்கொள்
வார்கள். அப்போது பிள்ளைகளின் இன்பத்திற்கு அளவேயில்லை. காரணம் நாள் முழுவதும் வகுப்பறையில் அடைபட்டு படிப்பு படிப்பு என கல்வியில் மிகவும் அலுப்பு ஏற்பட்டு விடுகிறது. சிறு வயதிலே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வெறுப்புகள் அவர்கள் உள்ளத்தில் வேரூன்றி விடுகின்றன. ஒரு சமயம் இருவர் குடும்பமும் குற்றால அருவியில் குளித்து வரச் சென்றனர்.
தனுசும் அவர் மனைவி மரகதமும், முத்துக் குமார் அவர் மனைவி கோகிலாவும் தம் உடைகளைப் பறையில் வைத்து குளித்து வருகிறோம் என்று அதனடியில் இருவரும் தம் ஒரே விதமான கழுத்து அணிகலன்களை வைத்துவிட்டு, பிள்ளைகளிடம் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு நீராடச் சென்றனர். பின்னர் பிள்ளைகள் நொண்டி விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கே வந்த குரங்கு சேலையைப் புரட்டி மரகதத்தின் ஆபரணத்தை எடுத்துச் சென்று மரக்கிளையில் அமர்ந்து அதனை கழுத்தில் அணிய
நினைத்தபோது அது நழுவி நீரில் விழுந்து மூழ்கியது. குளித்துவிட்டு முதலில் வந்த மரகதம் நகையை எடுத்து தன் கழுத்தில் அணிந்து கொண்டாள். கோகிலா தன் நகையைத் தேடியபோது காணவில்லை. பிள்ளைகளிடம் கேட்க எங் களுக்குத் தெரியாது என்று கூறி அழுதனர். கோகிலா, மரகதத்தைப் பார்த்து, "அது என் நகை மரியாதையா கழற்றிக் கொடு" என்றாள். உடனே, மரகதம் இது என் நகை. உன்னது தொலைந்துபோனது எனக்குத்தெரியாது. நான் தரமாட்டேன்" என்றாள். "இது என்னதுதான், உன்னதுதான் தொலைந்து போனது" எனக் கூறவும் வாய்த் தகறாறு, கை கலப்பு கட்டிப் பிடித்து சண்டையானது. கூட்டம் கூடி வேடிக்கை பார்த்தது. விலக்கிவிட யாரும் முன்வர
வில்லை. ஒரே மாதிரியான கழுத்து ஆபரணத்தை அவர்களின் மாமனார் வாங்கித் தந்தது. தனுசும், முத்துக் குமாரும் வாங்கி வந்த பழங்களை தம் வண்டியில் வைத்துவிட்டு வந்தபோது அதிர்ச்சிக்
குள்ளானார்கள். கோகிலா அழுத வண்ணம் ஓடிவந்து தம் கணவர் முத்து குமாரிடம் நடந்ததைக்
கூறி, இவுங்க சவகாசம் வேண்டாமுனா கேட்டீங் களா, நகை போச்சு. நாம வேறு வண்டியைப் புடிச்சுக் கிளம்புவோம்" என்று கூறவே, அவனும் பிள்ளைகளும் புறப்பட்டனர். வரும் வழியில் வைக்கோல் படப்பு எரிந்து கொண்டிருந்தது. அதுபோல் அவர்கள் உள்ளமும், முத்துக்குமார், "டேய் சுப்பையா, வேலைக்காரப்பயலே, நீ இப்பபெரிய ஆளாயிட்டியோ, வயலே குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்யுறியாமே!" "ஆமயா, உங்க அண்ணாச்சி உழைச்சு உழைச்சு ஓடாயிட்டாரு. முன்னாடி மாதிரி ஓடியாடி வேலை செய்ய முடியல. அதுனால அவரு நிலத்தை எனக்கு குத்தகைக்கு விட்டுட்டாரு" "அது சரிடா! என்னுடைய வரப்பைக் கரைச்சு என் நிலத்தைக் குறைச்சிட்டியேடா" "ஐயா, சாமி, நானாங்க உங்க நிலத்தை எடுத்துக்கப் போறேன்; உங்க... அண்ணாச்சி நிலம்தானே என்ன குறைஞ்சு போகப்போகுது!" "டேய் அண்ணனாய் இருந்தாலும், தம்பியா இருந்தாலும் வாயும் வயிறும் வேறடா!"
"இரண்டு அடி இருந்த வரப்பைக் கரைச்சு ஒரு அடியாக்கிட்டியே போயி சொல்லு நீதிமன்றத்துல சந்திக்கலாமுனு" "ஐயா! என்னால நீங்க ரெண்டு பேரும் சண்டைபோட்டுக்காதீங்க. அதெல்லாம் வேண்டாமய்யா, நான்தாயா அப்படிச்செய்தேன்; என்னை மன்னிச்சிடுங்கையா", காலில் விழுந்த சுப்பையாவை காலால் எட்டி உதைத்து "போடா நாயே" வேதனையோடு இடுப்பில் கட்டியிருந்த துண்டையெடுத்து தோளில் போட்டு நடந்தான்.
முத்துக்குமார் கோப வெறியில் கொதிப்போடிருந் தான் மதுபாட்டில் பளிங்குத்தரையில் உருண்டு ஓடியது. நீதிமன்றத்துக்குப் போயி ரெண்டுல ஒன்று பாக்கலாமுனு நினைக்கிறேன். நீ என்ன சொல்லுறே" கோகிலா எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றினாள். "சொல்லாதீங்க, ரோசம், மானம் இருந்தா செயலில் காட்டுங்க" என்றாள்.
அரையடி வரப்புப் பிரச்சனையில் விட்டுக் கொடுக்க மனமில்லை. சொத்து சுகம் அனைத்தையும் இழந்தனர். மரகதம் ஆலயத்தில் ஆண்டவனிடம் அழுது செபித்தாள். அவள் நகையை தன் நகையாக அபகரித்துக் கொண்டதற்காக மன்னிப்பு வேண்டினாள் அன்றைய வாசகத்தை எடுத்து வாசிக்கலானாள் "உங்கள் மேல் உடைகளை எடுத்துக் கொள்பவர், உங்கள் அங்கியையும் எடுத்துக் கொள்ளப் பார்த்தால் அவரைத் தடுக்காதீர்கள்" (லூக் 6:30). மரகதம் தன் கணவனிடம், இது என் நகையல்ல, இதை அவளிடம் கொடுத்து விடுங்கள், வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள்" தனுசும், மனைவி மரகதமும் தன் தம்பியின் இல்லம் சென்றனர். "தம்பி நமக்குள் இனி பகை வேண்டாம். இந்தா வயல் பத்திரங்கள், உன் மனைவியின் நகை பெற்றுக் கொள்" என்றான் கண்ணீருடன்.

Comment