05.05.2019 பாஸ்கா காலம் 3ஆம் ஞாயிறு
- Author வேதியர் தி.ம. சந்தியாகு --
- Monday, 24 Jun, 2019
திருப்பலி முன்னுரை: கிறிஸ்துவில் பேரன்புக்குரிய வர்களே, ’மனிதரைப் பிடிப் போராக்குவேன்’ என்று அழைத்த தங்களது தலைவர் இயேசுவின் சிலுவை மரணம் திருத்தூதர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர் தாம் கூறியபடியே உயிர்த்துவிட்டார். ஒன்றிரண்டு முறைகள் கண் முன் தோன்றிவிட்டார். எனினும் அவர்கள், தங்கள் அன்றாடத் தொழிலான மீன் பிடித்தலுக்கே திரும்பிவிட்டனர். இந்நிலையில் மறு அழைப்புச் செய்து, அவர் களுக்கு அன்புணர்வூட்டி, அவர்
களை திருத்தூதுப் பணிக்கு அனுப்பும் அற்புத செயலில் ஈடுபடும் இயேசுவின் இனிய
செயலை இன்றைய திருவழி பாடு படம் பிடித்துக் காட்டுகிறது.
நம்பிக்கை நாயகர் இயேசு தம் வாழ்வில் வெளிப்படுத்திய விழுமியங்களான அமைதி, ஏழையர் உள்ளம், நீதியின்மீது வேட்கை, கனிவு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட
இறையாட்சியை மண்ணுலகெங் கும் நிறுவி வளர்த்திட நம்மை யும் அழைக்கிறார். அதற்கு ஏற்ற தளங்களாக நம் குடும்பங்கள், நிறுவனங்கள், அன்பியங்கள் ஆகியவை விளங்க வேண்டும்.
உயிர்த்த கிறிஸ்துவின் உடனிருப்பும் நமது ஒத்துழைப் பும் சங்கமிக்கும்போது அங்கே
புதுவாழ்வு மலரும். அந்தப் புதுவாழ்வின் உரிமையாளர்
களாய் நாம் வாழ்ந்திட இத்திருப் பலியில் அருள்வேண்டுவோம்.
முதல் வாசக முன்னுரை: திருத்தூதர்பணிகள் 5:27-32,
40-41
இயேசு உயிர்த்துவிட்டார். பலருக்குத் தோன்றி தம் உயிர்ப்பை உறுதிப்படுத்தினார் என்ற செய்தி யூதத் தலைமைச் சங்கத்தாருக்கு பேரிடியாக இருந்தது. எனவே, இயேசுவைப்பற்றி யாருக்கும் அறிவிக்கக் கூடாது என்று திருத்தூதர்களிடம் கட்டளையிட்டிருந்தனர். ஆனால் திருத்தூதர்கள் அவர்களது மிரட்டலுக்கும் தண்டனைகளுக்கும் அஞ்சாமல் அவற்றை மகிழ்வோடு தாங்கிக்கொண்டு இயேசுவை அறிக்கையிட்டனர் எனக் கூறும் முதல் வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.
பதிலுரைப்பாடல்: திருப்பாடல் 36: 1,3, 4-5, 10-11,12
பல்லவி: "ஆண்டவரே உம்மைப் புகழ்வேன்; ஏனெனில் என்னைக் கைதூக்கி விட்டீர்"
இரண்டாம் வாசக முன்னுரை: திருவெளிப்பாடு 5: 11-14
கொல்லப்பட்ட செம்மறியான கிறிஸ்து அனைத்து புகழ்ச்சிக்கும் உரியவர். அவரது உயிர்ப்பில் அனைத்துயிர்களும் அனைத்துலகில் உள்ளோரும் அகமகிழ்கின்றனர். விண்ணக மாட்சிமையில் வீற்றிருக்கும் கிறிஸ்து வணக்கமும் வாழ்த்தும் பெறத் தகுந்தவர் என திருத்தூதர் யோவான் தமக்கு அருளப்பட்ட திருவெளிப்பாட்டில் முழக்கமிடுவதை இன்றைய இரண்டாம் வாசகத்தில் கேட்போம்.
நற்செய்தி: யோவான் 21:1-19
நம்பிக்கையாளர்களின் மன்றாட்டுகள்
1. தலைமை ஏற்க அழைக்கும் தந்தையே இறைவா!
உமது திருஅவையை வளப்படுத்த, வலுப்படுத்த பெயர் சொல்லி உம்மால் அழைக்கப்பட்ட எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர் பெருமக்கள், குருக்கள் துறவியர், திருநிலையினர் அனைவரும் நீர் வழங்கிய உமது ஆட்சிப்பணிக்கான அழைப்பில் நிபந்தனையற்ற பங்களிப்பை வழங்கிட முன்வரவேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. தகுதிகளையும் திறமைகளையும் வழங்கும் இறைவா
எம் நாட்டுத் தலைவர்களும் அதிகாரிகளும் உம்மால் தங்களுக்கு வழங்கப்பட்ட தகுதி மற்றும் திறiமைகளைத் தவறாகப் பயன்படுத்தாமல் அவற்றின் மேன்மையை உணர்ந்தவர்களாய் எங்களுக்குப் பாகுபாடின்றி பணிபுரியவும் அதன் வழியாக நாங்கள் வளமும் நலமும் பெற்று மகிழ்ந்திருக்கவும் அருள்புரியவேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. கொடைகள் அனைத்திற்கும் ஊற்றான இறைவா
எங்கள் குடும்பம், நிறுவனங்கள், அமைப்புகள் அனைத்தையும் உமது அருட்கொடைகளால் நிரப்பியருளும் உம் திருமகள் உயிர்ப்புப் பெருவிழாக்காலத்தில் வாழும் நாங்கள் எங்கள் தார்மிகக் கடமைகளான உழைப்பு, பகிர்வு, மன்னிப்பு வழங்குதல், திறமைகளை உம் மாட்சிக்காகப் பயன்படுத்துதல் போன்றவற்றில் நாளுக்குநாள் வளர்ந்து உடல் உலமும் உள்ள மகிழ்வும் பெற்றிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. புதிய முயற்சிகளுக்கு ஆசியளிக்கும் இறைவா
எங்கள் பிள்ளைகள் நம்பிக்கையோடும், புதிய முயற்சியோடும் மேற்கொண்டுள்ள தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றிபெற்று தாங்கள் விரும்பும் விதத்தில் உயர்கல்வியைத் தொடரவும் வேலைக்கான சிறப்புப் பயிற்சிகளுக்குத் தகுந்த நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பதில் உதவவும், வேலைவாய்ப்புகளை வழங்கி வாழ்வை ஒளிமயமாக்கவும் வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. வெற்றி வழங்கும் விண்ணக இறைவா
எங்கள் பங்கு மக்கள் மேற்கொள்ளும் எல்லாத் தொழில்களிலும் நீரே வெற்றி வழங்குபவராகவும் முன்னேற்றத்தை நோக்கி வழிநடத்துபவராகவும் இருந்து செயல்படவும் குறிப்பாக விவசாயம் நல்ல பலன் கொடுக்கவும் ஏதுவான நீர்வளம், நிலவளம், தொழில் நுட்பவளம், மனித ஆற்றல் வளம் பெருகிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
Comment