No icon

26.05.2019 பாஸ்கா காலம் 6ஆம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
கிறிஸ்துவில் பேரன்புக் குரியவர்களே, ‘உறவும் தொடர்பும் ஒழுங்காக அமைந்துவிட்டால், ஒருவர் இலக்கை எட்டுதல் எளி
தாக இருக்கும்’ என்பது ஆன்றோர் வலியுறுத்தும் நலமான கருத்து களுள் ஒன்றாகும். ஆம் இயேசு தம் தந்தையுடனும் தூய ஆவியாரு
டனும் கொண்டிருந்த உறவு மிகவும் ஆழமானது. அதே போல்
மூவொரு கடவுள் ஒருவருக்கொரு
வர் கடைபிடித்த நடைமுறைத் தொடர்பும் மேலானதாகும். இதனை இயேசு இன்றையத் திருவழிபாட்டில் தெளிவாக விளக்குகிறார். தமது தந்தை தம் வழியாகச் செயல்படுவதையும், தம் பெயரால் வழங்கப்படும் தூய ஆவி வழங்கும் அமைதி உலகம் தரும் அமைதியிலிருந்து வேறுபட்டது என்பதையும் இயேசு தெளிவுபடுத்துகிறார். கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழா காலம் நமக்குப்படிப்படியாக : கிறிஸ்து உலகின் ஒளி, அவர் இரக்கமுள்ளவர், அவர் அன்பின் ஊற்று, அவர் நல்லாயன், அவர் நன்மாதிரியாளர் என்ற கருத்துகளைத் தொடர்ந்து இந்த வாரத்தில் மூவொரு கடவுளின் ஒன்றிப்பு நிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறது. இந்த ஒன்றிப்பு நிலை நாம் வாழும், பணிபுரியும் தளங்களாகிய இல்லம், நிறுவனம், பங்கு, சமூகங்கள் வளர்ச்சியை, முன்னேற்றத்தை நோக்கிய பரிணாமமாக வெளிப்பட நாம் கருவிகளாகத் திகழ வேண்டும். அதற்கான அருளை இத்திருப்பலியில் வேண்டுவோம். முதல் வாசக முன்னுரை: திருத்தூதர் பணிகள் 15:1-2; 22-29
கிறிஸ்துவைப் பற்றிய போதனைப் பணியில் குழப்பம் காணப் பட்டது. பவுலைச் சார்ந்தோர் ஒருவிதமாகவும் மற்ற திருத்தூதர்கள், மூப்பர்கள் வேறுவிதமாகவும் கற்பிப்பது நிறுத்தப்பட வேண்டும் என்று இருதரப்பினராலும் உணரப்பட்டது. எனவே கலந்துபேசி மக்களுக்கு மடல் மூலமாகவும் வாய்மொழியாகவும் தெளிவுபடுத்துவது நல்லது எனத் தீர்மானித்துச் செயல்படுத்தியதை விளக்கும் முதல் வாசகத்தைக் கேட்போம்.
பதிலுரைப்பாடல்: திருப்பாடல் 67:1-2 4,5,7
பல்லவி: “கடவுளே மக்களினத்தார் எல்லாரும் உம்மைப் போற்றிப் புகழ்வார்களாக” இரண்டாம் வாசக முன்னுரை: திருவெளிப்பாடு 21:10-14, 22-23
மீட்பு வரலாற்றில் குலமுதுவர் யாக்கோப்பின் குலங்களில் தொடங்கிய பன்னிரண்டு என்ற எண்ணிக்கை பல முக்கிய கருத்துகளை வெளிப்படுத்த திருவிவிலியம் முழுவதும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய இரண்டாம் வாசகத்தில் நான்கு முறை இடம்பெறச் செய்து வாயில்கள், வானதூதர்கள், திருத்தூதர்கள் எல்லாமே பன்னிரண்டு எண்ணில் பதிந்து விண்ணக எருசலேமின் மாட்சியைப் பறைசாற்றும் அடையாளமாக உள்ளன என்பதை விளக்கிக் கூறும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிகொடுப்போம்.
நற்செய்தி வாசகம்: யோவான் 14:23-29
நம்பிக்கையாளர்களின் மன்றாட்டுக்கள்
1. ஒன்றிணைத்துக் காக்கும் உன்னத இறைவா!
எம் திருஅவையின் வழி காட்டிகளான எங்கள் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவிகள், மற்றும் திருநிலையினர் அனைவரும் மூவொரு கடவுள் எப்படி தம்முள் ஆள்தன்மையில் ஒன்றிணைந்து செயல்படுகிறார்களோ அப்படியே எல்லா நிலையினரும் அறிதல், ஆராய்தல், அரவணைத்தல், அனுபவமாக்குதல் ஆகிய திரு
அவையின் எல்லாச் செயல்பாடுகளிலும் இணைந்து செயல்பட்டு வெற்றிகாண வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. அனைத்தையும் அறியும் அன்புத் தந்தையே இறைவா!
எம் நாட்டின் பன்மைத் தன்மையைப் பாதுகாக்கும், இறை
யாண்மையை வளர்க்கும் உண்மை
யான சனநாயகத்தை அடையாளப்
படுத்தும் அனைத்துக் கூறுகளையும்
அழிவின்றிப் பாதுகாக்கும், மனித வளங்களையும் கனிம வளங்களை
யும் வளர்த்துப் பயன்படுத்தும், பேரினம் என்பதைப் பயன்படுத்தி
யாரையும் துன்புறுத்துவதைத் தடுக்
கும் நல்ல அரசு எங்களுக்கு அமைய வேண்டுமென்றும் உம்மை மன்றாடுகிறோம்.
3. அன்னை மரியாவைக் கொடை யாகத் தந்த இறைவா!
உமது அன்னை மரியாவுக்கு
மேலான வணக்கம் செலுத்தத் தூண்டும் மே மாத அன்னை மரியா
பக்தி முயற்சிகள் அனைத்தும் எம் திருஅவையின் வழிகாட்டுதலின்படி
முறையாக, சிறப்பாகநடை பெறவும்
நாங்கள் மேற்கொள்ளும் சிறப்புச்
செயல்பாடுகள், திருப்பயணங்கள், அறச் செயல்கள் எல்லாம் எங்களுக்
கும் எங்கள் வழியாகப் பிறருக்கும்
பேருதவியாக அமைய வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. உண்மை உழைப்பே உயர்வுக்கு வழி என்பதை உணர்த்தும் இறைவா!
நீர் எமக்கு வழங்கியுள்ள விலைமதிக்க முடியாத, போனால் திரும்பி வராத நேரத்தைச் சரியான திட்டமிடுதலுடன் பயன்படுத்தவும் கடின உழைப்பை மேற்கொண்டு எங்கள் தேவைகளை, குடும்ப வளர்ச்சியை  நிறைவாக அடையவும் உண்மை உழைப்புக்கு நாங்களே மேலான சாட்சிகளாகத் திகழவும் அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. பிரிந்ததை இணைக்கும் இறைவா
உண்மை, நன்மை, மேன்மை
ஆகியவற்றைத் தனக்கத்தே கொண்
டுள்ள கத்தோலிக்கத் திருஅவையை
விட்டு தவறான புரிதலாலோ பிறரது ஏமாற்றுவித்தைகளாலாலோ பிரிந்து போனவர்கள் உண்மையின் துறைமுகமாகிய கத்தோலிக்கத் திரு
அவையில் வந்து இணைந்து தங்கள்
வாழ்வைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டுமென்று உம்மை மன்றாடு கிறோம்.

Comment