ஜூலை 14, 2019
அகில உலகத் தொடர்பு நாள்
1. திருப்பலி முன்னுரை
மனிதன் தனித்தீவுகளாகத் தனிமையிலும் தனிமைப்படுத்தப்பட்ட சூழலிலும் வாழ படைக்கப்பட வில்லை; மாறாக அவன் (அ) அவள் ஒரு சமூகப் பிராணியாக உறவில், ஒன்றிப்பில் வாழ அழைப்புப் பெற்றுள்ளார் என்பதை உணர்த்த, வலியுறுத்த கொண்டாடப்படும் அகில உலகத் தொடர்பு நாள் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு இறைச்சமூகமாகிய உங்களை வாஞ்சையோடு வரவேற்கிறோம்.
அன்பர்களே! ஒன்றிப்பு மற்றும் பிறர்நலன் என்பதை அடிப்படையாகக் கொண்டதாக சமூகத் தொடர்பு ஊடகங்கள் அமைந்திடல் வேண்டும். ஏனெனில் ஊடகங்கள் இன்றி இவ்வுலகம் இல்லை என்றளவிற்கு அங்கிங்கெனாதபடி எங்கும் ஊடுருவி உள்ளன; நமது நேரத்தின் ஆதாரமாகவும், அறிவு மற்றும் உறவுகளை கட்டமைப்பதாகவும் உள்ளன; திருஅவையும் ஊடக உருப்பெருக்கத்தைக் கண் காணிக்கிறது. இணையவழி பெருக்கத்தைக் கண்காணிக்கிறது. இணையவழி ஊடக அதர்மத்தால் ஏகப்பட்ட சவால்கள், எதிர்மறை இயல்புகள் பெரிதும் வெளிப்பட்டாலும் நபர்களுக்கிடையே சந்திப்பையும் தோழமையையும் வளர்த்தெடுப்பதற்கு அது பயன் படவேண்டும், தொண்டாற்ற வேண்டும் நம்மை ஒருங்கிணைக்கிற வகையில் இணைந்தே நன் மையைத் தேடிட, இணையம் பெருவழியாகி, வளமாக அமைந்திடவேண்டும் என்ற திருஅவையின் விருப்பத்தை நாம் துய்த்துணர்ந்து ஊடகவழி நன் மையையும், பிறர் நலனையும் நாட வரம் வேண்டி அருள்தரும் தெய்வீகத் திருப்பலியில் இணைந்து மன்றாடுவோம்.
2. திருக்குழும மன்றாட்டு
என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, மூவொரு இறைக்கொள்கை குறித்துக் காட்டுகிற ஒன்றிப்பை வெளிப்படுத்த, நம்பிக்கையாளர்களாகிய நாங்கள் அழைக்கப்பட்டுள்ளோம். அத்தகைய உறவு ஒன்றிப்பு, இறையன்பு என்னும் உமது தூண்டு விசையின் கீழ் வழிநடத்தப்படுமாறு, எங்கள் அகக்கண்கள் திறக்கப்படுவதாக. இதனால் சமூக ஊடங்களை பொறுப்போடு கையாளக் கற்றுக் கொள்வோமாக. உம்மோடு தூய ஆவியாரின்...
3. பாவ மன்னிப்பு மன்றாட்டு
செபம் / பாடல் : மன்னியும் மன்னியும் மன்னியுமே தேவா!
மன்னியும் மன்னியும் மன்னியுமே இறைவா!
1. இரக்கம் நிறைந்த இறைவா, தனி நபர்களுக் கிடையே உள்ள உறவுமுறைகளை தெரிந்தே குறி வைத்து, பெரும்பாலும் நற்பெயருக்குக் களங்கம் கற்பிக்கிற வகையில் பரப்பப்படுகிற வதந்திகளை உண்மையென்று நம்பி, உண்மைக்கு உலை வைத்த தருணங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்பு வேண்டுகிறோம். எம்மை மன்னியும் ஆண்டவரே!
2. மன்னிப்பு வழங்கும் இறைவா, தனிநபரின் அந்தரங்கத் தகவல்களை, அரசியல் அல்லது பொருளாதார லாபங்களுக்காகக் குறிவைத்து, தனிநபரின் உரிமைகளை மதிக்காமல் சூழ்ச்சித் திறத்துடன் இணையத்தைப் பயன்படுத்திய குற்றத்திற்காக மனம் வருந்தி மன்னிப்பு வேண்டு கிறோம். எம்மை மன்னியும் ஆண்டவரே!
3. பரிவுமிக்க பரம்பொருளே, இணையத்தின் வழியே மனிதரைப் பிரிக்கும் காரணிகளாய் இருந்திருக்கி றோம்; சந்தேகத்தை வளர்த்தெடுத்து இருந் திருக்கிறோம்; தப்பெண்ணங்களை ஊதிப் பெரிதாக்கியிருக்கிறோம்; வெறுப்புச்சுருள்களைத் தூண்டியிருக்கிறோம்; இத்தகைய கீழ்த்தரமான செய்கைகளுக்காக மனம் வருந்தி மன்னிப்பு வேண்டுகிறோம். எம்மை மன்னியும் ஆண்டவரே!
4. இணைந்து வாழ அழைப்பு விடுக்கும் ஆண்டவரே, இணைய வழி ஊடகத்தால் சமூக நீரோட்டத்திலிருந்து விலகி, எம்மை நாங்களாகவே விலக்கி, சமூக வனவாசிகளாக, சுயநலத்துடன் வாழ்ந்திருக்கிறோம். மனம் வருந்தி மன்னிப்பு வேண்டுகிறோம். எம்மை மன்னியும் ஆண்டவரே!
5. உண்மையின் ஆண்டவரே, பல நேரங்களில் சமூகத் தொடர்பு ஊடகங்களைப் பயன்படுத்தி உண்மையைத் திரித்து, பொய்யை பூதாகரப்படுத்தி இருந்த தருணங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்பு வேண்டுகிறோம். எம்மை மன்னியும் ஆண்டவரே!
4. இறைவாக்கு வழிபாடு
முதல் வாசகம்: இணைச்சட்ட நூல்: 30:10-14
முதல் வாசக முன்னுரை
கடவுள் தம் மக்களாகிய நம்மோடு பேச, உரையாட, வழிநடத்த அவரால் கொடுக்கப்பட்ட அரிய கருவூலம் இறைவார்த்தை அடங்கிய திருவிவிலியம்; பழைய ஏற்பாட்டில் சட்டத் தொகுப்பு என்றும் அழைக்கப்பட்டது. இது ஒரு மேன்மையான, சமூக தொடர்பு ஊடகம் என்ற உண்மையை உரக்கச் சொல்கிறது இன்றைய முதல் வாசகம். நமக்கு அருகில் உள்ள, இதயத்தில் குடிகொண்டுள்ள ஊடகமாம் இறைவார்த்தையை நேசிக்க உறுதிபூண்டு முதல் வாசகத்திற் கு செவிமடுப்போம்.
பதிலுரைப்பாடல்: திருப்பாடல் 69
இரண்டாம் வாசகம்: கொலோசையர் 1:15-20
இரண்டாம் வாசக முன்னுரை
விண்ணையும், மண்ணையும் இணைக்கும் பாலம் இறைமையையும், மனிதத்தையும் இணைத்த பேரின்பம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே. தனி மனிதர்களை சமூகமாக சங்கமிக்கச் செய்யும் இணைய ஊடக உலகம், இணைப்பாளராகிய இயேசுகிறிஸ்துவை இறைமகனாக ஏற்று, அவரின் நற்செய்தி பரவ, முழுமூச்சுடன் பயணிக்கிறபோது, இவ்வுலகம் இறைவனோடு ஒப்புரவாக இயலும் என தியானித்தவர்களாய் இன்றைய இரண்டாம் வாசகத்திற்கு செவிகொடுப்போம்.
அல்லேலுhயா: யோவான் 6:63b, 68b
ஆண்டவரே, உம் வார்த்தைகள் வாழ்வு தரும்
ஆவியைக் கொடுக்கின்றன. நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. அல்லேலூயா!
நற்செய்தி: லூக்கா 10: 25-37: “இணைய வாசிகள் நல்ல சமாரியன்களாகிட”
5. நம்பிக்கையாளர்கள் மன்றாட்டு
1. இணைப்பாளராகிய இறைவா, திருஅவையை செம்மையாக காத்து வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் இல்லறத் தார் அனைவரும் தாராளமாக இயங்கும் சமூக வலையமைப்புகள் வழியே இயேசு கிறிஸ்துவின் விழுமியங்கள் கொண்ட நற்செய்தியைப் பறைசாற்றி, பரவச் செய்திட ஆற்றல் தந்திட இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. சமூகத்தைச் சீர்ப்படுத்தும் சிற்பியே, எம் இறைவா! இணையம் என்பது ஒருவர் மற்றவரைச் சந்திப்பதை வளர்த்தெடுப்பதற்கான ஒரு நல்வாய்ப்பு என்பதை மாந்தர் அனைவரும் உணர்ந்து, இணைந்து வரவும், சமூக மாற்றத்திற்கான அறைகூவலை ஏற்று, நல் சமுதாயம் படைக்க வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. ஆற்றலின் ஊற்றே எம் இறைவா, அற்புத ஆற்றல் கொண்ட எம் இளைஞர், இளம் பெண்கள் அனைவரும் மாறிவரும் சமூகச் சூழலை புரிந்து அதன்படி நடக்கவும், மிக எளிதில் திசை திருப்பும் இன்றைய ஊடகங்களை, கவனமாக கையாளவும், தீயன அகற்றி, நல்லனவற்றைப் பற்றிக்கொண்டு புதுச்சமூகம் படைத்திட வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. அரவணைக்கும் ஆண்டவரே, எம் இறைவா! சமூக ஊடகங்களான ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்-டாக் போன்றவற்றிற்கு அடிமையாகி தங்கள் வாழ்வைப் பறிகொடுத்தோர் மத்தியில் விழிப்புணர்வு பெருகி, தத்தம் வளங்களை வீணடிக்காத வண்ணம், இன்றைய தலைமுறையினர், மாய கவர்ச்சி என்னும் சூழ்ச்சிகளை, அறுத்தெறிய வரம் வேண்டி இறைவா உம்மை மன் றாடுகின் றோம்.
5. அன்பின் பிறப்பிடமே எம் இறைவா, தகவல் தொடர்பு சாதனங்களின் மிதமிஞ்சிய வளர்ச்சியினால் பெரிதும் பாதிப்படைந்துள்ள, கண்டு கொள்ளாத சூழலில் தள்ளப்பட்டுள்ள, இயற்கை மற்றும் மனிதர் தவிர்த்த உயிரினங்களுக்காக வேண்டுகிறோம். மனிதர் தம் எல்லையை உணர்ந்து, இயற்கையைப் பாழ்படுத்தும் எண்ணங்களிலிருந்து விடுதலை பெற இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
6. இயற்கையின் இருப்பிடமே இறைவா, இணையக் கழிவுகள் பெரிதும் சுகாதாரகேட்டை தோற்றுவிக்கும் சூழலில், மனித மாண்பையும், பிறர் நலனையும் முன்னிலைப்படுத்தி, பொருள் குவிக்கும் மனநிலை யினின்று விடிவு பெற வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
6. காணிக்கை மீது மன்றாட்டு
எங்கள் இறைவனாகிய ஆண்டவரே, பலி பீடத்திற்குக் கொணரப்பட்டுள்ள அப்ப, இரசக் காணிக்கைகளோடு இன்றைய ஊடக சாதனங்களையும் படைக்கின்றோம். மனித சமூகத்தின் மேன்மைக்காக இவைகள் பெரிதும் பயன்படுத்தப்படவும்; தீமைகள் களையப்பெற்று உண்மையான ஊடக சாட்சிகளாகிடவும் வேண்டுமென்று, எங்கள் ஆண்ட வராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
7. தொடக்கவுரை
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
எல் : உம் ஆன் மாவோடும் இருப்பாராக
குரு: இதயங்களை மேலே எழுப்புங்கள்
எல் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்
குரு: நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுங்கள்
எல் : அது தகுதியும் நீதியும் ஆனதே.
ஆண்டவரே, தூயவரான தந்தையே, என்று முள்ள எல்லாம் வல்ல இறைவா, எந்நாளும் எவ் விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது மெய்யாகவே தகுதியும் நீதியுமாகும். எங்கள் கடமையும் மீட்புக்குரிய செயலுமாகும்.
என்றும் வாழும் குருவாகிய அவர், நிலையான தொரு நியமமான அன்புறவை ஏற்படுத்தி, மீட்பளிக்கும் அருளடையாளத்தை நிறுவினார். இதனால் எம் வாழ்வானது எந்த அளவுக்கு, அதன் இயல்பில், தனிநபர் நலனை குறைத்து, அதிகமாக பிறர்நலனை சார்ந்திருக்கிறதோ, அப்போது மேலும் மனிதத்தன் மைக்குரியதாகிறது. மனிதத் தன்மைக்குரியதாக மாறும் பாதை, பிறரை ஓர் எதிரியாகப் பார்க்கும் தனிநபர் நலனிலிருந்து மற்றவரை தம்மோடு பயணிக்கும் சகத் தோழராக அடையாளம் காணும் ஒரு நபராக நகர்வது ஆகும். ஆகவே வானதூதர், புனிதர்களோடும் இணைந்து, உம்மைப் புகழ்ந்தேத்தி அறிக்கையிட்டுச் சொல்வதாவது.
8. நன்றி மன்றாட்டு
எல்லாம் வல்ல ஆண்டவரே, நாங்கள் கொண்டாடிய இந்த அருளடையாளத்தின் ஆற்றல்
எங்கள் உள்ளங்களில் தங்குவதாக. இதனால்
தனிநபர் நலனை விடுத்து, பிறர் நலனைப்
பெரிதும் விரும்புவோமாக. இணைய பண்பாட்டை வளர்ப்பதை விட்டு இயற்கையையும், மனிதத்தையும் வளர்த் தெடுப்போமாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே. ஆமென்!
9. தீர்மானங்கள்
(இடதுகரத்தை நெஞ்சில் வைத்து வலதுக்கரத்தை
உயர்த்தி சொல்வோம்)
குயஉநbடிடிம, கூறவைவநச, றுhயவளயயீயீ போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்போது பொறுப்புணர் வோடும், சுயக்கட்டுப்பாட்டுடனும் நடப்பேன் .
♦ இணையம் என்னை ஆட்டிப்படைக்க இடம் தரமாட்டேன்.
♦ பிறர்நலனுக்கு எதிராக பதிவிடும் செயலில் இறங்க மாட்டேன் .
♦ தேவைக்கு அதிகமாக ஊடக சாதனங்களை பயன் படுத்தமாட்டேன்.
♦ நேர விரயத்தை முற்றிலும் தவிர்ப்பேன் (ஊடக பயன் பாட்டினால் விளையும்)
♦ ஊடக தர்மத்தினை அறிந்து, அதனை மதித்து செயல்படுவேன்.
♦ இணையத்தைக் காட்டிலும் இறைவனையும், இயற் கையையும், பிறரின் இருப்பையும் மதித்து நேசிப்பேன்.
♦ இணையத்தை இறையாட்சி விழுமியங்கள் பரவும் களமாக்கிட முன்வருவேன்.
♦ அலைபேசி பயன்பாட்டை வீடுகளில் தவிர்த்து குடும்ப உறவுகளுக்கு அதிகமான நேரத்தை ஒதுக்குவேன்.
♦ வாகனம் ஓட்டும்போது அலைபேசியில் பேசுவதை விட்டுவிடுகிறேன்.
♦ அலைபேசியை அளவோடு, தேவைக்கேற்ப, நமக்கு அடுத்திருப்பவரை பாதிக்காத வகையில் பயன் படுத்துவேன்.
♦ அலைபேசி, கணினியில் வன்முறையைத் தூண்டும் விளையாட்டுகள் விளையாடுவதை விட்டுவிடுகிறேன்.
♦ கடந்த 44 ஆண்டுகளாக தமிழக இறைமக்களின் தனிப்பெரும் வார இதழாக வெளிவரும் நம் வாழ்வு வார இதழையும் இல்லந்தோறும் இறையாட்சி கடந்த ஆறு ஆண்டுகளாக ஒளிபரப்பப்படும் மாதா தொலைக்காட்சியையும் நான் ஆதரித்து ஊக்கப்படுத்துவேன்.
10. உறுதி ஏற்பு மன்றாட்டு
அன்பு தந்தையே இறைவா! அறிவுறுத்துதல், பயிற்றுவித்தல், பொழுதுபோக்குதல் எனும் மூன்று நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு மனிதப் பயன்பாட்டிற்காக, சமூக மேம்பாட்டிற்காக உம்முடைய ஞானத்தால் ஊடகங்கள் மனிதனால் உருவாக்கப்பட்டவை. ஆகவே, ஊடகங்கள் எங்களை ஆளவிடாமல் நாங்கள் அவற்றை எங்களது கட்டுப் பாட்டுக்குள் வைத்து உண்மை, அன்பு, நீதி எனும் இறையாட்சி மதிப்பீடுகளை சமூகத்தில் விதைத்து நம்பிக்கையையும் எதிர்நோக்கையும் பகிர்ந்து வாழ்ந்திடும் வரமருள வேண்டுமென்று - எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
Comment