No icon

Pope Francis with Youth

இளையோரை ஈடுபடுத்தும் உலகளாவிய அமைதித் திட்டம்

இளையோரை ஈடுபடுத்தும் உலகளாவிய அமைதித் திட்டம்

புதிய தொழில்நுட்பங்களையும், உலகெங்கும் இலட்சக்கணக்கான இளையோரையும் ஈடுபடுத்தும் உலகளாவிய அமைதித் திட்டம் ஒன்றை, மார்ச் 21 ஆம் தேதி  மாலை திருத்தந்தை பிரான்சிஸ் தொடங்கி வைத்துள்ளார்ஸ்கோலாஸ் அக்குரன்ட்டஸ் உலகளாவிய அமைப்பின், உரோம் புதிய அலுவலகங்களை, பார்வையிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோர், அமைதி நடவடிக்கைகளை மேலும் அதிக உறுதியுடன் தேடும் வழிகளில், தங்களை அர்ப்பணிப்பதற்கு உதவியாக, இந்த உலகளாவிய அமைதித் திட்டத்தைத் துவங்கி வைத்துள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது, உலகின் பல நாடுகளிலுள்ள இளையோருடன், காணொளி கருத்தரங்கு ஒன்றிலும் திருத்தந்தை கலந்துகொண்டார். அச்சமயத்தில், ளுஉhடிடயள அமைப்புகளால் ஊக்குவிக்கப்பட்ட, கலைகள், விளையாட்டு மற்றும் தொழில்நுட்பத் திட்டங்களில் பங்குபெற்ற சிறாரின் பகிர்வுகளையும் திருத்தந்தை கேட்டறிந்தார். இந்தக் காணொளி கருத்தரங்கில், இத்தாலி, பானமா, போர்த்துக்கல், உருமேனியா போன்ற நாடுகளைச் சேர்ந்த சிறார் பங்குபெற்றனர்

இச்சிறார், தங்களின் திறமைகளையும், படைப்பாற்றல்களையும், உலகின் ஏனைய மாணவர்களுடன் பகிர்ந்துகொள்ளுமாறு திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

அமைதி மற்றும் பொதுநலனின் அடையாளமாக, அனைத்துச் சிறாரும், குறிப்பாக, மிக வறியச் சிறார், அரசுப் பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் கல்வி கற்க வாய்ப்பளிக்கும் ஓர் உலகை அமைப்பதற்கு, இந்த ஸ்கோலாஸ் அக்குரன்ட்டஸ் முயற்சித்து வருகிறது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அர்ஜென்டீனாவில் பணியாற்றிய காலத்தில் துவங்கிய ளுஉhடிடயள டீஉஉரசசநவேநள அமைப்பு, இன்று, உலகளாவிய அமைப்பாக மாறி,190 நாடுகளில், 4 இலட்சத்து 50 ஆயிரத்துக்கு அதிகமான கல்வி நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டுள்ளது.

Comment