No icon

திருத்தந்தையின் முழக்கம்

(நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள், மேலும் சுற்றறிக்கைகளின் இரத்தினச் சுருக்கம்)

செவிமடுத்தல், புரிந்துகொள்ளல், இறை விருப்பத்தை நடைமுறைக்குக் கொணரல் என்பவைகளை நாம் மறந்துவிடக்கூடாது என்பதே, ஒருங்கிணைந்த பயணத்தின் அடிப்படை உண்மையில் காணப்படும் கருப்பொருள்.”

- அக்டோபர் 4, திருத்தந்தையின்டுவிட்டர்குறுஞ்செய்தி

சமாரியப் பெண்ணுக்கு வழங்கியது போலவே, தனது அன்பை நமக்கும் வழங்கும் இயேசு, சவாலை ஏற்றுக்கொள்ளவும், பழக்கவழக்கங்கள், வெளிப்படையான தீர்வுகள், அவநம்பிக்கை போன்றவற்றால் நிரப்பப்பட்ட நமது குடத்தை விட்டுவிட, தனது வாழ்க்கையையே நமக்குப் பரிசாக அளிக்கின்றார்.”

- அக்டோபர் 3, இயேசுவின் சிறிய சகோதரிகள் சபைக்கான செய்தி

செபமற்ற செயல் பயனற்றது. செபத்தினால் இவை அனைத்தும் நிச்சயம் நமக்குக் கிடைக்கும். தனிப்பட்ட மற்றும் அர்ப்பண வாழ்வை அழிக்கும் சோகம் எனும் புழுவை விட்டு விலகுங்கள். மனம் திரும்புதலுக்கான வருத்தமல்ல; மாறாக, அன்றாட வாழ்வில் வரும் தேவையற்ற வருத்தம் எனும் சோகம் நம் வாழ்வை புழுப் போல அழித்துவிடும்.”

- அக்டோபர் 2, திரு இருதய மறைப்பணியாளர்கள் சபைக்கான செய்தி

குழந்தைகளைப் போல தூய்மையான உணர்வுகளுடன் வாழவேண்டும். ஏனென்றால், குழந்தைகள் போல தூய்மையான உள்ளம் கொண்டவர்கள் கடவுளின் அரசைச் சார்ந்தவர்கள். குழந்தைகள் தெளிவான உறவு, அயலாரின் வரவேற்பு, படைப்பு என அனைத்தையும் மதிக்கின்றார்கள்.”

- அக்டோபர் 1, ஞாயிறு மூவேளை செபவுரை

நமது பொய்யானஆம்என்ற வார்த்தைகளால் தந்தை கடவுளுக்கு அவமரியாதை செய்கின்றோம். தந்தையின் விருப்பப்படி நம் வாழ்வை அர்ப்பணித்து, ஒவ்வொரு நாளும்ஆம்என்று சொல்லத் தயாராக இருக்க வேண்டும்.”

- அக்டோபர் 1, ஞாயிறு மறையுரை

அக்டோபர் மாதம் செபமாலை மாதாவிற்காக அர்ப்பணிக்கப்பட்ட மாதம். செபமாலை செபிப்பதன் அழகை நாம் அனுபவித்து மகிழ வேண்டும். கிறிஸ்துவின் மறைபொருளைச் சிந்தித்து வாழ்ந்த அன்னை  மரியாவிடம், திரு அவை மற்றும் உலகத்தின் தேவைகளுக்காகச் செபமாலை செபியுங்கள்.”

- செப்டம்பர் 30, கத்தோலிக்கத் திரு அவைக்கான செய்தி

Comment