No icon

திருத்தந்தையின் முழக்கம்

(நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள், மேலும் சுற்றறிக்கைகளின் இரத்தினச் சுருக்கம்)

ஏழைகளின் வேதனை மற்றும் அழுகை, நம் சோம்பலில் இருந்து நம்மை எழுப்பி, நம் மனசாட்சிக்குச் சவால் விட வேண்டும். நீரை ஒரு போதும் வெறும் பொருளாகவோ, பரிமாற்றத்தின் பொருளாகவோ அல்லது ஊக்கத்திற்கான பொருளாகவோ கருதக்கூடாது; மாறாக, உயிராகக் கருத வேண்டும்.”

- அக்டோபர் 16, உலக உணவு நாளுக்கான செய்தி

திருப்பலியில் பங்கேற்றல், இறைவார்த்தைகளைக் கேட்டல், பலவீன மானவர்கள் மற்றும் ஏழைகளுக்கு உதவுதல், துன்பப்படுபவர்களுக்கு ஆறுதல் அளித்தல் போன்றவற்றில் நாம் கடவுளுக்கான நேரத்தை அளிக்கலாம். இத்தகைய கடவுளின் நேரம் நம்மை தீமை, தனிமை மற்றும் உணர்வற்ற நிலையிலிருந்து காப்பாற்றுகிறது.”

- அக்டோபர் 15, ஞாயிறு மூவேளைச் செபவுரை    

இறைவன் நம்மை அவருடனும், ஒருவர் மற்றொருவருடனும் தொடர்பு கொள்ளும்படி அழைக்கின்றார். அவருடைய அழைப்பை நாம் ஏற்கவோ அல்லது ஏற்காமலோ இருக்க நம்மைச் சுதந்திரமாக விட்டுவிடுகிறார். கடவுள் தம்மை ஒருபோதும் திணிக்கவில்லை; மாறாக, நமது விருப்பத்தை முன்னிலைப்படுத்துகின்றார்.”

- அக்டோபர் 15, ஞாயிறு மறையுரை

பள்ளி வழங்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்! அவைகளைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. உலகெங்கிலும் உள்ள பல சிறார் படிக்கக்கூட வாய்ப்பு இல்லாது இருக்கின்றார்கள். அவர்களுக்காகப் பணியாற்றுங்கள், அவர்களின் உரிமைகளுக்காகப் போராடுங்கள்.”  

- அக்டோபர் 14, மிலான் மாணவர்களுக்கான செய்தி

உலகளாவிய ஒற்றுமை, சந்திப்பு, ஒன்றிப்பு ஆகியவற்றால் ஆன கத்தோலிக்க விழுமியங்கள் நிறைந்த இதயங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். மறைப் பணியாளர்கள் ஒவ்வொருவரும் கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவுடனான நெருங்கிய உறவைத் திருப்பலி, திருநற்கருணை ஆராதனை ஆகியவற்றின் வழியாக வளர்த்துக்கொள்ள வேண்டும்.”

- அக்டோபர் 13, ஸ்கலபிரினி ஆன்மிக மாநாடு

Comment