No icon

திருத்தந்தையின் முழக்கம்

(நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள், மேலும் சுற்றறிக்கைகளின் இரத்தினச் சுருக்கம்)

இந்த உலகத்தின் காரியங்கள், சீசருக்குச் சொந்தமானது என்றாலும், இவ்வுலகமும்-மனிதரும் கடவுளுக்குச் சொந்தமானவர்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.”

- அக்டோபர் 22, ஞாயிறு மூவேளை செபவுரை

நாணயத்தில் பேரரசரின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தாலும், நினைவில் கொள்ள வேண்டிய முக்கியக் காரியம் என்னவென்றால், நம் வாழ்வில் கடவுளின் உருவம் பதிக்கப்பட்டுள்ளது என்பதுதான். இதை நம்மில் யாராலும் மறைக்க முடியாது.”

- அக்டோபர் 22, ஞாயிறு மறையுரை

நமது சாயல் மற்றும் இலக்காக இருக்கும் இயேசு கிறிஸ்துவின் மீது நமது பார்வையைத் திருப்ப, அன்னை மரியா செபமாலை மாதத்தில் நம்மை ஊக்கப்படுத்துகின்றார்.”

- அக்டோபர் 22, திருத்தந்தையின்டுவிட்டர்குறுஞ்செய்தி

நற்செய்தியின் வற்றாத புதுமைத் தன்மை என்பது, அதன் தெய்வீக, கருணை நிறை மற்றும் பெருமிகுதியான அன்பே. இந்த நற்செய்தியின் அன்பு, புனிதர்களைப்போல் அதே வழியில், அதாவது, வார்த்தைகளால் அல்ல, வாழ்க்கையால் இறைவனைக் காட்ட நமக்கு அழைப்பு விடுக்கிறது.”

- அக்டோபர் 21, உரோம் பத்திரிகையாளர்களுக்கான செய்தி

இயேசுவை அதிகமாக அன்பு செய்யும் மக்கள், இயேசு நமது அதிகாரியல்ல; மாறாக, நம்மைக் கடவுளோடு இணைக்கும் இணைப்பாளர் என்பதனை அருள்பணியாளர்களுக்கு உணர்த்துகின்றனர்இப்படிப்பட்ட பொது நிலையினரை நம் அருகில் வைத்துக் கொண்டு செயல்பட வேண்டும்.” 

- அக்டோபர் 20, புதன் மறைக்கல்வியுரை

அன்பான இளைஞர்களே, இயேசுவை உங்கள் இதயத்தின் மையப்பகுதியில் வையுங்கள், அப்போதுதான் அவருடன் தீவிரமான உறவு கொண்டு வாழவும், அறிந்து கொள்ளவும், இந்த உலகத்தில் அவருக்குச் சாட்சியம் அளிக்கவும் முடியும்.”

- அக்டோபர் 19, இத்தாலிய இளைஞர்களுக்கான உரை

Comment