No icon

திருத்தந்தையின் முழக்கம்

நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள், மேலும் சுற்றறிக்கைகளின் இரத்தினச் சுருக்கம்

 “இயேசு மத்தேயுவை அழைத்தவுடன், தனது நண்பர்களை மெசியாவைச் சந்திக்க அழைத்துச் சென்றது போல, பவுல் உயிர்த்தெழுந்த இயேசுவுடனான சந்திப்பிற்குப் பின் திருத்தூதராக மாறியது போல், இயேசுவின் அன்பு அழைப்பிற்குப் பதிலளிக்கும் ஒரே வழி உடனடியாக மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதுதான்.”

- நவம்பர் 17, அகில உலகத் திரு அவைக்கான செய்தி

புனிதர்களின் சக்தி வாய்ந்த எடுத்துக்காட்டு தியாகம். தியாகிகள் இல்லாத காலமென எதுவும் இல்லை. திரு அவையின் வரலாறு முழுவதிலும், நாம் வாழும் இன்றைய காலக்கட்டத்திலும் கிறிஸ்தவ வாழ்க்கையில் தொடர்ச்சியான தியாகத்தில் வாழ்ந்தவர்களின்  எடுத்துக்காட்டுகள் பல உள்ளன.”

- நவம்பர் 16, புனிதம் குறித்த மாநாட்டில் உரை

இன்றைய சூழலில் காணப்படும் எல்லாவிதமான வறுமைக்கும் தாய் போர்தான். இந்தப் போரின் விளைவுகள், பெரிதாகப் பொதுமக்கள் மற்றும் குடும்பங்களைப் பாதிக்கின்றன. கடவுளின் பரிசாகவும், நீதி மற்றும் உரையாடலுக்கான நமது உறுதிப்பாட்டின் விளைவாகவும், அமைதி நிலவுவதற்கு ஒவ்வொருவரும் முயற்சி எடுக்க வேண்டும்.”

- நவம்பர் 15, திருத்தந்தையின்டுவிட்டர்செய்தி

நற்செய்தி என்பது ஒரு மகிழ்வின் அறிவிப்பு. இது கருத்தியல்கள் போன்றதல்ல; மாறாக, மகிழ்வின் நெருப்பைக் கொண்டது. கருத்தியல்கள் புன்னகைக்கத் தெரியாதவை. நற்செய்தி அறிவிப்போ மகிழ்வானது, நற்செய்தி அறிவிப்பு என்பது, பற்றாக்குறையினால் வரும் அழுத்தத்தால் வருவதல்ல; மாறாக, முழுமையிலிருந்து வருகின்றது.”

- நவம்பர் 15, புதன் மறைக்கல்வி உரை

கிறிஸ்தவ நம்பிக்கை என்பது, நம்மிடையே இருக்கும் கிறிஸ்துவின் பிரசன்னம் குறித்து உணர்ந்துகொள்வது, மற்றும் இருண்ட காலங்களில் இந்த நேர்மறை எண்ணங்களை நிலைநாட்டவும், பகிரவும் திட்டங்களைப் பரிந்துரைப்பதுமாகும்.”

- நவம்பர் 14, உலக இளையோருக்கான செய்தி

ஏழ்மை இல்லாமல் துறவற வாழ்க்கை இல்லை. அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையைப் பாதுகாப்பது ஏழ்மையே. இதுவே துறவற வாழ்வின் அடித்தளம் என்பதை ஒரு போதும் மறந்து விடக்கூடாது.”

- நவம்பர் 13, நேட்ரோ தெம் பள்ளி சபைக்கான செய்தி

Comment