No icon

திருத்தந்தையின் முழக்கம்

நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள், மேலும் சுற்றறிக்கைகளின் இரத்தினச் சுருக்கம்

“கிறிஸ்தவ ஒன்றிப்பை நோக்கிய நம் பயணம் பன்முகத்தன்மையை மதிக்கிறது. ஒத்திசைவில் நம்மை தூய ஆவியார் சிறைப்படுத்துவதில்லை; மாறாக, நாம் ஒருவரையொருவர் நமக்குள்ளிருக்கும் வேறுபாடுகளுடன் அரவணைத்துக் கொள்ள நம்மைத் தயாரிக்கிறார்.”

- சனவரி 23, கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்திற்கான செய்தி

“பத்திரிகையாளர் பணி என்பது, நோய்களைக் குணப்படுத்துவதன் வழியாக மனித குலத்தை அன்பு செய்யும் ஒரு மருத்துவரின் பணி போன்றது. உலகம் மற்றும் சமூகத்தின் காயங்களைத் தன் கரங்களால் தொட விரும்பும் பத்திரிகையாளர்கள், செய்திகளை முழுமையாகப் புரிந்துகொள்ளவும், முன்னிலைப்படுத்தவும், எடுத்துரைக்கவும் அழைக்கப்படுகின்றார்கள்.”

- சனவரி 22, பன்னாட்டு பத்திரிகையாளர்களுக்கான செய்தி

“இறை அருளின் நிகழ்வான யூபிலி ஆண்டில் கடவுள் நம்பிக்கையின் ஆற்றலை அதிகப்படுத்த சிறப்பாகச் செபிப்போம். செபத்தின் மதிப்பு, தேவை மற்றும் வல்லமையை இந்த யூபிலி ஆண்டில் நாம் கண்டறிவதற்காக இன்று முதல் செப ஆண்டானது ஆரம்பமாகின்றது.”

- சனவரி 21, மூவேளைச் செபவுரை

“இறைவார்த்தையுடன் நம்மை நாம் இணைத்துக்கொள்ளும்போது நமது வாழ்வு மறுபரிசீலனை செய்யப்படுகின்றது. நமது காயப்பட்ட நினைவுகள் குணமடைகின்றன. இறைவார்த்தை நமக்கு நலமளித்து நற்குணங்களில் நம்மை நிலைநிறுத்தி, மீட்கப்பட்ட கடவுளின் அன்புப் பிள்ளைகள் நாம் என்பதை எடுத்துரைக்கின்றது.”

- சனவரி 21, ஞாயிறு மறையுரை

“நீளமான செபங்கள், அழகான பாடல்கள் மட்டும் இருந்து, அயலாருடன் பொறுமையாக இருsக்கும் குணம் நம்மிடம் இல்லாவிட்டால், நாம் செய்யும் செபத்தினால் ஒரு பயனும் இல்லை. நமது முதல் அறிவிப்பானது நமது சான்றுள்ள வாழ்வாக இருக்க வேண்டும்.”

- சனவரி 20, அருங்கொடை உறுப்பினர்களுக்கான செய்தி

Comment