No icon

திருத்தந்தையின் முழக்கம்

நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள், மேலும் சுற்றறிக்கைகளின் இரத்தினச் சுருக்கம்

“மானுடவியல் ஒன்றே முதன்மையான பணி. அறிவியல் மற்றும் தொழில் நுட்பங்களை ஒருங்கிணைப்பதன் வழியாக, மனிதனின் குறைக்க முடியாத தனித்தன்மையினை அங்கீகரிக்கின்ற மற்றும் ஊக்குவிக்கின்ற திறனையும், அதனை வளர்க்கும் கலாச்சாரத்தையும் மேம்படுத்த வேண்டிய சவால் நமக்கு உள்ளது.”

- பிப்ரவரி 12, திருப்பீட வாழ்வு கழகத்திற்கான செய்தி

“உறுதியான தன்மை, உடனிருப்பு, சந்திப்பு, நேரம், இடம் ஆகியவை அன்பிற்கு மிக முக்கியமான தேவைகள். இயேசுவைப் போல குறைவான வார்த்தைகள்; ஆனால், உறுதியான செயல்பாடுகள் கொண்டு வாழ வேண்டும்.”

- பிப்ரவரி 11, ஞாயிறு மூவேளை செப உரை

“நோயுற்றிருக்கும்போது நமக்கு மிக முக்கியமாகத் தேவைப்படுவது நம்மை அன்பு செய்பவர்கள் மற்றும் நலமளிப்பவர்களின் உடனிருப்பும், இதயத்தில் கடவுளின் அருகிருப்பும் மட்டுமே.”

- பிப்ரவரி 11, ஞாயிறு மறையுரை

“பொதுநன்மைக்காக உழைக்கும் பணியாளர்கள் அனைவரும், மனிதகுலத்திற்கான நல்ல பணியாளர்கள், சமூகத்தில் அமைதியை உருவாக்குபவர்கள்.  தேவையில் இருப்பவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என அனைவரையும் காக்கும் பொறுப்பு கொண்டவர்கள்.”

- பிப்ரவரி 10, வத்திக்கான் பொது  பாதுகாப்புத் துறை குறித்த செய்தி

“உலக ஆயர்கள் மாமன்றத் தயாரிப்பு மற்றும் கொண்டாட்டத்தின்போது, திரு அவையில் பெண்களின் குரலுக்கு நாம் போதுமான அளவு செவிசாய்க்கவில்லை என்பதையும், அவர்களிடமிருந்து திரு அவை இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் உணர்ந்தோம்.”

- பிப்ரவரி 9, அகில உலகத் திரு அவைக்கான செய்தி

Comment