No icon

மோனிந்திர குமார் நாத்

உரிமைப்பாதுகாப்பு வேண்டும் - பங்களாதேஷ் சிறுபான்மையினர்

அக்டோபர் 22 ஆம் தேதி, சனிக்கிழமை பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில், HBCUC  என்னும் இந்து, புத்த, கிறிஸ்தவ ஒன்றிப்புப் பேரவை சார்பில் நடைபெற்ற ஒருநாள் உண்ணாநோன்புப் போராட்டத்தில் பங்கேற்றுப் பேசியபோது அப்பேரவையின் இணைச்செயலர் மோனிந்திர குமார் நாத் இவ்வாறுக் கூறியுள்ளார்.

 2018 ஆம் ஆண்டுத் தேர்தலில் அவாமி லீக் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற ஷேக் ஹசீனா என்பவரின் தலைமையில் நடந்து கொண்டிருக்கும் தற்போதைய ஆட்சி, பிரிவினைகளை வளர்த்து வருகின்றது எனவும், சிறுபான்மையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் எந்தவிதமான முயற்சியும் எடுக்கவில்லை எனவும் மோனிந்திர குமார் நாத் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மையினர் பாதுகாப்பு, சிறுபான்மையினர் தேசிய ஆணையம், சமத்துவமின்மை ஒழிப்பு, பழங்குடியினருக்கான ஆணையம், சிட்டாகாங் மலைப்பாதை, அமைதி ஒப்பந்தம் என்பன போன்ற பல தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றுகூட நிறைவேற்றப்படவில்லை எனவும், சிறுபான்மையினரின் ஆலயங்கள், 180 வீடுகள் மற்றும் 50 வணிக நிறுவனங்கள் தாக்கப்பட்டு, இந்து சிறுபான்மையினர் 3 பேர் மரணமடைந்தும் 300 பேர் காயமுற்றும் மேலும்  இழிவுபடுத்தப்படுகின்றனர் என்றும் மோனிந்திர குமார் நாத்  கூறியுள்ளார்.

Comment