No icon

பொறுப்புள்ளமேற்பார்வையாளர் நாம்

பொறுப்புள்ளமேற்பார்வையாளர் நாம்
உலகை குணமாக்கும்  என்ற தலைப்பில் புதிய ஒரு தொடரை தன் புதன் மறைக்கல்வி உரையில், இம்மாதம் துவக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர் கள், கொள்ளைநோய் காலத்தில் மனித மாண்பு குறித்தும், இந் நோய் நமக்கு கற்றுத்தந்துள்ள பாடம் என்ன என்பது குறித்தும், கடந்த வாரங்களில் விளக்கியதைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 26, புதனன்று,  இவ்வுலகம், அனை வருக்கும் பொதுவானது என்பது குறித்தும், கிறிஸ்தவ நம்பிக்கை குறித்தும், தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். முதலில், விவிலியத்தின் இணைச்சட்ட நூலிலிருந்து ஒரு பகுதி வாசிக்கப்பட்டது. அதன் பின் திருத்தந்தை யின் உரை தொடர்ந்தது. (வாசிக் கவும்: இணைச்சட்டம் 14:28-29; 15:1, 4-5)


மறைக்கல்வியுரை
அன்பு சகோதரரே, சகோதரிகளே, இன்றையக் கொள்ளை நோயின் சமூக விளைவுகளால் பலர் தங்கள் நம்பிக்கையை இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. வருங்காலம் குறித்த நிச்சயமற்ற ஒரு நிலையாலும், மன உளைச்சல்களாலும் துன்புறும் இன்றைய காலகட்டத்தில், இயேசு வழங்கும்நம்பிக்கை எனும் கொடையை வரவேற்குமாறு உங்களனை வரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த கொள்ளைநோய், நமக்கு,பல்வேறு சமுதாயப் பிரச்சனை களை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது, குறிப்பாக, இவ்வுலகில் காணப்படும் சரிநிகரற்ற தன்மையை. சிலரால், வீட்டிலிருந்தே வேலை செய்ய முடிகிறது, பலரால், அதுபோல் முடிவதில்லை. சில சமுதாயங்களில், குழந்தைகள், கணனி தொலைத்தொடர்புகள் வழியாக, தங்கள் கல்வியைத் தொடரமுடிகிறது, ஆனால், பலருக்கு, அது சாத்தியமில்லை. இன்று நாம் காணும் சரிசமமற்ற நிலைகளின் அறிகுறிகள், ஒருசமூக நோயின் வெளிப்பாடாக உள்ளன. ஆம், இது, நோய்வாய்ப்பட்ட பொருளாதாரத்திலிருந்து வரும் ஒரு தொற்றுக் கிருமி. அடிப்படை மனித மதிப்பீடுகளைக் குறித்து அக்கறை கொள்ளாத, அதேவேளை, சரிசம மற்ற பொருளா தார வளர்ச்சியின் கனியே இது.


இன்றைய உலகில், ஒரு சிலர் கைவசம் வைத்திருக்கும் செல்வத்தின் மதிப்பு, ஏனைய மக்கள் அனைவரின் சொத்துக் களை விட அதிகம். இந்த அநீதி,வானத்தை நோக்கி குரலெழுப்பு கிறது. இறைவன், இவ்வுலகம் எனும் தோட்டத்தைப் படைத்து, நம்மை, பொறுப்புள்ள மேற் பார்வையாளர்களாகவே நியமித்தார்.
இந்த தோட்டத்தின் கனிகள், அனைவருக்கும் பொதுவானதாக, அனைவராலும் பகிரப்படுவதாக இருக்கவேண்டும். ஆனால், சில எல்லைகளையும், கட்டுப்பாடு களையும் தாண்டிச்சென்று, இவ்வுலகை சுரண்டியதால், பல்லுயிர்களின் இனப்பெருக்க இழப்பிற் கும், தட்பவெப்ப நிலை மாற்றத்திற்கும், கடல்மட்ட உயர்வு, மழைக்காடுகள் அழிவு ஆகியவற்றுக்கும் நாம் காரணமாகியுள் ளோம். சமூக சரிசமமற்ற தன்மைகளும், சுற்றுச்சூழல் அழிவும்ஒன்றோடொன்று இணைந்துசெல்வதுடன், ஒரே ஆதாரத்தை யும் கொண்டுள்ளன. உடன்வாழ் சகோதரர், சகோதரிகளையும், இயற்கையையும், ஏன், கடவுளையும்கூட, தங்கள் சொத்தாக வைத்துக்கொண்டு அதிகாரம் செலுத்த விரும்பும் பாவத்தின் விளைவே இது. படைப்பின் நோக்கம் இது வல்ல.


அநியாயமாகச் சுரண்டப் படுவதற்கென்று இவ்வுலகம் படைக்கப்படவில்லை. பல இலட்சக்கணக்கான மக்கள், அத்தியாவசியப் பொருட்களின்றி வாடும்போது, சரிசமமற்ற தன்மைகளும், வேலைவாய்ப்புகளற்ற நிலைகளும்சமூக உறவுகளை அச்சுறுத்தும் போது, பேராசைகள் சுற்றுச் சூழலுக்கு அச்சுறுத்தலாக இருக்கும்போது,   நம்மால் மௌனம் காக்க முடியாது. ஆதிகால கிறிஸ்தவர்கள், தங்கள் உடன்வாழ் மக்கள் குறித்துகொண்டிருந்த அக்கறையும், பிறரன்பும் நமக்கு முன்னுதாரண மாகட்டும். உயிர்த்த கிறிஸ்துவழங்கும் அருளை முழுமையாகச்சார்ந்துள்ள நம் கிறிஸ்தவ நம்பிக்கை, இவ்வுலகைக் குணப்படுத்துவதற்கு பணியாற்றவும்,நீதியும் சரிசம நிலைகளும் நிறைந்த சமூக ஒழுங்கமை வைக் கட்டியெழுப்பவும் நம்மைத் தூண்டுவதாக.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ் தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Comment