No icon

குடும்ப ஆண்டு - 2021

குடும்ப ஆண்டு - 2021
மகிழ்வின் மந்திரம் - மனைவி என்பவர், துணை, மற்றும், தூண்
திருமணத்தைப் பற்றிப் பேசும்போது, இயேசு, தொடக்க நூல் இரண்டாம் பிரிவில் தம்பதியர் பற்றி கூறப்பட்டுள்ளதை தொடுவதைக் காண்கின்றோம்.

பின்பு, ஆண்டவராகிய கடவுள்,’‘ மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று; அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன்’’ என்றார்…….. கால்நடைகள், வானத்துப் பறவைகள், காட்டு விலங்குகள் ஆகிய எல்லாவற்றிற்கும் மனிதன் பெயரிட்டான்; தனக்குத் தகுந்த துணையையோ மனிதன் காணவில்லை. (தொ.நூ.2:18, 20)

தனக்குத் தகுந்த துணையை மனிதர் தேடுவதை இங்கு காண்கிறோம். வானத்துப் பறவைகள், கால் நடைகள், மற்றும் வன விலங்குகள் ஆகியவை, இணை இணையாக இருப்பதைக் காணும் மனிதர், தான் தனிமையாக நிற்பதாக உணர்கிறார். அவருடைய மௌனமே ஆயிரம் வார்த்தைகள் பேசுகின்றன.

மனைவியை அடைகிறவன் உடைமையைப் பெறுகிறான்; தனக்கு ஏற்ற துணையையும் ஆதரவுதரும் தூணையும் அடைகிறான் (சீராக் 36:24) என்று சீராக் நூல் கூறுவதுபோல், தனக்கு ஏற்ற துணைக்காகவும், ஆதரவு தரும் தூணுக்காகவும் ஏங்குகிறான் முதல் மனிதன். இறை அன்பின் பிரதிபலிப்பை உள்ளடக்கியதாக இந்த இரு துணைகள், ஒருவருக்கொருவர் ஆதரவுதரும் தூணாக இணைவதே திருமணம்.

Comment