No icon

மறைக்கல்வியுரை

ஆன்மீகச் சிந்தனைகளைப் பேணி வளர்த்தல்

செப்டம்பர் 07 ஆம் தேதி, புதன் காலையில் புனித பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு புனித இலெயோலா இஞ்ஞாசியாரின் வாழ்வை மையப்படுத்தி, தெளிந்து தேர்தல் சீராக்கின் ஞானம் நூலிலிருந்து (சீஞா 6 : 18-19) இறைவார்த்தை வாசிக்கப்பட்ட பிறகு மறையுரை வழங்கினார்.

புதன் பொது மறைக்கல்வியுரையிலும், தெளிந்து தேர்தல் குறித்த நம் சிந்தனையைத் தொடர்வோம். இதற்கு ஒரு வலுவான சான்றைக் குறிப்பிடுவது உதவியாக இருக்கும். நம் வாழ்வின் அர்த்தம் மற்றும் வாழும் முறை குறித்து நல்ல தீர்மானங்கள் எடுக்கும் நடைமுறையில் புனித இலெயோலா இஞ்ஞாசியாரின் சான்று எவ்வாறு உதவும் என்பது குறித்து இன்று சிந்திப்போம். இஞ்ஞாசியார் இளம் படைவீரராக இருந்தபோது போரில் அவரது கால் படுகாயமடைந்தது. அதற்கு அவர், அவரது இல்லத்தில் நீண்ட காலமாகச் சிகிச்சை பெற்றுவந்தார்அக்காலக்கட்டத்தில், அவர் விரும்பி வாசிக்கும் வீரச்செயல்கள் பற்றிய நாவல்களை (புதினங்களை) அவரால் வாசிக்க இயலவில்லை. புனிதர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய நூல்கள் மட்டுமே அவரிடம் இருந்தன. அவற்றை முதலில் விருப்பமில்லாமல் வாசித்தாலும், பின்னர் அவற்றை வாசிக்க வாசிக்க, புனிதர்களின் கதைகள் அவருக்கு நிலைத்த மகிழ்வை, மற்றும் ஆனந்தத்தை அளித்ததையும், அதேநேரம் மற்ற கதைகள் இறுதியில் அவரை வறட்சி, மற்றும் வெறுமையிலேயே விட்டதையும் உணரத் தொடங்கினார். இந்த உள்தூண்டுதலே, இறைவேண்டல், மற்றும், தெளிந்து தேர்வு செய்வதற்கு தொடக்கமாக இருந்தது. இதையே இஞ்ஞாசியார் தன் ஆன்மீகப் பயிற்சிகளில் பதிவுசெய்துள்ளார். அவற்றில், உலக மற்றும் ஆன்மீக எண்ணங்களுக்கு இடையே தெளிந்து தேர்வு செய்யவேண்டியதன் முக்கியத்துவம் பற்றி அவர் பேசுகிறார். ஆன்மீகச் சிந்தனைகளைப் பேணி வளர்த்து, கடவுளருளால் அவை நம் இதயங்களில் பக்குவமடைய அனுமதிப்பது பற்றி அவர் பேசுகிறார். பின்னர், பல நேரங்களில் கடவுள் எதிர்பாராத அடையாளங்களில் தம்மையே நாம் அறியச்செய்வதை, சரியான காலக்கட்டத்தில் செபத்தில் தெளிந்துதேர்வு செய்கிறோம். இது நம்மை மனமாற்றத்திற்கு இட்டுச்செல்கிறது, மற்றும், வாழ்வில் கடவுள் வகுத்துள்ள திட்டத்தை நமக்குக் காட்டுகிறது.

இறுதியில் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை அளித்தார்.

Comment