No icon

27 வது கிறிஸ்தவ பத்திரிக்கையாளர்களின் மாநாடு

இறைவாக்குரைக்கும் தகவல் தொடர்பாளர்களாக இருங்கள்

இறைவாக்குரைக்கும் தன்மைகொண்ட தகவல்தொடர்பாளர்களாக ஒவ்வொரு கத்தோலிக்க பத்திரிக்கையாளரும் இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு, சென்னை கீழ்பாக்கம் சிட்டடலில் நடந்த 27 வது கிறிஸ்தவ பத்திரிக்கையாளர்களின் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

இந்தியாவின் குடிமக்களாகிய நாம், நம் கண் எதிரே நடக்கின்ற சமூக, பொருளாதார, அரசியல், தொழில்நுட்ப மற்றும் மதம் சார்ந்த அநீதிகளை கண்டுகொள்ளாமல் இருக்கக் கூடாதுஎன்று இம்மாநாட்டிற்கு வந்திருந்த இந்திய கத்தோலிக்க பத்திரிகையாளர்களின் மன்றத்தின் மூத்தபத்திரிக்கையாளர் ஒருவர் கூறினார். இம்மாநாடானது 2022 டிசம்பர் 9 ஆம் தேதியிலிருந்து 11 ஆம் தேதி வரை நடைபெற்றது.

இம்மாநாட்டிற்கு வருகை தந்திருந்த 40க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள், முதன்மை ஆசிரியர்கள், தகவல் தொடர்பாளர்கள், இன்றைய காலத்தில் தகவல் தொடர்பானது கார்ப்பரேட் முதலாளிகளின் கையில் சிக்கிக்கொண்டு அநீதிக்கு துணை போகின்றன என்பதை பற்றி விவாதித்தனர்.

இம்மாநாட்டில் இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாமன்றத்தின் தகவல் தொடர்பு துறையின் தலைவரான ஆயர் ஹென்றி டிசோசா, இந்திய கத்தோலிக்க பத்திரிகையாளர்கள் மன்றத்தின் ஆன்மீக வழிகாட்டியான ஆயர் சால்வதோர் லோபோ, சென்னை மயிலை பேராயர் ஜார்ஜ் ஆண்டனி சாமி, சிறுபான்மையினர் நலத்துறையின் தலைவர் திரு பீட்டர் அல்போன்ஸ், சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி திரு சந்துரு, ஆசிய பத்திரிக்கை கல்லூரியின் தலைவர் சசிகுமார் ஆகியோர் பங்கு கொண்டு உரையாற்றினர்.

இம்மாநாட்டின் இறுதி நாளில் இந்திய கத்தோலிக்க பத்திரிகையாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை சென்னை மயிலை மறை மாவட்டத்தின் ஆங்கில இதழான நியூ லீடர் பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் அருட்பணியாளர் அந்தோணி பங்ராஸ் மற்றும் தமிழக கத்தோலிக்க ஆயர்கள் மாமன்றம் நடத்தும் நம் வாழ்வு வார இதழின் முதன்மை ஆசிரியர் அருட்பணியாளர் ஞானி அவர்களும் இனிதே ஏற்பாடு செய்திருந்தனர்.

Comment