No icon

திருப்பீட சமூகத்தொடர்பு துறையில் கன்னட மொழி

திருத்தந்தையின், வத்திக்கானின் மற்றும் திரு அவையின் செய்திகளை எடுத்துச் செல்லும் திருப்பீட சமூகத் தொடர்பு துறையின் 53-வது மொழியாக இந்தியாவின் கன்னட மொழி இணைக்கப்பட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. திரு அவைச் செய்திகளை உலகிற்கு எடுத்துச் செல்வதற்கென 1931-ஆம் ஆண்டு வத்திக்கானில் தொடங்கப்பட்ட வத்திக்கான் வானொலியில் 1965-ஆம் ஆண்டிலிருந்து இந்திய மொழிகளான இந்தி, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரு அவைச் செய்திகள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. தற்போது தனது சமூகத்தொடர்பு துறையில் மேலும் ஓர் இந்திய மொழியான கன்னடத்தைத் திருப்பீடம் இணைத்துள்ளது. இதனால் கன்னடத்தைத் தாய் மொழியாகக் கொண்ட ஏறக்குறைய மூன்றரைக் கோடி மக்கள் திரு அவைச் செய்திகளை வத்திக்கான் தலைமைப் பீடத்திலிருந்து தங்கள் தாய்மொழியிலேயே பெறும் வாய்ப்பைப் பெறுகின்றனர். கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரு உயர் மறைமாவட்டத்தின் ஒத்துழைப்புடன் திருப்பீடச் சமூகத்தொடர்பு துறையால் தொடங்கப்பட்டிருக்கும் இப்புதிய முயற்சி குறித்து திருத்தந்தைக்கு பெங்களூரு பேராயர் பீட்டர் மச்சாடோ நன்றியைத் தெரிவித்துள்ளார்திருப்பீடச் சமூகத் தொடர்பு துறையின் இணையதளத்தில், ஏப்ரல் 2-ஆம் தேதி செவ்வாய்கிழமை முதல் கன்னட மொழிச் செய்தித் தகவல் பக்கம் செயல்படத் தொடங்கியுள்ளது. தற்போது கன்னடம், இந்தி, தமிழ், மலையாளம் உட்பட 53 மொழிகளில் திருப்பீடத்தின் தகவல்கள் திருப்பீடச் சமூகத்தொர்பு இணையதளப் பக்கத்தின் வழி வழங்கப்பட்டு வருகின்றன.

Comment