No icon

சமூகக் குரல்கள்

“2022-ஆம் ஆண்டைக் காட்டிலும், கடந்த ஆண்டில் உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் எண்ணிக்கை 11.4 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதேபோல் 4,097 நபர்கள் தங்களுடைய மறைவுக்குப் பின்னர் உடல் உறுப்பு தானம் செய்வோம் என்று பதிவு செய்துள்ளனர். நிகழாண்டில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 32 நபர்கள் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர். மற்றொருபுறம், உறுப்பு தானம் வேண்டி காத்திருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. கடந்த ஆண்டில் 178 நபர்களின் உடலுறுப்புகள் தானம் பெறப்பட்டதில், 1,000 நபர்கள் பயன் பெற்றுள்ளனர்.”

- திரு. மா. சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்

பாடப்புத்தகங்களைத் தாண்டிய வாசிப்புப் பழக்கத்தை மாணவர்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். சமூகத்தில் நிலவும் குறைகளைச் சீர்செய்வதை மாணவர்கள் தங்கள் கடமையாக ஏற்று, கற்ற கல்வி மூலம் மாற்றத்தை நிகழ்த்த வேண்டும். மாணவர்கள் தங்கள் வாழ்க்கைப் பாதையை வடிவமைக்கவும், வாழ்வின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளவும் கல்லூரிக் காலம் அடித்தளமாக உள்ளது. இதைச் சிறப்பாக நிறைவேற்றுவதன் மூலம் வாழ்வை வெற்றிகரமானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் அமைத்துக்கொள்ள முடியும்.”

- திரு. வெ. இறையன்பு, முன்னாள் தலைமைச் செயலர்

“2023-ஆம் ஆண்டுக்கான ஊழல் கண்ணோட்ட குறியீடு தரவரிசைப் பட்டியலில் இந்தியாவுக்கு 93-ஆம் இடம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு 85-வது இடத்திலிருந்த இந்தியா, தற்போது பின்னடைவைச் சந்தித்துள்ளது. மொத்தம் 180 நாடுகளைக் கொண்ட இந்தப் பட்டியலில் ஊழல் குறைந்த நாடாகத் தொடர்ந்து 6-வது ஆண்டாக டென்மார்க் முதலிடம் பிடித்துள்ளது. அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெறும் ஊழல் தரவுகளின்படி இந்த அட்டவணை வெளியிடப்படுகிறது. 2022-ஆம் ஆண்டில் 85-வது இடத்தைப் பெற்ற இந்தியா, 2023-இல் 93-ஆம் இடத்துக்குப் பின்தங்கியுள்ளது. அந்த வகையில், ‘ஊழலுக்கு எதிராகக் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இந்தியாவில் நிகழவில்லைஎன்று இந்தச் சர்வதேச வெளிப்படைத் தன்மை என்ற தன்னார்வ அமைப்பு நிறுவனம்  குறிப்பிட்டுள்ளது.”

- சர்வதேச வெளிப்படைத் தன்மை என்ற தன்னார்வ அமைப்பு

Comment