No icon

சமூகக் குரல்கள்

நாடு முழுவதும் 88.4 இலட்சம் மாற்றுத் திறனாளிகள் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்துள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சாய்வுத் தளங்கள், சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். 40 சதவிகித இயலாமை உடைய மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்களிக்க முடியும். இதுபோல 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களாகப் பதிவு செய்துள்ள 82 இலட்சம் பேர்களும் வீட்டிலிருந்தபடியே வாக்களிக்க முடியும். இந்த வாய்ப்பைத் தெரிவு செய்பவர்களுக்கு அவர்களின் வீட்டுக்கே ‘12டிபடிவம் அனுப்பி வைக்கப்பட்டு வாக்களிக்க வசதி ஏற்படுத்தித் தரப்படும்.”

- திரு. ராஜீவ் குமார், தலைமைத் தேர்தல் ஆணையர்

வெறுப்புணர்வு, கொள்ளை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு மற்றும் அட்டூழியங்களுக்கு எதிராக இந்திய மக்களாகிய நாம் ஒன்றிணைந்து போராடுவோம். தற்போது நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் மக்களாட்சியையும், சர்வாதிகாரத்திடம் இருந்து அரசமைப்புச் சட்டத்தையும் காப்பாற்றுவதற்கான கடைசி வாய்ப்பாகும்.”

- திரு. மல்லிகார்ஜூன கார்கே காங்கிரஸ் தலைவர்

நாட்டின் முதல்நிலை பெருநகரங்கள் முதல், 4-வது நிலை நகரங்கள் வரை இணைய வழியில் பொருள்களை வாங்குவோரின் விருப்பத் தேர்வாகக் கைப்பேசி செயலிகளே உள்ளன. இணையவழி நுகர்வோரில் 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் அத்தகைய செயலிகளையே பயன்படுத்துகின்றனர். பொருள்களைத் தேடித் தேர்ந்தெடுப்பதில் உள்ள எளிமை, அனைத்துத் தரப்பினரும் விரைவில் புரிந்துகொண்டு பயன்படுத்துவதற்கேற்ற வடிவமைப்பு, உள்ளூர் மொழிகளைப் பயன்படுத்தினாலே போதும் என்ற வசதி போன்ற காரணங்களே இணையவழி வர்த்தகத்தை வாடிக்கையாளர்கள் விரும்புவதற்குக் காரணங்களாக அமைந்துள்ளன.”

- ‘Price waterhouse Coopers (PwC) India’ ஆய்வறிக்கை

Comment