No icon

சமூகக் குரல்கள்

சர்வதேச அளவில் அறிவியல், தொழில்நுட்பத் துறையில் வியக்கத்தக்க அளவில் செயற்கை நுண்ணறிவு (A.I.) தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வருகிறது. மருத்துவம், அறிவியல், பொறியியல், மேலாண்மை, சட்டம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களை ஒருங்கிணைத்து A.I. தொழில்நுட்பத்தைப் பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். மேலும், மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிராக A.I. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தடைவிதிக்க வேண்டும்.”

- திரு. பி. சத்தியநாராயணன், கல்வியாளர்

பாராட்டுகள் நம் இல்லங்களில் இருந்து தொடங்கட்டும். நல்ல பேச்சோ, எழுத்தோ, இசையோ, வேறு திறமைகளோ... எதுவாக இருந்தாலும் பாராட்டக் கற்றுக் கொள்ள வேண்டும். பாராட்டுவதற்கு மனது விசாலமாக இருக்க வேண்டும். பாராட்டுகள் பன்னீர்த் துளிகளாய், மழைச்சாரலாய், மலர் மணமாய், தழுவும் தென்றலாய், மெல்லிய இசையாய் நமக்கு மனத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மனத்தில் நீர் வார்க்கும். பட்டுப்போன மனம் துளிர் விடும்.”

- திருமதி. பேரா. வெ. இன்சுவை, எழுத்தாளர்

Comment