No icon

மருத்துவ உதவிகளின்றிப் பிறக்கும் குழந்தைகள்!

 2024-ஆம் ஆண்டில் பிறக்கும் குழந்தைகளில் ஐந்தில் ஒரு குழந்தை, மருத்துவர் மற்றும் செவிலியர் இல்லாமலேயே உலகிற்கு வரும் என்றும், மேலும் சில குழந்தைகள் பிரசவ நேரத்தில் அவர்களின் அன்னையர்களுக்குக் கடுமையான ஆபத்துகளை ஏற்படுத்தும் என்றும்Save the Childrenஎனப்படும் உலகளாவிய குழந்தைகள் நல அமைப்பானது, மே 3-ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது. 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஆபத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் சிறுமிகள் மற்றும் சிறுவர்களைக் காப்பாற்றவும், அவர்களுக்கு எதிர்காலத்தை வழங்கவும் போராடி வரும் இவ்வமைப்பானது, அந்தந்த நாட்டின் அரசு இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளது.

Comment